வெள்ளி, 20 ஜூன், 2014

செய்நன்றி கூறும் தருணம்


இந்த மாதத்துடன் நமது தளம் ஆரம்பித்து ஒரு வருடமாகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து இருந்தோம். அந்த மகிழ்ச்சியை எமக்கு ஆதரவளித்த நண்பர்களுடன் சேர்ந்து பகிர விரும்புகிறோம்.

தமிழ் இணையத்தில் எங்கு தேடினாலும், சினிமா செய்திகள் தான் குவிந்து கிடக்கின்றன. அதில் நாம் முதலீடு பற்றி எழுதி வெற்றி பெற முடியுமா? என்று நினைத்தே இரண்டு, மூன்று வருடங்கள் ஓடி விட்டன. 

அதன் பிறகு தான் எழுத ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட 2800 நண்பர்கள் தற்போது தொடர்வது துறை சம்பந்தமான பதிவுகளுக்கு தமிழில் மிகுந்த ஆதரவு இருப்பதையே காட்டுகிறது. தற்போது காலையில் எழுந்தவுடனே பதிவு எழுதும் அளவு உற்சாகத்தை தந்துள்ளது.ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி! 



இந்த சமயத்தில் சில நண்பர்கள் பேஸ்புக்கில் பதிவைப் பகிருவது , ப்ளாக்கில், மின் அஞ்சலில் கருத்துக்கள் கூறுவது என்று பல விதங்களில் நமது தளம் வளரக் காரணமாக இருந்தார்கள். அவர்களில் அதிக அளவு உதவி செய்த நண்பர்களுக்கு ஒரு சிறிய வெகுமதியை அளிக்கிறோம். 
Thiru. Jeeva Jeeva Thiru. Ganesan. R 
Thiru. Periyakaruppan Thiru. Subramanian Valliappan
Thiru. A.Sharath Kumar Thiru. Niyamat Babu 
Thiru. Kamala Kkannan Thiru. Balamurali Moni
Thiru. Hema chandran Thiru. Pagalavan Pagal
Thiru. Parthiban Shanmugam Thiru. Thanavel Rajangam
Thiru. Muthu Raj Thiru. Jeyaseelan Matheswaran
Thiru. Senthil Kumar Thiru. Nadimuthu Vinayagamoorthy

மேலே பட்டியலில் உள்ள நண்பர்கள் எமது 900 ரூபாய்க்கு வழங்கப்படும் போர்ட்போலியோ சேவையை 600 ரூபாய்க்கு ஒரு வருட காலத்திற்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பட்டியலில் சில நண்பர்கள் ஏற்கனவே போர்ட்போலியோவைப் பயன்படுத்தி வருபவர்கள். அவர்கள் நான்கு பங்கு பரிந்துரைகளை விவரங்களுடன் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். 

எம்மைத் தொடர்பு கொள்ளும் போது இந்த கூப்பனை மட்டும் குறிப்பிடுங்கள். நமக்கு எளிதாக புரிந்து விடும். 
கூப்பன் - REV14JREW

பிரதிபலன் பாராது தாங்கள் செய்த உதவிக்கு எமது சிறிய அன்பளிப்பு!

***

அடுத்து, எமது தளத்தின் கட்டண சேவையை பயன்படுத்தி வருபவர்களுக்கு ஒரு சிறிய அன்பளிப்பு. 

நாம் பரிந்துரைத்த பங்குகள் சில எதிர்பார்த்த விலைகளை அடைந்துள்ளன. அதனை மாற்றம் செய்வதற்கு ஏதேனும் ஒரு பங்கு பரிந்துரையை எம்மிடம் இலவசமாக  பெற்றுக் கொள்ளலாம். அதற்கு 200 ரூபாயை செலுத்த வேண்டிய தேவையில்லை. ஜூலை போர்போலியோவில் இணைந்த நண்பர்களும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த கூப்பனை ஒரு வருட காலத்திற்குள் பயன்படுத்தி இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம்..
கூப்பன் - REV14JDYN

***

அடுத்து, எம்மை வளர்த்த தமிழ் சமுதாயத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய தருணம். ஆமாம். இது வரை கட்டண சேவையின்  மூலம் எமக்கு கிடைத்த வருமானத்தின் 5% பகுதியினை இணைய தமிழ் வளர்ச்சி, தமிழ் குழந்தைகள் கல்வி, ஆதரவற்றவர்களுக்கு உதவி என்ற ஏதேனும் ஒன்றிற்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறோம். கொடுக்கப்பட்டவுடன் விவரங்களைப் பகிர்கிறோம்.

"பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது"

இதே ஆதரவு என்றும் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். 

அடுத்த வருடத்திற்குள் இலவசமான பங்கு விலை கால்குலேட்டர் ஒன்றையும், தளத்தின் முக்கிய பதிவுகளை ஒருங்கிணைத்து இ-புத்தகம் ஒன்றையும் வழங்கவும் முயற்சியை மேற்கொள்கிறோம்.

பங்கு விலை கணக்கிடுவது சம்பந்தமாக எமது முந்தைய பதிவில் ஏராளமான சந்தேகங்கள் வருகின்றன. நாளை அதனை எளிமைப்படுத்தி தொடர்கிறோம்.

English Summary:
Thanks to my readers for the full support to make successful year completion.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

8 கருத்துகள்:

 1. First, Congratulation for the completion of successful one year and wish muthaleedu get more successful years ahead...

  Second your intention to appreciate the supporters and offer something to the development of the tamil society shows your real character which will lead you more success as most tamils like this attitude...

  பதிலளிநீக்கு
 2. Dear Mr. Rama,

  Congrats for this achievement... We wish see the same message on 2023 (10th Year) also. Thanks for your great effort. I missed your June Portfolio... So, sure to get your July14 soon and once again thanks for your Gift for me....

  Regards,

  Senthil Kumar

  பதிலளிநீக்கு
 3. அன்பு நண்பரே!

  தங்களின் தயாள குணம் குறித்தும் அறிந்ததில் மகிழ்ச்சி!

  தங்களின் உள்ளம் போல் தங்கள் வாழ்வும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.....

  ஐந்து ஆறு மாதங்களுக்கு முன் ஒரு பதிவில், எழுதுவதற்கு நேரம் கிடைப்பதில்லை என்று எழுதிய அதே ராமஸ்வாமிக்கு, தினசரி எழுதும் ஆர்வத்தைத் தூண்டியவர்களில் நானும் ஒருவன் என்பதிலும் மகிழ்ச்சியே!!

  தங்கள் பங்கு பரிந்துரைகளை நான் பார்க்கும் விதமே, என்னுடைய நம்பிக்கைத் தூண்டுகோலாகத் தான்...

  தங்களின் சேவை மென்மேலும் விரிவடைந்து லட்சக் கணக்கானோர்கள் பயனடையட்டும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வார்த்தைகள் உண்மையிலே மிகவும் உற்சாகப்படுத்துகின்றன. தங்கள் ஆதரவு தொடர வேண்டும்!

   நீக்கு