ஞாயிறு, 29 ஜூன், 2014

Cyclical பங்குகளை ட்ரேடிங் செய்வது எப்படி? (ப.ஆ - 22)

"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.

"CYCLICAL STOCK" என்பது பங்கு வர்த்தகத்தில் இது ஒரு முக்கியமான வாரத்தை. பொருளாதார தேக்க பிரச்சினைகள் வரும் போது இந்த கட்டுரை மிகவும் பயனாக இருக்கும்.


சில பங்குகள் அல்லது சில துறைகள் நாட்டின் பொருளாதாரத்தோடு மிகவும் ஒன்றிப் போய் இருக்கும். அதாவது, பொருளாதாரம் உயரும் போது இந்த நிறுவனங்களின் லாபங்கள் உயரும். கீழ் வரும் போது இவைகளும் கீழ் வந்து விடும்.

இந்த பங்குகளைத் தான் CYCLICAL STOCK என்று அழைக்கிறார்கள்.


உதாரனத்திற்கு, நாட்டின் பொருளாதார தேக்கம் வரும் போது, மக்களிடம் பணம் புரளுவது குறைவாக இருக்கும். அதனால் கார் போன்ற வாகனங்கள் வாங்குவதைத் தள்ளிப் போடுவார்கள். இது நேரடியாக வாங்கனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களைப் பாதித்து லாபத்தைக் குறைத்து விடும். இதனால் இதன் பங்கு விலைகளும் படு வீழ்ச்சியில் இருக்கும்.

இந்த பங்குகளை கண்டிபிடிப்பது என்பது மிக எளிது.

மனிதன் உணவு, தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது,  குழந்தைகளுக்கு கல்வி கொடுக்காமல் இருக்க முடியாது. நோய்க்கு மருந்து வாங்காமல் இருக்க முடியாது. இந்த மாதிரியான அத்தியாவசிய தேவைகள் சம்பந்தமான பங்குகள் பொருளாதாரம் என்ன தான் கீழே சென்றாலும் தேவை இருந்து கொண்டு தான் இருக்கும். இவைகள் Contrast cyclical stocks என்று அழைக்கப்படுகின்றன.

ஆனால், பணக் கஷ்டம் வரும் சமயத்தில் கார் வாங்காமல் பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம். விமானத்தில் போகாமல் ரயிலில் பயணிக்கலாம். ஆடம்பர ஆடைகள், நகைகள் வாங்குவதைத் தவிர்க்கலாம். உணவகங்களில் சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். இவ்வாறு சில பங்குகள் நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் சார்ந்து இருக்கும்.

அதனால் எப்பொழுது யாராவது RECESSION என்று சொன்னவுடனே இந்த பங்குகளை விட்டு வெளியேறுவது நல்லது. இல்லாவிட்டால், தேக்கத்தில் கிடைத்த லாபங்களும் போய் அகல பாதாளத்தில் சென்று விடும். இந்த பங்குகளில் அதிக லாபத்தில் இருப்பவர்கள் உடனே விற்று விடுவது நல்லது.

தற்போதைய நிலையில் தேக்கங்கள் என்பது குறைந்தது இரண்டு ஆண்டுகளாகவது இருக்கின்றன. அதனால் புதிதாக ஐந்து ஆண்டுகள் என்ற மிக நீண்ட கால முதலீட்டை நினைத்து முதலீடு செய்பவர்களுக்கு இது ஒரு வாங்குவதற்கான வாய்ப்பு. குறையும் போது வாங்கிக் கொண்டே வரலாம்.

ஆனால் இந்த தேக்கங்களை துல்லியமாக கண்டறியும் திறமை நம்மிடம் இருந்தால் நாம் தான் உலக வங்கிக்கு இயக்குநராகி இருப்போம்.

அவ்வளவு எளிதாக இல்லாத இந்த விசயத்தில் போர்ட்போலியோ முதலீடுகளை செய்து கொண்டிருப்பவர்கள் முழுமையாக விற்று விடாமல், இந்த துறைகளின் முதலீட்டு சதவீத்த்தைக் குறைத்து அத்தியாவசிய பங்குவளின் சதவீதத்தைக் கூட்டிக் கொள்ளலாம். இதனால் மொத்த முதலீடும் பாதுகாப்பாக மாறி விடும்.

உதாரணத்திற்கு, கடந்த வருடம் எமது போர்ட்போலியோவில் ஆட்டோவிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது டைனமிக் போர்ட்போலியோவில் அதன் சதவீதத்தைக் கூட்டி உள்ளோம்.

இந்த விசயங்களில் நாமும் கொஞ்சம் டைனமிக்க்காக இருக்க வேண்டியுள்ளது.





"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு காணலாம்.

English Summary:
Cyclical stocks are the stocks whose price is affected by the overall economy of country. These stocks are more safe in long term investment and easy to predict the future.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக