ஞாயிறு, 22 ஜூன், 2014

வேகமாக தனியார் மயமாக்கப்படும் அரசு நிறுவனங்கள்

பங்குச்சந்தையை கண்காணிக்கும் செபி அமைப்பு மூன்று வருடங்களுக்குள் அணைத்து அரசு நிறுவனங்களின் பங்குகளில் 25% பொது மக்களிடம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.


அதாவது அரசு தன்னிடமுள்ள பங்கு உச்ச வரம்பை 75% என்ற வரையறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். மீதியை தனியாரிடம் விற்று விட வேண்டும் என்பதே நோக்கம். தற்போது இந்த உச்ச வரம்பு 90% என்று உள்ளது.

ஜவஹர்லால் நேரு அதிக சோசியலிஸ்ட் கொள்கை உடையவர். அதனால் அவர் காலத்தில் தான் அதிக அளவு பொது துறை நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அவற்றில் சில தான் கோல் இந்தியா, என்.எல்.சி., பெல் போன்றவை.

அதன் பிறகு பார்த்தால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் மிகக் குறைவே. குறைவு மட்டுமல்லாமல், அவர் உருவாக்கிய நிறுவனங்கள் மிக வேகமாக விற்கப்படுகின்றன.தற்போது அரசு செபியைக் காரணமாக வைத்து மிக வேகமாக பொதுத்துறை நிறுவனங்களை விற்க முயற்சி செய்வது போல் தெரிகிறது. ஆனால் இது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

ஏற்கனவே கடந்த வருடம் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 90% என்ற உச்ச வரம்பைக் காட்டி 5% பங்குகளை விற்க முயற்சி செய்தது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து கிளம்பிய எதிர்ப்பு காரணமாக 450 கோடிக்கு தமிழ்நாடு அரசிடமே பங்குகளை விற்றது.

செபி அரசு நிறுவனங்களையும், தனியார் நிறுவனங்களையும் ஒரே போல் பார்ப்பது சரியானது அல்ல. அரசு நிறுவனங்கள் என்பது பொதுவாக சேவை தொடர்பான நிறுவனங்கள். அங்கு தனியார் நிறுவனங்களைப் போன்று லாபம் என்பது முதன்மை கிடையாது. அதனால் இரண்டிற்கும் ஒரே உச்ச வரம்பு போன்ற விதி முறைகள் வைப்பது சரியாக அமையாது.

நிலக்கரி, உலோகம் போன்ற நாட்டின் இயற்கை வளங்கள் அரசின் கையில் இருப்பதே நல்லது.

கோல் இந்தியா போன்ற அரசு நிறுவனங்களின் மட்டமான செயல்பாடுகள் தான் அரசு நிறுவனங்களை விற்பதற்கு முக்கியமாக காரணமாக அமைகிறது.
ஆனால் அவற்றின் செயல்பாடுகளைத் திருத்துவது தான் சரியாக இருக்குமே தவிர, மொத்தமாக விற்பது சரியாக இருக்காது.

சிதம்பரத்தின் பேட்டியில் கேட்ட நியாபகம். ஏற்கனவே உள்ள பங்குகளை விற்று புதிதாக வாய்ப்புகளை தேடுவது தான் அறிவார்ந்த செயல் என்று சொல்லி இருந்தார். இது நல்ல செயல் திட்டம் தான்.

ஆனால் விற்ற பங்குகளை வைத்து எவ்வளவு புதிய நிறுவனங்களை ஆரம்பித்தார்கள்? என்பது தான் கேள்வி.. வெறும் செலவு செய்வதற்கும், கடன்களை அடைப்பதற்கும் அந்த பணம் பயன்பட்டால்...

கவுண்டமணி பாணியில் சொல்லலாம்.."நாட்டாமையா?" -> "ஒ..அந்த வாழ்ந்து கெட்ட குடும்பமா?"

ஆமாம். ஊர்ல பண்ணையார் குடும்பமும், இந்திய அரசும் ஒரே ஸ்டைலில் வாழ்வதாகக் கருதிக் கொள்ளலாம்.

English Summary:
SEBI pushes Govt to sell the public companies shares. Govt. is collecting money by selling company shares.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. The purpose of starting Public Enterprises was to serve the people in those sectors where the investment required was more and the expected yield was very less & slow. That reasoning is now changed as can be seen from private sectors' participation in infrastructures including power, road, port, refineries, railways etc. Hence if 25% stake is sold to private enterprises who can manage and guide the public enterprises well, it would be acceptable to some extent; but how this 25% shares of public enterprises held by public is going to help these public enterprises? Intention is clear i.e. to make money from the public enterprises for government use.....

    பதிலளிநீக்கு