ஞாயிறு, 15 ஜூன், 2014

இந்திய பங்குச்சந்தையின் அடுத்த கட்ட நகர்வு

நேற்றைய பதிவில் ஈராக் தொடர்பான விவகாரங்களால் பங்குச்சந்தையில் ஏற்படும் விளைவுகள் பற்றி எழுதி இருந்தோம். இது ஒரு உலகளாவிய எதிர்மறையான செய்தி தான். ஓரிரு மாதங்கள் கூட இதன் தாக்கம் இருக்கலாம்.


ஆனால் இதே நேரத்தில் இந்திய பங்குச்சந்தையில் சில நேர்மறையான செய்திகளையும் புறந்தள்ள முடியாது. அதனால் நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த இறக்கங்களை பங்குகளை வாங்கும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடந்த மாதத்தின் இந்திய தொழில் துறைக்கான தரவுகள் வந்து கொண்டிருக்கின்றன.  கடந்த  வருடத்தைக் காட்டிலும் ஏற்றுமதி 12% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி 11.4% குறைந்துள்ளது. தொழில் துறை வளர்ச்சி 3.4% அதிகரித்துள்ளது. ஆக, தொழில் வளர்ச்சி நன்றாகவே உள்ளது.

உணவு பணவீக்கம் தான் இராக்கை விட முக்கிய பிரச்சினை

வளர்ச்சி நன்றாக இருந்தால், சந்தை எதிர்பார்ப்பது ரிசர்வ் வங்கியிடம் சில வட்டிக் குறைப்புகள் தான். ஆனால் உணவு பணவீக்கம் இன்னும் கட்டுக்குள் வராததும், இந்த வருடம் எதிர்பார்க்கப்படும் எல்னினோ வறட்சியும் வட்டிக் குறைப்புக்கு சாத்தியம் இல்லை என்பதைக் காட்டுகிறது. எல்னினோ வறட்சியால் 10% அளவு உணவு உற்பத்தி குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாம் வருண பகவான் கையில் தான் உள்ளது.

அதன் பிறகு சந்தை அதிகம் எதிர்பார்த்து இருப்பது இந்த வருட பட்ஜெட் தான். அதில் கட்டமைப்பு, எரிசக்தி, நிலக்கரி, விவசாயம், உலோகம் போன்ற துறைகளுக்கு அதிக ஊக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இவற்றில் 36000 கோடி அளவு அரசின் பங்கு குறைப்புகள் நடக்கும் என்றும் தெரிகிறது. இந்த துறைகளில் போர்ட்போலியோ சதவீதத்தை அதிகமாக வைத்து இருப்பது நல்ல லாபத்தைக் கொடுக்கலாம்.

இன்போசிஸ் புதிய சிஇஒ நியமிக்கப்பட்டுள்ளது சைக்கலாஜிக்கலாக பங்குதாரர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஒரு நல்ல மாற்றத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும். ஆனால் நிறுவனத்தின் உண்மையான நிதி நிலை மாற்றங்கள் வருவதற்கு குறைந்தது இரண்டு வருடங்களாகவது தேவை. அதனால் தற்போதைய நிலையில் இன்போசிஸ் வாங்குமளவு தெளிவில்லை.

எமது ஏப்ரல், ஜூன் மாத போர்ட்போலியோக்கள் தேர்தலை அடிப்படையாக வைத்து இருந்தது. தேர்தல் முடிவுகள் நன்றாக வந்ததால் குறைந்த காலத்தில் நல்ல ரிடர்ன் கொடுத்தது. சில பங்குகள் எதிர்பார்த்த விலையை விட மிக அதிகமாக சென்று விட்டதால் லாபத்தை உறுதி செய்யுமாறு மின் அஞ்சல் அனுப்பி இருந்தோம். நண்பர்கள் தொடர்கிறார்கள் என்று நம்புகிறோம்.

இந்த முறை நமது ஜூலை போர்ட்போலியோ பட்ஜெட்டை அடிப்படையாக வைத்தே இருக்கும். அதற்கேற்ப, ஈராக் பிரச்சினையும் வந்து சில பங்குகளை மலிவான விலையில் வாங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அதனால் அதே அளவு ரிடர்ன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

கீழே உள்ள இணைப்புகளில் அல்லது muthaleedu@gmail.com என்ற முகவரியில் விவரங்களைப் பெறலாம்.

English Summary:
Indian share market is next depending on Monsoon and Budget. Inflation is big worry for Indian economy which keeps interest rates higher by RBI.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக