புதன், 9 ஜூலை, 2014

மொபைல் மார்க்கெட்டை இழக்கும் சாம்சங்?

தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம் சாம்சங். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம். தற்போதைய நிலவரத்தில் மொபைல் சந்தையில் 32% அளவைக் கொண்டு முதலிடத்தை பெற்றுள்ளது.

தனது கேலக்ஸ்சி மாடல்கள் மூலம் ஸ்மார்ட் போன் சந்தையில் தனி ஆளாக ஜொலித்து வந்தது. அதே மாடல்கள் மூலம் நோக்கியாவிடம் இருந்தும் சந்தையைப் பிடித்தது.

வளைந்து கொடுக்கும் மொபைல், ஜொலிக்குமா? 

ஆனால் தற்போது அதன் 'மோனோபோலி' நேரம் சரியத் துவங்கியுள்ளது. இந்த வருடம் சாம்சங் நிறுவனம் தமது லாப விகிதம் குறையலாம் என்று அறிவித்துள்ளது.

கேலக்ஸ்சி S2,S3,S4,S5 என்று ஒரே மாதிரியான மாடல்கள் வந்தது பயனாளிகளுக்கு ஒரு வித சலிப்பைத் தந்து இருக்கலாம். விலையும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் அதிகம். இதனால் கடந்த நான்கு வருடங்களாக பிடித்து வைத்து இருந்த பிடி தளர ஆரம்பித்துள்ளது.

அது போக சீனாவின் Xiaomi, இந்தியாவின் கார்பன், மைக்ரோமேக்ஸ் போன்ற போட்டியாளர்களின் விலை குறைந்த மாடல்கள் காரணமாக கடுமையாக விலையை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட்டுள்ளது. இதனால் Profit Margin குறைந்துள்ளது.

இது போக, ஆப்பிளின் I-phone, சோனியின் Xperia, LGன் G3 போன்ற பெரிய நிறுவனங்களின் மொபைல் மாடல்கள் பிரபலமாக ஆரம்பித்துள்ளதும் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.

இது மொபைல் சந்தையில் ஆரோக்கியமான போட்டி தான்.

கீழே உள்ள இணைப்பில் மலிவு விலையில் கிடைக்கும் சில நல்ல மாடல்களை ஒப்பீடு செய்து உள்ளோம். இது சலுகையுடன் கொடுக்கப்பட்ட விலை என்பதால் உண்மையான விலைகள் இதனை விட சற்று அதிகமாக இருக்கலாம். இந்த பட்டியலில் இருக்கும் Micromax Canvas, IPhone 4S, Nokia Lumia, Lenova A369, Sony Xperia போன்ற புதிய மொபைல்கள் தான் சாம்சங் நிறுவனத்தை பதம் பார்த்து வருகின்றன.



ஆனாலும் தற்போதைக்கு கொரிய பங்குச்சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் பங்கு வீழ்ச்சி அடையவில்லை. கொஞ்சம் ப்ளாட்டாகவே உள்ளது. ஏனென்றால், முதலீட்டாளர்கள் இன்னும் ஒரு வித நம்பிக்கையில் உள்ளார்கள்.

அதற்கு காரணம்,

'இந்த சூழ்நிலை வரும்' என்று எதிர்பார்த்ததால் என்னவோ ஏகப்பட்ட பணம் ஏற்கனவே ஆராய்ச்சியில் செலவழித்து இருந்தார்கள். அதன் பலனும் விரைவில் கைகூடும் என்று நம்பப்படுகிறது.

'Flexible display' என்ற தொழில் நுட்பம் கொண்ட வளையும் தன்மை உடைய  LCD கொண்ட  மொபைலை சந்தைக்கு கொண்டு வருவதில் சாம்சங் மும்முரமாக இருப்பது தான். இவ்வாறு வருவதன் மூலம் மொபைலை கர்சீப் போல் மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்.

இது போக, மருத்துவம் சார்ந்த சில சிறப்பம்சங்களையும் புதிய மொபைல் மாடல்களில் இணைக்க இருக்கிறார்கள். அதாவது காய்ச்சல் இருந்தால் வெப்பநிலையை மொபைல் மூலமே கணக்கிட்டு மருத்துவமனைக்கு செல்லாமலே டாக்டரிடம் உதவி பெருமளவு சில ஆராய்ச்சிகள் சென்று கொண்டிருக்கின்றன.

இவ்வாறு புதிய சிறப்பம்சங்களுடன் வந்தால் மீண்டும் மார்கெட்டை பிடித்து விடுவார்கள் என்று முதலீட்டாளர்கள் அதிக அளவில் நம்புகிறார்கள். அதனால் சாம்சங் பங்கும் வீழ்ச்சி அடையாமல் உள்ளது.

எமக்கும் மீண்டு வந்தால் நல்லது. ஏனென்றால் நாம் சார்ந்து இருக்கும் நிறுவனமும் கூட.

தொழில்நுட்ப துறையில் புதிய கண்டுபிடிப்புகள் என்பது தவிர்க்க முடியாததே.. 'மாற்றம்' என்ற ஒன்று தான் மாறாதது..

ஒரு புதிய மொபைல் மாடல் வரும் போது அதற்கு முன் உள்ள மாடல்கள் விலை இறங்கி வரும். அந்த வகையில் கீழ் உள்ள மொபைல்கள் தேவையான அளவு சிறப்பம்சங்களை கொண்டிருந்தும் கணிசமாக விலைகள் இறங்கி உள்ளன.


English Summary:
Samsung Mobile Market share decrease due to high competitions from low cost mobile manufactures like Micromex,Xiaomi,Carbonn. Due to continuous Galaxy mobile series with same features, peoples are trying to find alternatives. Sony, LG are again capturing market.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக