திங்கள், 21 ஜூலை, 2014

புதியவர்களுக்கு பங்குச்சந்தையில் சில டிப்ஸ் (ப.ஆ - 24)

'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் முந்தைய பகுதியை இங்கு காணலாம்.
பங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர் (ப.ஆ - 23)

எமது தளத்தின் வாசகர்களில் பலர் பங்குச்சந்தையில் புதியவர்கள் என்பது வரும் மின் அஞ்சல்களில் இருந்து தெரிகிறது.
அவர்களுக்கு எமது பங்குச்சந்தை அனுபவத்தில் கிடைத்த சிலவற்றை டிப்சாக தருகிறோம். பயனாக இருக்கும் என்று நம்புகிறோம்!


  • உங்கள் கையில் ஆயிரம் ரூபாய் இருந்தால் அதற்கு மட்டும் பங்குகளில் முதலீடு செய்யுங்கள். லாபம் கொழிக்கும் என்ற கற்பனையில் கடன் வாங்கி பங்கு முதலீடு செய்யாதீர்கள். அதே போல் முக்கியமான செலவுகளுக்கு வைத்துள்ள பணத்தையும் முதலீடு செய்யாதீர்கள்.

  • பங்கு தரகர்களின் கருத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதே சமயத்தில் அவர்கள் வாக்குகள் தான் 'வேத வாக்குகள் அல்ல' என்பதை புரிந்து கொள்ளவும். முடிந்தவரை நீங்களும் ஆராய்ச்சி செய்யுங்கள்! இது எமது பரிந்துரைகளுக்கும் பொருந்தும்.

  • பங்குசந்தையில் சந்தை புள்ளிகளின் ஏற்ற, இறக்கங்களை அடிக்கடி பார்ப்பதை விட முதலீடு செய்த நிறுவனத்தைப் பற்றிய செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். 

  • புதியவர்கள் F&O போன்ற குறுகிய கால ட்ரேடிங் வழிகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அது கொஞ்சம் அனுபவசாலிகளுக்குத் தான் பொருந்தும். பப்பெட், ராகேஷ் என்று பங்கு முதலீட்டில் ஜொலித்த எவரை எடுத்தாலும் நீண்ட நாள் முதலீட்டில் ஈடுபட்டவர்களே. 

  • பங்குசந்தையில் ஒரே இரவில் கோடீஸ்வரராகும் கற்பனைகளை கொஞ்சம் தள்ளி வைத்து விடலாம். நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனம் ஆண்டுக்கு 20% வளர்ச்சி அடைந்தால் உங்களது பங்கு லாபமும் வருடத்திற்கு 20% என்ற அளவில் இருக்கலாம் என்பதே நிதர்சனமான உண்மை. அதற்கு மேல் கிடைத்தால் அது உங்கள் யோகம். ஆனால் யோகங்கள் எப்பொழுதும் நம்மைத் தொடராது.

  • பங்குச்சந்தையில் கூட்டத்தில் பதற்றங்களில் அலறுபவர்கள் அதிகம். அந்த அலறல்களைக் கண்டு நாம் அதிகம் பதற்றப்படக் கூடாது.

  • முழு முதலீட்டையும் பங்குச்சந்தையில் போட வேண்டாம். உங்களிடம் இருக்கும் பணத்தில் ஐம்பது சதவீததிற்குள் மட்டும் பங்குகளில் முதலீடு செய்யலாம். மீதியை ஒரு நிலையான வருமானத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

  • நீங்கள் செய்த ஏதேனும் ஒரு பங்கு முதலீடு தவறு என்று முழுமையாகக் கருதினால் உடனே அதனை விற்று விடுவது நல்லது. அது நஷ்டமாக இருந்தாலும் கூட. 

  • பங்குச்சந்தையில் ஜோதிடம், ஜாதகம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை கொள்ள வேண்டாம்.

  • உங்களது மொத்த பங்குகளின் எண்ணிக்கை பத்துக்குள் இருந்தால் எளிதில் கண்காணிக்கலாம். 


பங்குச்சந்தைகளில் "Financial Discipline" என்பது மிக முக்கியம். அதனை உறுதியாக கடைபிடிப்பதன் மூலம் உங்களது மாத சமபளத்திற்கு போட்டியாகவும் உங்களால் வருமானம் ஈட்ட முடியும் என்பதும் உண்மையே! அதனை அனுபவப்பூர்வமாகக் கண்டு வருவதால் உறுதியாகக் கூறுகிறோம்.

'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின்  முந்தைய பகுதியை இங்கு காணலாம்.
பங்குச்சந்தையில் Depreciation பற்றிய விளக்கம் (ப.ஆ - 25)

English Summary:
Tips for beginners in share market. Diversify your investments, Investing using loan money needs to be avoided. Financials disciplines are best things to follow in share market to get success.
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: