சனி, 26 ஜூலை, 2014

நேர்மையில்லாத CAIRN பங்கை என்ன செய்யலாம்?

CAIRN நிறுவனம் உள்நாட்டில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த மூன்று வருடங்களில் நிறுவனத்தின் உற்பத்தி இரண்டு மடங்கு அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எமது போர்ட்போலியோக்களில் பரிந்துரைக்கப்பட்டது.


ஆனால் தற்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக 1600 கோடி ரூபாய் அளவு கடன் தனது தாய் நிறுவனமான வேதாந்தா குழுமத்திற்கு வழங்குகிறது. இதற்கு 3% வட்டி தாய் நிறுவனம் வழங்கும் என்று தெரிகிறது.

இந்த முடிவிற்கு முக முக்கிய காரணம் CAIRN நிறுவனத்தில் மிக அதிக அளவு பண கையிருப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால் இவ்வளவு பெரிய தொகையின் ஒரு பகுதியை முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் என்று வழங்கி இருக்கலாம். அல்லது புதிய திட்டங்களுக்கு பயன்படுத்தி இருக்கலாம்.இந்த இரண்டுமே செய்யாமல் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள்.

முதலீட்டாளர்களுக்கு நம்பகத்தன்மை இல்லாத நிறுவனங்கள், அரசியல் சர்ச்சைகளில் சிக்கும் நிறுவனங்கள், ஒழுங்காக டிவிடெண்ட் கொடுக்காத நிறுவனங்கள் போன்றவற்றை நாம் போர்ட்போலியோவில் தவிர்த்து விடுவது உண்டு. அதில் ரிலையன்ஸ் குழுமம், அடானி, இந்தியா சிமெண்ட், மல்யாவின் நிறுவனங்கள் போன்றவை சில உதாரணங்கள்.

அந்த வகையில் நேர்மையில்லாமல் செயல்படும் வேதாந்தா குழுமத்தையும் சேர்த்து விடலாம் என்று நினைக்கிறோம்.

CAIRN நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் கீழேயுள்ள குறிப்புகளை பயன்படுத்தி பங்கிலிருந்து வெளியேறலாம் என்று கருதுகிறோம்.


  • இன்னும் அதிக பட்சம் CAIRN பங்கு 5% வரை குறையலாம். அதற்கு மேல் குறைய வாய்ப்புகள் குறைவு.  
  • கடன் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த பணத்தால் ஏற்கனவே சென்று கொண்டிருக்கும் ப்ரொஜெக்ட்களுக்கோ அல்லது புதிய திட்டங்களுக்கோ பாதிப்பு இல்லை என்பதை அறிய முடிகிறது.
  • CAIRN நிறுவனத்தின் அண்மைய நிதி அறிக்கைகள் எதிர்பார்ப்பை விட மிக நன்றாக உள்ளது. அது போல் நிறைய ப்ரொஜெக்ட்கள் பைப் லைனில் உள்ளது. அதனால் மீண்டும் பங்கு அதன் 200 நாள் சாராசரியான 350 என்பதை விரைவில் மீண்டும் அடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

அவ்வாறு 350 ரூபாயை அடையும் சமயத்தில் நஷ்டப்படாமல் பங்கினை விட்டு வெளியேறி விடலாம் என்றும் பரிந்துரைக்கிறோம்.

நமது போர்ட்போலியோ சேவையை பயன்படுத்தி CAIRN நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பங்கு 350 ரூபாயை அடைந்த பிறகு விற்று விட்டு, வேறொரு பங்கை எம்மிடமே இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

என்ன தான் லாபமாக சென்று கொண்டிருந்தாலும் நம்பகத்தன்மை என்பது அதை விட முக்கியமானது. அது வேதாந்தாவுக்கும் பொருந்தும்.

English Summary:
Cairn stock is not recommended further due to ethics investor friendly culture. Cairn is planning to give loan to parent's company without investor interest.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்: