ஞாயிறு, 13 ஜூலை, 2014

பட்ஜெட் போர்ட்போலியோ பகிரப்பட்டது, அடுத்து சிறிய பிரேக்..

நேற்று எமது பட்ஜெட்டை அடிப்படையாக வைத்து வடிவைமைக்கப்பட்ட டைனமிக் போர்ட்போலியோ நண்பர்களிடம் பகிரப்பட்டது.

இந்த முறை பட்ஜெட்டின் பலன்கள் கிடைக்கும் என்று கருதப்பட்ட விவசாயம், பவர், ரியல் எஸ்டேட், கட்டமைப்பு போன்ற துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

உறுதியாக எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம்!

நேற்று இறுதி நாளில் நிறைய நண்பர்கள் இணைந்ததால் கொஞ்சம் பட்டியலை சரிபார்ப்பது கடினமாக இருந்தது. அதனால்  பதிவு செய்தபவர்களுக்கு எமது போர்ட்போலியோ கிடைக்கப் பெறாமல் விடுபட்டு இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளவும். அல்லது "Spam" மெயிலில் இருக்கிறதா என்றும் ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளவும்.

தற்போது பங்குகளை வாங்குபவர்கள் முன்னரே முதலீடு செய்தவர்களை விட கொஞ்சம் அதிர்ஷ்டம் உள்ளவர்களாக கருதிக் கொள்ளலாம். ஏனென்றால் நிறைய நல்ல பங்குகள் மலிவான விலையில் கிடைக்கின்றன.சரியான காரணங்கள் இல்லாமலே சந்தை சரிந்துள்ளது. அதிக எதிர்பார்ப்பும், லாபம் உறுதி செய்யப்படுதலுமே இந்த சரிவிற்கு காரணமாகக் கருதுகிறோம். மற்றபடி, அடிப்படைகள் நன்றாகவே உள்ளன.

இதனை ஏன் கூறுகிறோம் என்றால், இது தொடர்பாக நிறைய மின் அஞ்சல்கள் வந்த வண்ணம் உள்ளன. தனித்தனியாக மெயில் அனுப்புவதை விட எமது கருத்துகளை இங்கு பகிர்கிறோம்.

பட்ஜெட்திற்கு முன் தனிப்பட்ட முறையில் எமக்கு உறுதிப்படுத்தப்படாத லாபம் 13 லட்சம் என்று இருந்தது. ஆனால் தற்போது 10 லட்சமாக குறைந்து விட்டது. அதனால் பதட்டப்படுவதை விட எமது முதலீட்டை இந்த சமயங்களில் மூன்று லட்சம் அதிகரித்து விட்டோம். எமது இலக்கு மோடி ஆட்சி முடியும் முன் முதலீட்டை இரட்டையாக மாற்றுவது தான் தவிர சிறிய தடங்கல்களில் முடங்கிப் போவதல்ல.

இதே முறையைத் தான் எமது வாசகர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.

தற்போது என்ன சாதகமான விடயம் என்றால், நாம் முதலீடு செய்யும் பங்கு எந்த அளவு மேலே உயரும் என்பதை ஓரளவு அறுதியிட்டுக் கூற முடியும். ஏனென்றால் பங்குகள் ஒரு வித உயர்விற்கு சென்று மீண்டும் குறைந்துள்ளதால் அந்த பங்கின் உயர்வு சக்தியை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது.

பங்குச்சந்தையில் தாழ்வில் வாங்குவதும், உயர்வில் விற்பதும் தான் நல்ல திட்டமாக இருக்கும். ஆனால் பெரும்பாலான சிறு முதலீட்டாளர்கள் இதற்கு எதிர்மறையாக செயல்படுவதால் தான் நஷ்டம் ஏற்படுகிறது. அதனால் நீண்ட கால முதலீட்டில் இதனை வாங்கும் வாய்ப்புகளாக கருதிக் கொள்ளலாம்.

குறைந்தபட்சம், கடந்த ஐந்து வருடங்களில் முதலீடு செய்து கொண்டு வருபவர்களுக்கு புரிந்து கொள்ள முடியும். தற்போதைய வீழ்ச்சி என்பது நிரந்தரமல்ல என்று. அதனால் அடுத்தக் கட்டத்திற்கு நம்பிக்கையுடன் செல்வோம்.

அடுத்து கடந்த சில மாதங்களாக டைனமிக் போர்ட்போலியோ சேவை எமது தனிப்பட்ட பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொண்டது. அதனால் சிறிது ஓய்வு தேவைபப்டுகிறது.

இதன் காரணமாக ஆகஸ்டில் எமது டைனமிக் போர்ட்போலியோ சேவை கிடையாது. அடுத்து செப்டெம்பர் ஒன்று முதல் மீண்டும் தொடங்குகிறோம்.

எமது ஏப்ரல் போர்ட்போலியோவில் உள்ள மூன்று பங்குகள் எதிர்பார்த்த விலைகளையும் தாண்டி சென்று கொண்டிருக்கின்றன. அத்தகைய பங்குகளை மாற்றுவதற்கு எப்பொழுதும் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு இந்த ஓய்வு பொருந்தாது. அதே போல் எமது தளத்தில் கட்டுரைகளும் வழக்கம் போல் வெளிவரும்.

பட்ஜெட் போர்ட்போலியோவில் உள்ள பங்குகள் குறைந்தபட்சம் இந்த வாரம் முழுமைக்கும் 'வாங்கும்' வகையில் இருக்கும் என்று நம்புகிறோம். அதனால் 3% உயர்வு ஏற்படும் வரை இந்த போர்ட்போலியோவை பயன்படுத்தலாம். நண்பர்கள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும்!

மின் அஞ்சல் முகவரி: muthaleedu@gmail.com


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. Yes, this time subscribers are little fortunate as most stocks are available in very good price... unfortunately my pocket is finished off to enhance the investment level...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks for your comments Prabhu! I feel sensex may not go up quickly. It may roll between 24.5K to 26K for some time. So hope still you will get more opportunties to enhance your investment in the coming months.

      நீக்கு