திங்கள், 28 ஜூலை, 2014

இந்தியாவின் மிகப்பெரிய பவர் நிறுவனமாக மாறிய ரிலையன்ஸ்

அனில் அம்பானியால் நிர்வகிக்கப்படும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் 12000 கோடி மதிப்பில் ஜெய் பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஜெய் பிரகாஷ் பவர் நிறுவனத்தின் நீர் மின்சாரம் தயாரிக்கும் உலைகளை வாங்கியுள்ளது.


இது இன்ஜினியரிங் துறையில் இந்தியாவில் பெரிய டீலாக கருதப்படுகிறது.

இந்த டீலால் இரண்டு நிறுவனங்களுக்குமே ஆதாயம் தான். கிட்டத்தட்ட WIN-WIN டீல் தான்.இதனால் நேற்றைய சந்தையில் ரிலையன்ஸ் பவர் ஒரு கட்டத்தில் 3% உயர்வை சந்தித்தது. அதே சமயத்தில் ஜெய் பிரகாஷ் 9% வரை உயர்வை சந்தித்தது.

இந்த நீர் மின்சார உலைகளை வாங்கியதன் மூலம் நிலக்கரி மின்சாரத்தில் மட்டுமே அதிக அளவு மின்சாரம் பெற்று வந்த ரிலையன்ஸ் பவர்  நிறுவனம் நீர் மின்சாரத்திலும் இனி கணிசமான பங்கு வகிக்கும். இதனால் அவர்கள் மின்சார போர்ட்போலியோ பரவலாக்கப்பட்டுள்ளது நிறுவனத்திற்கு சாதகமான விடயம்.

இந்த டீலால் இந்தியாவில் மின்சாரம் தயாரிக்கும் மிகப்பெரிய தனியார் நிறுவனமாகிறது. அதாவது 7800 மெகா வாட் மின்சாரம் ரிலையன்ஸ் பவரால் தயாரிக்க முடியும். கிட்டத்தட்ட தமிழக மின்சார தேவையின் முக்கால் பகுதியை ஒரு தனியார் நிறுவனத்தால் தயாரிக்க முடியும்.

அதே நேரத்தில் கணிசமான கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வரும் ஜெய் பிரகாஷ் நிறுவனம் இந்த  டீலால்  தனது கடனைப் பெருமளவில் குறைக்க முடிகிறது. அவர்களது பணப்புழக்கம் அதிகரித்து கட்டமைப்பு துறையில் இனி முழுமையாக ஈடுபட முடியும்.

ஆக, இந்தியாவில் பெரிய நிறுவனங்களை தவிர்த்து மற்ற நிறுவனங்கள் மின் உற்பத்தியில் ஈடுபடுவது என்பது கடினமான செயலாகவே உள்ளது.

இந்த ரிலையன்ஸ் பவர் ஒரு சமயத்தில் IPOவாக வெளிவந்து 400 ரூபாயில் வர்த்தகமாகிக் கொண்டு இருந்த பங்கு தற்போது 90 ரூபாயில் உள்ளது.

பொதுவாக ரிலையன்ஸ் நிறுவனமும் முதலீட்டாளர்களைக் கண்டு கொள்ளாத நிறுவனம் மற்றும் அரசியல் சர்ச்சைகளில் சிக்கும் நிறுவனம் என்பதால் எமது பட்டியலில் என்றும் இருந்ததில்லை.

English Summary:
Reliance Power becomes the bigger venture in Indian Power Industry.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக