புதன், 30 ஜூலை, 2014

பணம் போட்டிப் போட்டு கொட்டப்படுகிறது இந்திய ஆன்லைன் சந்தையில்..

இந்தியாவில் அதிகமாக பயன்பாட்டிற்கு வரும் இன்டர்நெட் உலகமும், அதிகரித்து வரும் இளைய தலைமுறையும் ஆன்லைன் ஷாப்பிங் துறைக்கு சாதகமாக உள்ளன.

இன்னும் மூன்று வருடங்களில் ஆன்லைன் வியாபாரம் இரண்டு மடங்காக மாறவும் வாய்ப்புகள் உள்ளது.

அதனால் தான் கடந்த பதிவில் இதில் ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு கட்டுரையை எழுதி இருந்தோம். அதில் சில நண்பர்கள் விரிவான விளக்கங்களையும் கேட்டு எழுதி இருந்தார்கள். அந்த கட்டுரையை இங்கு பார்க்க..
பன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா?

அவர்களுக்கு இந்த பதிவும் பயனாக இருக்கும் என்று நம்புகிறோம்.



நேற்றைய முந்தைய நாள் ப்ளிப்கார்ட் வெளிநாடுகளில் இருந்து 6000 கோடி முதலீட்டை பெற்றுள்ளது. இது அவர்களது இணையத்தை மொபைல் பயன்பாட்டில் மேம்படுத்துவதற்கும் ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு விரிவாக்குவதற்கும் பயன்படும் என்று தெரிகிறது.

இந்த நிதி திரட்டல் மூலம் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 42,000 கோடியாக உயரந்துள்ளது.


இவ்வளவிற்கும் ப்ளிப்கார்ட் பங்குச்சந்தையில் தான் நிதி திரட்ட திட்டமிட்டு இருந்தது. ஆனால் பங்குச்சந்தையின் கடுமையான விதி முறைகள் நிறுவனம் முழு சுதந்திரமாக செயல்பட தடையாக இருக்கும் என்பதால் வெளியில் இருந்தே நிதி திரட்டி உள்ளார்கள் என்று எண்ணுகிறோம்.

இருந்தாலும் ஏற்கனவே அதிக அளவில் நிதி வெளியில் இருந்து வாங்கியுள்ளதால் அடுத்த முறை IPOவாக வர வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்படி வந்தால், நம்பிக்கை வைத்து IPOவை வாங்கலாம்.

அடுத்த செய்திக்கு முன் ப்ளிப்கார்ட் நிறுவனர்கள் இருவரும் அமேசான் நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள் என்பதை கவனிக்க. தற்போது அவர்கள் இவருடைய சொத்து மதிப்பு தலா 6000 கோடி. அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்து இருந்தால் இதில் 10% கூட இன்று சம்பாதித்து இருக்க முடியாது. இதனை சம்பாதிக்க எடுத்தக் கொண்ட காலம் ஐந்தே ஆண்டுகள் தான்.

ப்ளிப்கார்ட் 6000 கோடி முதலீட்டில் விரிவாக்குகிறது என்ற செய்தி வந்த மறு நாளே அமேசான் 12,000 கோடியை இந்திய சந்தையில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இது தற்செயலா அல்லது போட்டிக்கா என்று தெரியவில்லை. இந்த வெளிப்படையான போட்டி குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடைப்பட்டதாக மாறி உள்ளது.

150% லாபம் உயர்ந்த ப்ளிப்கார்ட்

தனிப்பட்ட முறையில் அமேசான் தளம் ப்ளிப்கார்ட்டை விட பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளது என்பது எமது கருத்து. இன்னும் இணைய வடிவமைப்பு, விளம்பரம், டெலிவரி ட்ரேகிங், சலுகைகள் போன்றவற்றில் ப்ளிப்கார்ட் மேம்படுத்த வேண்டி உள்ளது. இருந்தாலும் அமேசான் போன்ற யானையுடன் மோதி துறையில் இருப்பதே பெரிய விடயம். ebay தளத்தையே திணறடித்தவர்கள் அமேசான் ஆட்கள்.

ப்ளிப்கார்ட்டின் புதிய மொபைல் ஆப்  நன்றாக உள்ளது. புதியவர்கள் இதனை Reference போன்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்திய ஆன்லைன் சந்தையில் டிமேண்ட் மிகவும் அதிகமாக உள்ளது என்று மட்டும் தெளிவாக புரிகிறது. இந்த வாய்ப்புகளை புதியவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஐந்து முதல் பத்து லட்சம் ஆரம்ப முதலீட்டில் ஆன்லைன் வியாபரத்தை சுயதொழில் முனைவர்களும் சிறிதாக ஆரம்பித்து அப்புறம் விரிவாக்கலாம். அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற பெரிய தலைகள் விற்பதையே நாமும் விற்றால் கடுமையான போட்டியில் முடங்கி போக வாய்ப்புண்டு. அதனால் கொஞ்சம் புது விதமாக யோசிக்க வேண்டும்.

அடுத்து ஒரு கட்டுரையில் ஆன்லைன் ஷாப்பிங் தொடர்பாக நாம் சேகரித்த தகவல்களை எழுதுகிறோம்.

அமேசான் தளத்தின் சில சலுகைகளை கீழே பாருங்கள். எப்படி இவர்களால் இவ்வளவு குறைவாக விற்க முடிகிறது என்பதே ஆச்சர்யமாக  உள்ளது.




  • 30% சலுகையில் பிராண்ட் மொபைல்கள்
  • 25% சலுகையில் NIKON, SONY, CANON கேமராக்கள்
  • 25% சலுகையில் CAT, GMAT, IBPS போட்டி தேர்வு புத்தகங்கள்
  • 50% வரை சலுகையில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்

  •  English Summary:

    Flipkart and Amazon are investing heavily in Indian eCommerce market. Indian online shopping store attracting more capital money from foreign investor.

    « முந்தைய கட்டுரை




    Email: muthaleedu@gmail.com

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக