திங்கள், 14 ஜூலை, 2014

சந்தையில் நம்பிக்கை கொடுக்கும் பணவீக்க குறைவு

தற்போதைய சந்தை வீழ்ச்சிக்கு 'Profit Booking' தான் அதிக காரணமாக இருக்க முடியும். இந்திய பங்குச்சந்தையில் தரகர்களின் ஆட்டம் கொஞ்சம் அதிகமே. அதில் அதிகம் பாதிக்கபப்டுவது ஒன்று, இரண்டு மாதங்களுக்கு முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்கள் மட்டுமே.


ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை பார்த்தால் இவ்வளவு பங்குச்சந்தை சரிவிலும் இன்னும் இந்திய சந்தையில் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதனால் தின வர்த்தகத்தின் மூலம் சந்தையை ஆட்டுவிக்கும் சில தரகர்களைக் கண்டு நாம் நம்பிக்கையை தளர விட வேண்டாம்.இது போக நேற்று ஒரு நல்ல செய்தி.

எமது போர்ட்போலியோவில் 'கடினத்தன்மை' என்ற ஒரு பகுதி இருக்கும் அதில் கடந்த இரு மாதங்களாக குறிப்பிடுவது வறட்சி மற்றும் பணவீக்கம். இந்த இரண்டும் நமது கையில் இல்லாத மந்திரக்கோல்கள் .

இதில் பணவீக்கம் என்பது கடந்த மாதத்தில் நன்றாக குறைந்துள்ளது. அதில் உணவு பணவீக்கம் குறைந்துள்ளது தான் முக்கிய விடயம். ஏனென்றால், வறட்சியில் முதலில் அடி வாங்குவது உணவு பொருட்களாகத் தான் இருக்கும்.

கடந்த மாதத்தில் மொத்த வணிக பணவீக்கம் 7.3% என்றும், சில்லறை பணவீக்கம் 5.4% என்ற அளவில் குறைந்துள்ளது. இது கடந்த இரண்டரை வருடங்களில் ஏற்பட்ட ஒரு நல்ல நிலையாகும். இந்த தரவுகள் சந்தைக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.

இன்னும் உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் விலை மட்டும் குறையவில்லை. வட இந்தியர்கள் இந்த இரண்டும் இல்லாவிட்டால் வாடி விடுவார்கள்.  உற்பத்தியை விட பதுக்கல் தான் முக்கிய காரணம் என்று அரசுகருதுகிறது. அதனால் நடவடிக்கை எடுத்தால் இதனை எளிதில் கட்டுப்படுத்தலாம்.

மேலும் ஒரு முக்கிய விடயத்தைக் கவனிக்க.

ரிசர்வ் வங்கி கவர்னர் பணவீக்கம் 8% க்கும் குறைவாக வந்தால் தாம் வட்டி விகிதங்களை குறைப்பதாக கூறி முன்னர் இருந்தார். அப்படி ஒரு நிகழ்வு நடக்குமாயின் சந்தையை மேலே கொண்டு செல்லும் ஒரு முக்கிய காரணியாக இது இருக்கும்.

நேற்று, அமெரிக்க சந்தையில் உயர்வு ஏற்பட்டது. சில நிறுவனங்களின் நல்ல நிதி அறிக்கைகள் அதற்கு காரணமாக அமைந்தன. நமக்கு சம்பந்தமே இல்லாவிட்டாலும் இதையே காரணமாக வைத்து இந்திய சந்தையும் இன்று உயர வாய்ப்புள்ளது.

அடுத்து இந்த மாத போர்ட்போலியோவில் மருந்து நிறுவனங்களை அவ்வளவாக பரிந்துரைக்கவில்லை. அதற்கு காரணங்கள் ஏன் என்று சில நண்பர்கள் கேட்டு இருந்தார்கள்.

புதிய மருந்து கட்டுப்பாடு விதிகள் அரசு கொண்டு வர திட்டமிடப்படுகிறது என்ற செய்தி உலா வருகிறது. அது பெரும்பாலான மருந்து நிறுவனங்களின் லாப விகிதத்தை ஐந்து சதவீதம் வரை குறைக்க வாய்ப்புள்ளது அதனால் தான் பரிந்துரைக்கவில்லை. இது கட்டண சேவை பெறாதவர்களுக்கும் பயனாக இருக்கும் என்பதால் இங்கு பகிர்கிறோம்.

English Summary:
Reduced Inflation gives hope to the share market.« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக