திங்கள், 7 ஜூலை, 2014

கோடீஸ்வரராக ஒரு செயல்முறை விளக்கம்..

பெரும்பாலும் ஒருவர் கோடீஸ்வரராக வேண்டும் என்றால் முதலில் நினைப்பது லாட்டரி வாங்குவது, பணக்கார பெண்ணை கல்யாணம் பண்ணுவது என்று சில குறுக்கு வழிகள் தான் முதலில் நினைவுக்கு வரும். ஏனென்றால் ஒரு கோடி என்பது அவ்வளவு மலைப்பான தொகை.


ஆனால் நமது பணத்தில் ஒழுங்காக திட்டமிட்டால் கோடீஸ்வரராவது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல. அதற்கு பெரிய தொகை ஒன்றும் ஆரம்பத்திலே தேவையில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாதந்தோறும் உள்ள சேமிப்பை பயன்படுத்தியே இந்த இலக்கை அடையலாம்.

எனது தந்தையார் ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் வேலை பார்த்தார். ஆனால் 26வது ஆண்டில் (2005ல்) கூட அவரது மாத ஊதியம் 3000 ரூபாயை அடையவில்லை.

அவரது வேலை நேரம் 12 மணி நேரம். அதாவது, காலை 9.30 முதல் இரவு 9.30 வரை. அவரால் சராசரியாக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 கல்யாண பட்டுச்சேலைகள் விற்க முடியும். மாதத்திற்கு அவருக்கு 25 நாட்கள் வேலை நாட்கள். ஆக ,250 சேலைகளாவது விற்று இருப்பார். ஒரு சேலைக்கு 15000 என்று எடுத்துக் கொண்டால் கூட, அந்த முதலாளிக்கு 37,50,000 ரூபாய்க்கு வியாபாரம் ஆகி இருக்க முடியும். 20% லாப  மார்ஜின் வைத்து இருந்தால் கூட 7,50,000 ரூபாய் கிடைத்து இருக்கும்.

ஆனால் எனது தந்தையின் மாத ஊதியம் அவர் விற்ற ஒரு பட்டுச் சேலையில் கிடைக்கும் லாபமாகக் கூட வராது.

இது தான் இந்தியாவில் முதலாளிகளின் எண்ணம். அரசின் முறைப்படுத்தப்படாத தொழிலாளர் சட்டங்கள் நடுத்தர வர்க்கத்தை அப்படியே வைத்து விடுகிறது.

Compound Interest


சரி..இதில் செண்டிமெண்ட் என்ற பகுதியை எடுத்து விட்டு கருவிற்கு வருவோம்.

நாம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், முதலில் நமது உழைப்பிற்கு, தகுதிக்கும் ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றால் உடனே அந்த வேலையை மாற்றுவது நல்லது. அப்படியும் மாற்று வேலை கிடைக்கவில்லை என்றால் சுயதொழில் முயற்சிகளை ஆரம்பித்து விட வேண்டும். முதலில் கஷ்டமாக இருந்தால் கூட நீண்ட கால நோக்கில் அதிக பலன் கொடுக்கும்.

ஒருவரிடம் 2 லட்ச ரூபாய் கையில் இருக்கிறது. அவரால் மேலும் மாதம் 15,000 ரூபாய் அளவு சேமிக்க முடியும். என்றால் 12.5 வருடங்களில் அவரால் கோடீஸ்வரராக முடியும்.

தற்போதைய நிலையில் ஒரு பட்டதாரி இளைஞனின் ஊதியத்தில் இந்த சேமிப்பு அதிகம் சாத்தியமானதே.

நாம் முன்னர் முதலீடை எப்படி பிரிக்கலாம் என்று கட்டுரை எழுதி இருந்தோம். அதனை கொஞ்சம் பார்த்து வந்தால் பின்னுள்ள பகுதி எளிதாக புரிந்து விடும். (முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 1)

முதலில் கையில் உள்ள இரண்டு லட்சத்தை 40% + 30% + 30% என்று பிரித்துக் கொள்ளுங்கள்.

40% பகுதியை ரிஸ்கே இல்லாத நிலையான வருமானம் தரும் முதலீடுகளில் போட்டு விடுங்கள். (உதாரணத்திற்கு Fixed Deposit, NSC, Govt. bonds)

இரண்டாவதாக 30% பகுதியை 15% அளவு வருமானம் தரும் Mutual Fund முதலீடுகளில் போடுங்கள். இதில் 15% என்பது குறைந்தபட்சம் தான். சில ம்யூச்சல் பண்ட்கள் இதனை விட அதிகமாக ரிடர்ன் கொடுக்கின்றன.

கடைசி 30% பகுதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்யுங்கள். இதில் 25% அளவு வருட வருமானம் எதிர்பார்க்கலாம். நமது போர்ட்போலியோக்களில் இதை விட அதிக வருமானம் வருவதை நிரூபணம் செய்து உள்ளோம்.

அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் 15,000 ரூபாய் சேமிப்போம் என்று சொல்லி இருந்தோம். இதில் 5000 ரூபாயை நிலையான முதலீடுகளில் (உதாரணத்திற்கு RD) என்றும், இரண்டாவது 5000 ரூபாயை ம்யூச்சல் பண்ட்திலும் கடைசி 5000 ரூபாயை பங்குச்சந்தையிலும் முதலீடு செய்து வாருங்கள்.

இனி ரிடர்ன் எப்படி என்று பார்ப்போம்..

நிலையான முதலீடுகள்
(80000 * 8% * 12.5) + (5000 * 150 மாதங்கள் * 8%) = 15.09 லட்சம்.

ம்யூச்சல் பண்ட் முதலீடுகள்
(60000 * 15% * 12.5) + (5000 * 150 மாதங்கள் * 15%) = 25.77 லட்சம்.

பங்குச்சந்தை முதலீடுகள்
(60000 * 25% * 12.5) + (5000 * 150 மாதங்கள் * 25%) = 62.72 லட்சம்.

ஆக இறுதியில் இதே போல் முதலீடு செய்து வந்தால் உங்கள் முதலீடு 103.5 லட்சம் என்று மாறி இருக்கும். அதாவது ஒரு கோடியே மூன்று லட்சத்துக்கு நீங்கள் சொந்தமாகி இருக்கலாம்.

25 வயதில் இந்த முதலீட்டு முறையைத் தொடங்கி இருந்தால் 37 வயதில் கோடீஸ்வரராக மாற முடியும். இது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல.

தற்போது அணைத்து முதலீடுகளையும் பாரம்பரிய நிலையான முதலீடுகளில் மட்டும் முதலீடு செய்து இருந்தால் எவ்வளவு கிடைக்கும் என்று பார்ப்போம்.

நிலையான முதலீடுகள்
(200000 * 8% * 12.5) + (15000 * 150 மாதங்கள் * 8%) = 44.20 லட்சம்.

இதன் மூலம் கிடைக்கும் வருமானம் 44.20 லட்சம். மட்டுமே.

ஆக, அதே முதலீட்டு பணத்தில் கொஞ்சம் ரிஸ்கை சமநிலைப்படுத்தி முதலீடு செய்யும் போது இரட்டையாக வருமானம் கிடைக்கிறது.


Compound Interest
Power Of Compound Interest


ஒரு கோடியை அடைவதற்கு 12.5 வருடங்கள் என்றால், இரண்டு கோடிக்கு 25 வருடங்கள் ஆகும் என்று அர்த்தம் இல்லை. இந்த கணக்கீடுகள் அனைத்தும் கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுவை. அதாவது வட்டி லாபமும் முதலீடாக மாறிக் கொண்டே இருக்கும்.

இதே முறையில் 25 வருடங்கள் சென்றால் 15 கோடி உங்கள் கையில் இருக்கும்.

English Summary:
The realistic method to become crorepathi through investments. It's possible achievement if we diversify our investments at earlier working stages.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

5 கருத்துகள்:

  1. நேரம் கிடைத்தால் சற்று விவரமாக Mutual Fund முதலீடு பற்றி எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக எழுதுகிறோம்..பார்த்திபன்..

      நீக்கு
  2. இதெல்லாம் மிகவும் எளிது தான்...

    ஆமாம் அப்படி கோ ஆகி....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புறம் செலவு பண்ண வேண்டியது தான்..எம்மிடமே எல்லாமே கேட்டு செய்யும் அண்ணாச்சிக்கு நன்றி! தங்கள் நக்கல்கள் பதிவிடம் இங்கல்ல....

      நீக்கு
  3. Sir I need explaination on Excel sheet plz help me .babu86k@gmail.com

    பதிலளிநீக்கு