வியாழன், 3 ஜூலை, 2014

ASTRA நிறுவனம் விற்கப்படுமா?

எமது இலவச போர்ட்போலியோவில் 2013, அக்டோபரில் ASTRA Microwave நிறுவனத்தைப் பரிந்துரை செய்து இருந்தோம். பரிந்துரை செய்த போது விலை வெறும் 35 ரூபாய். தற்போது 150 ரூபாய்.

அதாவது 328% லாபம். பத்தாயிரம் முதலீடு செய்து இருந்தால் இன்று 38,000 என்று மாறி இருக்கும். (75% லாபத்தில் 'முதலீடு' இலவச பங்கு பரிந்துரைகள்)

கடந்த இரண்டு நாட்களாக மட்டும் 30% அளவு பங்கு கூடியுள்ளது.ஆனால் ஒரு வித பயமும் சேர்ந்து வந்தது. எவ்வளவோ தேடித் பார்த்தும் எந்த வித செய்தியும் இத்தகைய உயர்விற்கு காரணமாகவில்லை.

அதனால் தான் இப்படியொரு யூகம் நமக்கு ஏற்பட்டது. இது முற்றிலும் யூகம்..எந்த வித தரவுகளும் கிடையாது.

விண்வெளியில் அஸ்ட்ரா தயாரிப்புகள் 

இந்த நிறுவனத்தில் நிறுவனர்களின் பங்கு விகிதம் ஒன்றும் பெரிதாக இல்லை. வெறும் 20% அளவே. அதுவும் ஒருத்தருக்கு என்று இல்லை. பலருக்கு என்று சிதறி உள்ளது. ஆனால் அனுபவம் வாய்ந்த நிர்வாகத்தின் காரணமாக நிறுவனம் மிக நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

இது பல பெரிய நிறுவனங்களுக்கு கண்ணை உறுத்திக் கொண்டே உள்ளது.. எப்படியாவது நிறுவனத்தை வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள்.

L&T நிறுவனம் மட்டும் ASTRA நிறுவனத்தின் 9% பங்குகளை ப்ளாக்கில் வாங்கி குவித்துள்ளது. இன்னும் 10~15%% அளவு பங்குகள் சொந்தமானால் நிறுவனம் L&Tக்கு கைமாறி விடும். அப்படியொரு சூழ்நிலை.

ஆனால் நிறுவனர்கள் இது வரை கஷ்டப்பட்டு நிறுவனம் கை மாறுவதை தடுத்து வந்துள்ளார்கள்.

ஆனால் இவ்வளவு குறைவான பங்கு சதவீதத்தை வைத்து விட்டு நிறுவனத்தை நீண்ட கால நோக்கில் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது மிக கடினம்.

இந்த நிலையில் தான் புதிய மத்திய அரசால்  100% அந்நிய முதலீடு பாதுகாப்பு துறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அந்த சூழ்நிலையில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வந்து புதிதாக கிளைகள் அல்லது நிறுவனங்களைத் துவங்குவது என்பது எளிதல்ல. அதனால் பாதுகாப்புத் துறையில் இருக்கும் சிறு நிறுவனங்களை வாங்குவதற்கு முனைப்பு காட்டுவார்கள். அதன் பிறகு அதிலிருந்து சந்தையை பிடிப்பார்கள். அதனால் இந்த பங்கிற்கு முன்பை விட டிமேண்ட் கூடி விட்டது.

அப்படியொரு நிலை வரும் போது அருமையான P/E விகிதத்தைக் கொண்டு, குறைந்த பங்கு விகிதத்தைக் கொண்டு, நல்ல நிர்வாகத்துடன் கூடிய, நல்ல லாபத்தில் இயங்கும் ASTRA நிறுவனத்தை வாங்குவதற்கே முன்னுரிமை கொடுப்பார்கள்.

இந்த துறையில் மற்ற நிறுவனங்களின் P/E விகிதத்தைப் பார்த்தால் எல்லாம் மிக அதிகமாக உள்ளது. அல்லது மற்ற நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதனால் முதல் சாய்ஸ் என்று ASTRA நிறுவனத்தை சொல்லலாம்.

இந்த நிறுவனத்தை கையகப்படுத்துகிறார்கள் என்ற நிலை வந்தால் தற்போதைய நிலையில் இருந்து அதிகரித்து குறைந்த பட்சம் ஒரு பங்கிற்கு 200 ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. 

இது ஒரு தெளிவில்லாத யூகம். ஆனால் வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

நிறுவனம் விற்கப்பட்டாலும், விற்கப்படாமல் இருந்தாலும் நாம் லாபத்தில் இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் கொஞ்சம் பொறுத்து இருந்து பார்ப்போம்.

புதிய முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்து ரிஸ்க் எடுக்க வேண்டாம். இந்த கட்டுரை போர்ட்போலியோவை பார்த்து ஏற்கனவே முதலீடு செய்தவர்களுக்கானது.

எமது ஏப்ரல், ஜூன். ஜூலை 1 போர்ட்போலியோக்களின் உயர்வைத் தொடர்ந்து ஜூலை 15ல் அடுத்த போர்ட்போலியோ வெளியாகிறது. 900 ரூபாயில் 9 பங்குகள் பட்ஜெட்டை அடிப்படையாக வைத்து முழு விவரங்களுடன் தயாரிக்கப்படும். 

விருப்பமான நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

English Summary:
Chances are there to acquire Astra Microwave by foreign companies.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக