வெள்ளி, 4 ஜூலை, 2014

பங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர் (ப.ஆ - 23)

கடந்த 'பங்குச்சந்தை ஆரம்பம்' பதிவில் பங்குகளின் விலையைக் கணக்கிடுவது எப்படி? என்பதைப் பற்றி விவரமாக விளக்கி இருந்தோம்.

தமிழில் இப்படியொரு Niche கட்டுரைகளை எழுதுவது பற்றி நண்பர்கள் பாராட்டி மெயில் அனுப்பி இருந்தார்கள். மிக்க நன்றி!

அதனுடன் ஒரு சிலர், புரிவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எங்களுக்கு இதனை எளிதாக கணக்கிடுவது ஒரு எளிய வழியை சொல்லுங்கள் என்றும் சொல்லி இருந்தார்கள்.

அந்த சூழ்நிலையில் உதித்தது தான் இந்த வெப் கால்குலேட்டர்.

"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.

பங்குகள் தொடர்பான கணக்கீடுகளுக்கு ஆங்கிலத்திலும் உரிய தளங்கள் இல்லாததையும் உணர்ந்தோம். ஏனென்றால், சந்தையில் இவை கட்டண மென்பொருளாகவே உலவி வருகின்றன.

அதனால் ஆங்கிலத்திலே www.stockcalculation.com என்ற பெயரில் இலவச தளத்தினை உருவாக்கியுள்ளோம்.

இது ஒரு நீண்ட நாள் முயற்சி. தற்போது தான் ஆக்கத்தில் வந்துள்ளது. இதற்கு ஆலோசனைகளும் உதவியும் செய்த எமது வெப்தள மென்பொருள் நண்பர்களுக்கு மிக்க நன்றி!

இந்த தளத்தில் ஏற்றப்படும் ஒவ்வொரு கணக்கீடுகளுக்கும் தமிழில் நமது தளத்தில் விளக்கம் தரப்படும்.

தற்போதைக்கு கீழே உள்ள கணக்கீடுகளை வடிவமைத்துள்ளோம்.

1. பங்குகளின் சரியான விலைகளைக் கணக்கிடுவது எப்படி?
பதிவு விளக்கம்: பங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி? 
கால்குலேட்டர் முகவரி: http://www.stockcalculation.com/2014/01/stockvaluation.html

2. P/E மதிப்பைக் கணக்கிடுவது எப்படி?
பதிவு விளக்கம்: P/E விகிதத்தை வைத்து பங்கினை எப்படி மதிப்பிடலாம்?
கால்குலேட்டர் முகவரி: http://www.stockcalculation.com/2014/07/pb-calculator.html

3. P/B மதிப்பைக் கணக்கிடுவது எப்படி?
பதிவு விளக்கம்: புத்தக மதிப்பை வைத்து நல்ல நிறுவனத்தை எப்படி கண்டுபிடிக்க? 
கால்குலேட்டர் முகவரி: http://www.stockcalculation.com/2014/12/stock-price-to-book-calculator.html

4. புரோக்கர் செலவுகள் தவிர்த்து உண்மையான லாபம் கணக்கிடுவது?
கால்குலேட்டர் முகவரி: http://www.stockcalculation.com/2013/12/stock-profit-calculator.html

ஒவ்வொரு முறையும் சூத்திரங்களை எழுதி வைத்தோ, அல்லது எக்செல் பக்கத்தில் கணக்கு பார்ப்பதும் அவ்வளவு எளிதல்ல. அந்த சூழ்நிலைகளில் இந்த வெப் கால்குலேட்டர். எங்கும் இருந்து எளிதில் கணக்கீடு செய்ய உதவும்.

சரி..எப்படி கணக்கீடு செய்ய என்பதற்கு ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்..

STEPS:
 • www.stockcalculation.com என்ற தளத்திற்கு செல்லவும்.
 • கடந்த ஐந்து வருடங்களில் பங்கின் சந்தை விலைகளை உள்ளீடு செய்யவும். இதனை பல தளங்களில் "Historical Price" என்ற பகுதியில் பெறலாம்.
 • கடந்த ஐந்து வருடங்களில் உள்ள EPS மதிப்புகளை உள்ளீடு செய்யவும். இதனை அந்தந்த வருடங்களின் Profit & Loss அறிக்கையிலிருந்து பெறலாம்.
 • "Calculate" என்ற பட்டனை அழுத்தவும்.
 • எதிர்பார்க்கும் பங்கு விலை, சரியான வாங்கும் விலை போன்ற விவரங்கள் தானாகவே கிடைக்கும்.

கீழே உள்ள படத்தில் BRITANNIA பங்கிற்கு நாம் கணக்கீடு செய்து உள்ளோம்.

stockcalculation.com தளத்தை பயன்படுத்தும் முறை 
இந்த கால்குலேட்டர் தொடர்பான உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறோம். அதே போல் ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டி மேலும் மெருகேற்ற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எமது கட்டண சேவையில் அடுத்த போர்ட்போலியோ பட்ஜெட்டை அடிப்படையாக வைத்து ஜூலை 15ல் வெளி வருகிறது .இதில் 900 ரூபாயில் 9 பங்குகள் விவரங்களுடன் பரிந்துரைக்கப்படும் . எமது இலவச போர்ட்போலியோ 75% லாபமும், ஏப்ரல் போர்ட்போலியோ 45 % லாபமும் ,ஜூன் போர்ட்போலியோ 12 % லாபமும் கொடுத்துள்ளன . விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு காணலாம்.
English Summary:
The web calculator for fundamental valuation which helps to estimate stock valuation, Price-to-Earning ratio, Price-to-book values.
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

6 கருத்துகள்:

 1. Good Job...Thanks for the web calculator.... still need help to identify the correct price for the previous years

  I had tried earlier with the excel formula template for the June month portfolio recommended prices..

  I got so much variations with respect to the recommended June month portfolio stocks price.. Infact thought to send a mail to you and request for clarification, then I left as I thought you were busy with July month portfolio preparation.

  And the deviations, to my knowledge it could be not to pick the correct price for the last five years. Even I tried high price or average price. however no solution

  how do you select the last years price,

  or shall I consider the march month price as I guess Profiit loss report EPS will be calculated year end Earning price by stock price.

  Could you clarify...  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thanks Prabhu!

   I would like to note a point that this calculator can be used just as a reference. This calculator fully depends on the previous history.

   Whenever growth is playing important role in a particular stock, then we have to decide by ourselves only. For example, if a company expands it's division aggressively this year, then it will not reflect in the calculator.

   This is like more intelligence + little calculations will be helpful in stock picking.

   I recommend to take march stock price for less efforts.

   Mostly, this formula will be match with large caps compared to others

   நீக்கு
 2. Thanks for the reply... Understand the calculator for an additional reference purpose with the planed fundamental potential stock....

  I need one more clarifications,i.e There is one Stock Aksh optic fibre who is expert in Fiver optic cables.... As per web calculator it says recomend to buy 13.75 as per last three years data as 2010& 11 EPS negative not considered.

  Current price of the stock is Rs.24, it has good potential for future, because of their product and very limited suppliers in this field.. (I have purchased at Rs.21 recently)

  ofcourse web calculator can be considered for reference. however some times it can also be not considered when future potential growth envisaged...

  Could you correct my above perception.. is that correct way of approach....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Yes. your perception is too correct..If the same stock is having high potential and less competition, surely it can be considered for investment.

   நீக்கு