வியாழன், 10 ஜூலை, 2014

முதலீட்டாளர் பார்வையில் வளர்ச்சிக்கு வழி கொடுக்கும் பட்ஜெட்

நேற்று நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்த போது நிமிடத்திற்கு நிமிடம் சந்தையில் அவ்வளவு மாற்றங்கள். ஏனென்றால், சந்தை அவ்வளவு எதிர்பார்த்து காத்திருந்தது.

முதலில் 300 புள்ளிகள் வரை கீழே சென்று, அதன் பிறகு 400 புள்ளிகள் வரை உயர்ந்து கடைசியில் ப்ளாட்டாக முடிந்தது.

கடைசி கட்ட இறங்குமுகம் பட்ஜெட்டால் அல்ல. ஐரோப்பியன் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி இங்கு பாதித்தது.

எமக்கு சந்தோசம் என்னவென்றால், கடந்த 10 மாதங்களில் 40%க்கும் மேல் உயர்வை இந்திய பங்குச்சந்தை கண்டது. இவ்வளவு உயர்வும் இன்று ஒரே நாளில் பதம் பார்க்கப்பட்டு விடுமோ என்ற பயமும் இருந்தது.

நல்ல வேளை, அருண் ஜெட்லி காப்பாற்றி விட்டார்.

நன்றி ஐயா1 

கடந்த காங்கிரஸ் ஆட்சி பட்ஜெட்டைப் பார்த்தால் ஒவ்வொரு முறையும் உணவு பாதுகாப்பு மசோதா, நூறு நாள் வேலை திட்டம், முழு கடன் தள்ளுபடி என்று பல திட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை ஒவ்வொன்றும் லட்ச கோடிகளில் பணம் விழுங்குபவை. ஆனால், அவற்றில் பலன் சரியான மக்களுக்கும் சென்றது கிடையாது. இதனால் அரசுக்கும் பலன் கிடையாது.

இந்த முறை படேல் சிலை திறப்பு, நினைவு சின்னங்கள் என்று சில திட்டங்கள் வெட்டியாக இருந்தாலும் மற்றவை எல்லாம் வளர்ச்சிக்கு வழி கொடுப்பவையே.

இதில் அதிக பயன் பெற இருப்பது ரியல் எஸ்டேட் மற்றும் கட்டமைப்பு துறை தான். 4000 கோடிக்கு பட்ஜெட் வீடுகள் கட்டிக் கொடுக்க உறுதியளிக்கப்பட்ட்டுள்ளது. சிமெண்ட், வீடு கட்டுமான உதிரி பாகங்களைத் தரும் நிறுவனங்களைக் கவனிக்கலாம்.

இது போக, வருமான வரி விலக்கு பெற வரம்பு 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் வீட்டுக் கடன் வாங்கிய அசலும் வரும். வீட்டுக் கடன் வட்டிக்கான வரம்பு 2 லட்சம் என்றும் உயர்த்தப்பட்டுள்ளது. இவை அரசுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல. ரியல் எஸ்டேட்டிற்கும் ஒரு பிளஸ் பாயிண்ட். அதே சமயத்தில் மக்களிடமும் நல்ல பெயர் கிடைக்கும்.

39,000 கோடிக்கு நெடுஞ்சாலைகள் போட திட்டமிட்டுள்ளது. அரசு ப்ராஜெக்ட்களைப் பெறும் காண்ட்ராக்ட் நிறுவனங்களைக் கவனிக்க..

இதே போல் புதிய  துறைமுகங்கள், புதிய விமான நிலையங்கள் உருவாக்கபப்டுகின்றன. இதனால் துறைமுக கட்டுமான நிறுவனங்களும், கிரீன் ஏர்போர்ட் கட்டும் நிறுவனங்களும் பார்வைக்கு வருகிறது.

சிகரெட்களுக்கு கண்ணா பின்னாவென்று (72%) வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது VST Industries என்ற நிறுவனம். ஏனென்றால், அவர்கள் தான் 64mmக்கும் அதிக நீளம் கொண்ட சிகரெட் தயாரிக்கிறார்களாம். இதனால் ITC மயிரிழையில் தப்பியது.

ஏற்கனவே நாம் சொல்லியவாறு பாதுகாப்பு துறையில் 49% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் நமது போர்ட்போலியோவில் உள்ள ஒரு பங்கு இன்னும் களத்திலே நின்று ஆடும் என்று நினைக்கிறேன்.

காலணிகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. அதனால் BATA மற்றும் liberty பங்குகள் சரியான ஏறுமுகம் கண்டது. இதில் liberty நம்ம முதலீடு பங்கு தான்..

நாம் எதிர்பார்த்தவாறு விவசாய பாசனத்திற்கு 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் ஜூன் போர்ட்போலியோவில் பரிந்துரைத்த ஒரு பங்கிற்கு உறுதியான லாபம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

வருமான வரி உச்ச வரம்பு 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தனி நபர்களுக்கு 5000 முதல் 15000 வரை வருடத்திற்கு சேமிக்கலாம். இதனைக்  கணக்கிடுவது தொடர்பாக ஒரு தனி பதிவு எழுதுகிறோம்.



கௌடா அமைதியாக இருந்து ஏற்படுத்திய பங்குச்சந்தை குழப்பத்தை ஜெட்லி சமநிலைப்படுத்தி விட்டார். பட்ஜெட் முடிந்த பிறகு உயர்ந்த 400 புள்ளிகளே இதற்கு சாட்சி.

ஆனால் நமக்கு கௌடாவால் சில பங்குகள் மலிவாக கிடைக்கின்றன. அதனை ஜூலை 15 போர்ட்போலியோவில் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறோம்.

விரும்பும் நண்பர்கள் ஜூலை 13க்கு முன் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 900 ரூபாயில் 9 பங்குகள் விளக்கங்களுடன் பரிந்துரை செய்யபப்டும். விவரங்களுக்கு, இணைப்பை பார்க்க..

இது கடந்த கால வரலாறு...
எமது மாதிரி போர்ட்போலியோ இது வரை 92% ரிடர்னும், ஏப்ரல் போர்ட்போலியோ 45% வருமானமும், ஜூன் போர்ட்போலியோ 12% வருமானமும் கொடுத்துள்ளன.

இனி கவலைப்படாமல் முதலீடுகளில் தொடரலாம். பதற்றங்கள் எல்லாம் நீங்கி விட்டன. நிதி அறிக்கைகளை மட்டும் அதிகம் கவனிக்கலாம்.

இன்னும் நிறைய எழுதலாம்..ஆனால் நமது பதிவு, ஜெட்லி பட்ஜெட்டை விட அதிக நீளமாக செல்லுவதால் இத்துடன் முடிக்கிறோம்!

English Summary:
Indian Union Budget gives the path for economical growth.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக