செவ்வாய், 8 ஜூலை, 2014

ரயில்வே பட்ஜெட்டை சிம்பிளாக முடித்த கௌடா

நேற்று சந்தையில் 500 புள்ளிகள் மேல் சரிவு ஏற்பட்டது. நேற்றைய ரயில்வே பட்ஜெட்டும் ஒரு காரணமாக அமைந்தது.

உண்மையான காரணங்கள் என்று பார்த்தால்,

ரயில்வே பட்ஜெட்ட்டால் பாதிக்கப்படும் நிறுவனங்கள் என்பது மிகக் குறைவே. ரயில்வேயை சார்ந்து இருக்கும் சில நிறுவனங்களும், சரக்கு போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்களும் மட்டுமே அதிக அளவில் பாதிக்கபப்டும்..

ஆனால் பொது பட்ஜெட்டும் ரயில்வே பட்ஜெட் போல் மிகவும் சிம்பிளாக அமைந்து விடுமோ என்ற பயத்தால் பலர் லாபத்தை உறுதி செய்ய ஆரம்பித்து விட்டனர் என்றே நினைக்கிறேன்.ரயில்வே பட்ஜெட்டை பொறுத்தவரை தங்களுக்குள் வரும் வருமானங்களுக்கு மட்டுமே பட்ஜெட் போட அனுமதி. அது போக வெளிநாட்டு முதலீட்டை உறுதி செய்யவும், அதிகப்படியான நிதியை திரட்டவும் நிதி அமைச்சகத்தின் அனுமதி தேவை. அது பொது பட்ஜெட்டில் தான் எதிரொலிக்கும்.

கௌடாவை பொறுத்த வரை நேர்மையாக பட்ஜெட் கொடுத்தள்ளார். 100 ரூபாய் வருமானம் வந்தால் 94 ரூபாய் செலவிடப்படுகிறது என்றால் அவரால் மேலே ஒன்றும் செய்து விட முடியாது. அதனால் சுத்தம், சுகாதாரம், லிப்ட், சாப்பாடு போன்றவற்றை மட்டும் அறிவித்து விட்டு அமைதியாக இருந்து விட்டார்.

ரயில்வேயில் வெளிநாட்டு முதலீட்திற்கு அனுமதி கேட்டிருப்பதும், வைர நாற்கர ரயில்வே சாலைக்கு முயற்சி எடுத்திருப்பதும் நீண்ட கால நல்ல சீர்திருத்த நடவடிக்கைகள்.

இதே போல் சரக்கு போக்குவரத்தை கையாள மற்ற நாடுகளைப் போல தனி வழித் தடங்கள் ஏற்படுத்தப்படுவதும் கட்டாயமாக பரிசீலிக்கப்பட வேண்டும்.

என்ன தான் கஷ்ட காலமாக இருந்தாலும் கொடுக்கக் கூடிய புதிய ட்ரையின்களையாவது எல்லா மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளித்து இருக்கலாம். கர்நாடகா, குஜராத் தவிர மற்ற மாநிலங்களுக்கு ஒன்றும் இல்லை போல் தெரிகிறது.

காலங்காலமாக ரயில்வே மந்திரி எந்த ஊரோ அங்கு தான் அதிக வண்டிகள் விடப்படுகின்றன. அதனால் இதற்கெல்லாம் ஒரு தனி ரயில்வே பட்ஜெட் தேவையா என்பதில் கேள்வி எழுகிறது.

தமிழ்நாடு என்பது சென்னை மட்டுமல்ல..எங்க ஊர் கன்னியாகுமரி வரை உள்ளது என்பதை மாண்புமிகு ரயில்வே மந்திரிகள் புரிந்து கொள்ள வேண்டும்..

பங்குசந்தையைப் பொறுத்தவரை நேற்றைய வீழ்ச்சி வாங்குவதற்கான நல்ல வாய்ப்பே. பொது பட்ஜெட்டில் இதை விட ஓரளவு அதிக சீர்திருத்த நடவடிக்கைகள் இருக்க வாய்ப்புள்ளது.

தனிப்பட்ட முறையில் நானும் முதலீட்டை இன்று 5% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளேன்.

English Summary:
The Indian railway budget lacks to give clarity on share market with limited plans.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்:

 1. As a long term Investor, I have not diluted my june month portfolio sofar and I have been averaging whenever market goes down,, in the last two days most of the margin of the portfolio wiped out.

  though I am not the short term trader, I have the feeling that I should have done differently selling and buying as per market sentiment. do you think that will be correct approach when huge crush happen in market...

  பதிலளிநீக்கு
 2. Even many times, I also had the same feeling Prabhu..But as a long term investor, this is correct approach only..The first thing is we can not predict this corrections correctly..Suppose if the railway budget and general budget are being good, then we might not get the sold stocks in the same prices..So in these conditions, we have to play with market in 50:50 chances only..But averaging is making us to prepare after fall down only..Also, we already know the same stock can come again to the same high price..Then with full confidence, we can invest..So decision making after incident is more safer than before..

  பதிலளிநீக்கு
 3. Thanks for the explanation, I guess we both are going in a same thought...

  பதிலளிநீக்கு