சனி, 8 நவம்பர், 2014

'முதலீடு' சமூக உதவி: 'எபோலா' ஆப்ரிக்கா நாடுகளுக்கு செல்கிறது

அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம்!

நாம் முந்தைய ஒரு கட்டுரையில் (செய்நன்றி கூறும் தருணம்) எமது கட்டண போர்ட்போலியோ சேவையில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை(5%) சமூக உதவிக்கு பயன்படுத்துவதாக கூறி இருந்தோம். அந்த கடமையை இன்று நிறைவு செய்தோம்.


நமது தளத்தில் ஜூலை மாதம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்து இருந்தோம். அந்த சமய கணக்கீட்டின் படி தளத்தின் சார்பில் 2000 ரூபாய் உதவித்தொகையாக கொடுக்க வேண்டும். தற்போது அதனுடன் எமது தனிப்பட்ட பங்காக 4000 ரூபாய் சேர்த்து 6000 ரூபாய் (100,000 KRW) சமூக சேவைக்காக கொடுக்கப்பட்டது.



இந்த உதவித் தொகை இன்று மேற்கு ஆப்ரிக்காவில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு International Medical Corps என்ற தன்னார்வ நிறுவனத்தின் மூலம் சென்றடையும். இந்த சர்வதேச நிறுவனம் எபோலா நோய்க்காக களத்தில் முழு வீச்சாக செயல்பட்டு வருகிறது.

நமது உதவி தொகைக்கான ரசீது கீழே உள்ளது.

facebook

Donation Date: Saturday, November 8, 2014 at 11:02pm, Receipt Number: 629931723783946
Hi Ramaswamy Kolappan,
Thank you for your ₩100,000 donation to International Medical Corps. On behalf of International Medical Corps at 12400 Wilshire Blvd., Suite 1500, Los Angeles, CA 90025, we thank you for your generous support. You may print this receipt for your records. This receipt confirms that you have made this donation as a charitable contribution and you are not receiving any goods or services in return. As the tax laws vary by state and by country, please consult a tax professional regarding the deductibility of this donation.
Thanks,
The Facebook Payments International Ltd Team

இன்னும் எபோலா நோய்க்கு முறையாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.  . பொருளாதாரத்திலும் அறிவியலிலும் முன்னேறிய மேற்கு நாடுகளும் ஆப்ரிக்கா நாடுகளிடம் பாராமுகமாகவே உள்ளன.

அதனால் நாம் செய்யும் ஒரு சிறு உதவியும் தக்க சமயத்தில் இருந்தால் அவர்களுக்கு பெரிதாகவே இருக்கும். அதனால் தான் இந்த வருடத்தில் ஆப்ரிக்கா நாடுகளை தேர்ந்தெடுத்தோம்.

கூடுதல் தகவலாக பேஸ்புக் நிறுவனர் மார்க் அவர்களும் இந்த முறையில் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்து உதவி செய்து உள்ளார்கள் என்றும் அறிகிறோம். உதவி செய்ய விரும்பும் நண்பர்கள் இந்த இணைப்பில் சென்று உதவி செய்யலாம்.   இது தொடர்பான பிபிசி செய்தியை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

இந்த உதவி என்பது நீங்கள் கட்டண சேவையில் கொடுக்கும் பணத்தின் ஒரு பகுதியே. அதனால் நமது தளத்தில் வெளிப்படையாக சொல்லவும் கடமைப்பட்டுள்ளோம்.

வரும் வருடங்களிலும் நமது தளத்தின் சார்பில் இந்த உதவி தொடரும் என்று உறுதி கூறுகிறோம்.

நன்றியுடன்,
முதலீடு

English Summary:
Muthaleedu website donates it's partial profit to Ebola affecting countries in Africa.


தொடர்புடைய பதிவுகள்:
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: