திங்கள், 12 மே, 2014

எல்நினோ வறட்சியில் தவிர்க்க வேண்டிய பங்குகள்

தற்போது சந்தை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. எக்சிட் போல், மோடி அலை, நிலையான அரசு என்று பலவற்றை நினைத்து சந்தை துள்ளிக் குதித்து செல்கிறது. ஆனாலும் ஒரு வித பய உணர்வு தோன்றுகிறது.


ஏனென்றால் தற்போதைக்கு தேர்தல் தொடர்பான நினைப்புகள் அனைத்தும் அனுமானங்கள் தான். அதனால் கொஞ்சம் எச்சரிக்கையாகவே பங்குகளை வாங்க வேண்டி உள்ளது.

அப்படியே அனுமானங்கள் அடிப்படையில், மோடி நிலையான அரசு அமைத்தாலும் ஒரு முக்கியமான பிரச்சினை அவருக்கு கஷ்டம் கொடுக்கலாம்.

அது தான், எல்நினோ பருவநிலை மாற்றத்தால் இந்தியாவிற்கு ஏற்படும் என்று நினைக்கப்படும் வறட்சி.

காற்றின் திசையை மாற்றும் எல் நினோ 


எல்நினோ என்பது பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தால் காற்று திசை மாறுகிறது. இதனால் உலகின் பல பகுதிகளில் மாறுபட்ட வானிலை மாற்றங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தென்மேற்கு பருவக்காற்றால் ஏற்படும் மழை பொய்க்கலாம் என்றும் எதிர்பார்க்கபப்டுகிறது. இதனால் கடுமையான வறட்சி ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது.

தற்போதைய பங்குச்சந்தையில் 'மோடி அலை' என்ற பாசிடிவ் எனேர்ஜியில் வறட்சி செய்திகள் அடிபட்டுப் போயுள்ளது. ஆனால் பங்குச்சந்தை முதலீட்டாளராக நாமும் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

எல்லா பங்குகளிலும் இதன் பாதிப்பு இருக்கலாம். ஆனால் சில பங்குகளில் கடுமையாக பாதிப்பு இருக்கலாம். அந்த பங்குகளை இனங்கொள்வதன் மூலம் நமது நஷ்டங்களையும் தவிர்க்கலாம்.

மழை பொய்க்க  40% வாய்ப்புள்ளது 

வறட்சியினால் முதலில் பாதிக்கப்படுவது விவசாயம் சார்ந்த உணவு உற்பத்தி தான். இதனால் உணவு பணவீக்கம் மீண்டும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. அவ்வாறு உயரும் போது வங்கி வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வாய்ப்பில்லை. இதனால் வங்கி பங்குகளுக்கு கொஞ்சம் பின்னடைவு தான்.

அடுத்து, விவசாயம் சார்ந்த நிறுவனங்கள் தான் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் உணவு உற்பத்தி சார்ந்த பாஸ்மதி அரிசி ஏற்றுமதி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், சர்க்கரை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், விதை உற்பத்தி நிறுவனங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம்.

இதே போல் விவசாயத்தை சார்ந்து இருக்கும் உரம் மற்றும் வேதிப்பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களையும் தவிர்க்கலாம். PI Industries, Coromandel International, Bayer Cropsciences போன்ற பங்குகளில் விருப்பப்பட வேண்டாம்.

இயற்கை பொய்த்தாலும், அரசு பொய்த்தாலும்
பாதிப்பு இவருக்குதான் 

ஆட்டோ துறையில் ட்ராக்டர் போன்ற விவசாய வாகனங்களின் விற்பனையும் கணிசமாக பாதிக்கப்படலாம். நேரடியாக பார்த்தால், மகிந்திரா நிறுவன பங்குகளை தவிர்ப்பது நல்லது.

இதே போல் FMCG துறையை சார்ந்த நுகர்வோர் நிறுவனங்களின் லாப மார்ஜினும், விலையைக் கூட்டினால் விற்பனை எண்ணிக்கையும் பாதிக்கலாம்.

ஆனாலும் கடந்த வருடம் பருவமழை நன்றாக இருந்ததால், உணவு உற்பத்தி நன்றாக இருந்தது. இதனால் தேவையான அளவு உணவு சேமிப்பில் உள்ளதாகவும்  மத்திய அரசு கூறியுள்ளது.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில், வறட்சி எளிதில் சமாளிக்கப்படும்.

அந்த சூழ்நிலையில் நாமும் அவ்வளவு பயப்பட தேவையில்லை.

ஆனாலும் மேலே சொன்ன பங்குகளில் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம்.


தமிழில் தரப்படும் DYNAMIC PORTFOLIO அடுத்து ஜூன் முதல் வாரத்தில் வெளிவருகிறது.  muthaleedu@gmail.com என்ற முகவரியில் விவரங்களை பெறலாம்.

இதற்கு முன்னர் தரப்பட்ட ஏப்ரல் மாத DYNAMIC போர்ட்போலியோ 15% அளவும்,  ஆறு மாதங்களுக்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்ட மாதிரி போர்ட்போலியோ 45% அளவும் லாபம் கொடுத்துள்ளது.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு