சனி, 31 ஆகஸ்ட், 2013

இந்திய ஊட்டச்சத்து மருந்து சந்தையை பிடிக்கும் Abbott

முந்தைய பதிவில் மருந்து நிறுவன பங்கு(pharmaceutical) பற்றி வினா கேட்டிருந்தோம். அதில் நண்பர் ஜீவன்சிவம் அவர்கள் கலந்து கொண்டார். அவருக்கு எமது நன்றிகள்! இது போல் ஒரு நண்பர் பெயரில்லாமல் Piramal என்று பின்னுட்டம் போட்டிருந்தார். கிட்டத்தட்ட அவரது விடை சில மாற்றங்களுடன் சரியானது. நண்பரே! உங்கள் பெயரை தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருக்கிறோம். நன்றிகள்!


தொடர்புடைய பதிவு:
இந்த பங்கினைக் கண்டு பிடியுங்கள்! - 2

சரியான விடை 'Abbott India'. Abbott India நிறுவனம் 'piramal pharmaceutical' நிறுவனத்தை வாங்கிக் கொண்டது.


நிறுவன அறிமுகம்:

அமெரிக்காவில் 1888ல் தொடங்கப்பட்டு, நூற்றாண்டு கண்ட நிறுவனம். முதன் முதலில் ரத்த பரிசோதனை மூலம் எய்ட்ஸ் நோயைக் கண்டறிந்த நிறுவனம். இது போல் பாக்டீரியாவை எதிர்க்கும் "Erythrocin" என்ற மருந்தையும் கண்டறிந்த நிறுவனம். உலக அளவில் "Top20 BioPharma" என்ற பட்டியலில் இடம் பெற்ற நிறுவனம். இவ்வாறு புகழ் பெற்ற நிறுவனம்.
2011ல் தன்னுடைய மருந்து ஆராய்ச்சி பிரிவை "AbbVie" என்ற பெயரில் தனியாக பிரித்தது. Solvay, Piramal போன்ற நிறுவனங்களை வாங்கிய பின்னர் இந்தியாவின் முதன்மை சந்தை மதிப்பை கொண்டுள்ளது

தயாரிப்பு பொருட்கள்:

இந்த நிறுவனம் மருந்துகள், மருத்துவ பரிசோதனை, ஊட்டச்சத்து மருந்துகள் என்று மூன்று உட்பிரிவின் கீழ் இயங்கி வருகிறது. 
வாயு தொல்லை விற்பனையில் Digene முதலிடத்தில் உள்ளது. Duphaston கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்து மருந்து. முதலிடத்தில் உள்ளது. இது போல் BRUFEN, Thyronorm, Vertin, Zolfresh, Digecaine போன்ற மருந்துகளும் குறிப்பிட்ட இடத்தை பிடித்துள்ளன.


ஒவ்வொரு வருடமும் புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 2012ல் மட்டும் ADIZA, EPTRAL, Omacor, Prothiaden- M and Obimet GX Forte போன்ற மருந்துகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஊட்டச்சத்து பொருட்களான Similac, PediaSure, Ensure, Mama’s Best, Prosure போன்ற மருந்து பொருட்களும் நல்ல சந்தை மதிப்பினைக் கொண்டுள்ளன.

இது தவிர பல மருத்துவ பரிசோதனை கருவிகளையும் தயாரித்து வருகிறது.

நிதி நிலை:


இதனுடைய வருமானம் 2012ல் 12%மும் நிகர லாபம் 20% அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு(Market Cap) 3000 கோடிக்கு அருகில் வருகிறது. P/E விகிதம் 20க்கு அருகிலும், புத்தக மதிப்பு(Book Value) 300 ரூபாய் அளவிலும் உள்ளது


இதன் சுருங்கிய நிதி அறிக்கை

வருமானம் : 1,675 கோடி('13) , 1446 கோடி('12) : +12%
லாபம் (வரிகள் முன்) : 215 கோடி('13) , 180 கோடி('12) : +20%
லாபம் (வரிகள் பின்) : 144 கோடி('13) , 120 கோடி('12) : +20%

சாதகமான அம்சங்கள்:


  • நிறுவனம் மருத்துவ சந்தையில் பல பிரிவுகளில் இயங்குவது ஒரு வித சமநிலையை ஏற்படுத்துகிறது .
  • இதன் 40% வருமானம் கடந்த 3 ஆண்டுகளில் அறிமுகப்படுத்திய மருந்துகளில் இருந்து வருவது நிறுவனத்தின் வேகமான வளர்ச்சியைக் காட்டுகிறது.
  • இந்த நிறுவனத்தின் 10 மருந்துகள் இந்திய மருந்து சந்தையில் முதல் 300 இடங்களுக்குள் வருகின்றன. 
  • நிறுவனத்தின் அடிப்படை செலவுகள் குறைந்து வருகிறது.
  • பெண்கள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மருந்துகள் விற்பனை கணிசமாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நிறுவனத்தின் ஊட்டச்சத்துகள் பிரிவு 30% வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
  • இந்திய மக்கள் தொகை உயர்வும், மருத்துவம் பற்றிய விழிப்புணர்வும் வளர்ந்து வருவதால் இந்திய மருத்துவ சந்தை 2 இலக்கத்தில் 2020 வரை வளரும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. 
  • அரசும் தமது பட்ஜெட்டில் மருத்துவத்திற்கான ஒதுக்கீடை அதிகரித்து வருவது சாதகமான் விஷயம்.

பாதகங்கள்:

புதிதாகக் கொண்டு வரப்படும் அரசின் மருந்து விலை கட்டுப்பாடு கொள்கை லாபத்தை குறைக்கலாம். அனாலும் மற்ற மருந்து நிறுவனங்களை விட இங்கு பாதிப்பு குறைவே.

தற்போதைய பங்கு விலை 1350 ரூபாய் அருகில் உள்ளது. இதில் தாரளமாக வாங்கலாம். மூன்று அல்லது நான்கு வருடங்கள் முதலீட்டில் போட்டால் 60% மேல் லாபம் எதிர் பார்க்கலாம். பங்கும் ஒரு வித பாதுகாப்பான பங்கு. குறைந்த ரிஸ்க் முதலீட்டார்களுக்கும் ஏற்றது.

இந்த நிறுவனம் பற்றி பெண்களுக்கு அதிகம் தெரியும் என்பதால் உங்க வீட்டம்மா கிட்ட கேட்டுட்டு முதலீடு பண்ணுங்க:). எனக்கு கேட்க முடியல..நேற்று சண்டை போட்டவங்க இன்னும் பேசல...அதனால பதிவு எழுத நேரம் கிடைத்தது. அந்த வகையில் சந்தோசம் தான்.:)

English Summary:
Abbott India share is recommended in Pharma segment

தொடர்பான பதிவுகள்:

40 காலாண்டுகளாக 30% லாபம் ஈட்டும் HDFC வங்கி

டிராக்டர் விற்பனையால் மேலே வந்த மகிந்திரா

LOW RISK முதலீட்டர்களுக்கு ஏற்ற BRITANNIA நிறுவனம்

APURA MINECHEM பங்கு: முதலீடு மடங்குகளில் பெருக வாய்ப்பு

இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பின் உங்கள் ஓட்டினைப் பதிவு செய்யவும். தங்கள் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயக்கமின்றி பதிவு செய்யவும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

10 கருத்துகள்:

  1. எல்லோருக்கும் தெரிந்த பிராண்டாக PediaSure மாறி வருகிறது..விரிவான விளக்கத்துக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  2. Pediasure is waste. It is a glorifed சத்துமாவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks for your comments! This article is based on their economical data. Since I am not much familiar with 'Chemistry', I can not comment on your's..

      நீக்கு
  3. very good article !!!. really worth reading your's..continue writing !!!. all the best..

    பதிலளிநீக்கு
  4. நன்றி. நீங்கள் பரிந்துரைக்கும் பங்கை அதே துறையில் இருக்கும் மற்ற நல்ல பங்குகளுடன் COMPARISON செய்து கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். சன் PHARMA பற்றி உங்களது ஒபினியன் என்ன?

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dear Iyappan,
      Thanks for your feedback!
      I prefer value based investing. In this, more preference will be given to valuation, future growth, and management. Comparison with other stocks also needed, but it's least priority. In important points, I will compare with other stocks.

      Remaining, leave to the readers and likes to get the questions on the same. This will be interesting for me and improve our 2-way interaction.

      Continue on the next comment..

      நீக்கு
    2. Regarding Sun Pharma..
      In pharma space, all are good stocks only. Price control policy, R&D, patents and rupee depreciation will play key role. In that concern, I prefer Dr.Reddy or Lupin over Sun pharma. Patent issues also affect their R&D division. Anyway, still it's good stock only.

      I am really happy with your questions. Thanks for your participation!

      நீக்கு