புதன், 21 ஆகஸ்ட், 2013

இந்த பங்கை கண்டு பிடியுங்கள்! -1

இன்று எமது தளத்தின் மொத்த வருகை எண்ணிக்கை பத்தாயிரத்தை எதிர் பார்த்ததை விட குறைந்த தினங்களில் தாண்டியுள்ளது. நமது பதிவுகளுக்கு கிடைத்த வருகை எண்ணிக்கையும் அதனின் கிடைத்த பின்னூட்டங்களும் ஒரு மிகப் பெரிய உற்சாகத்தை அளித்தன.


சில நண்பர்கள் நமது தவறுகளை சுட்டி காட்டியிருந்தனர். இதனை நேர்மறையாக எடுத்து சரி செய்கிறோம். நிறைய நண்பர்கள் பங்குகளை பரிந்துரையுங்கள் என்று கேட்டிருந்தனர். அவர்களுக்காக தகவல்களை திரட்டி வருகிறோம். நண்பர்களுக்கு எமது நன்றிகள்!


எமது நோக்கம் முதலில் அதிக அளவு சந்தை அடிப்படைகளை பகிர்வது. அதனிடையே சில பங்குகளை நீண்ட கால முதலீட்டிற்கு விளக்கங்களுடன் பரிந்துரைப்பது. ஒவ்வொரு காலாண்டு நிதி அறிக்கை வெளிவந்த பிறகு அதே  பங்குகளின் நிலவரத்தை மீண்டும் விவாதிப்பது என்று வெளிப்படையாகவே இருக்க விரும்புகிறோம்.

இது வரை FMCG, AUTO மற்றும் LOW CAP என்ற பிரிவுகளில் 3 பங்குகளை பரிந்துரைத்துள்ளோம். கீழ் உள்ள தொடர்புகளை காண்க.

டிராக்டர் விற்பனையால் மேலே வந்த மகிந்திரா

LOW RISK முதலீட்டர்களுக்கு ஏற்ற BRITANNIA நிறுவனம்

ASHAPURA MINECHEM பங்கு: முதலீடு மடங்குகளில் பெருக வாய்ப்பு



அடுத்து இன்னொரு பங்கினை பற்றி எழுத விரும்புகிறேன். தற்பொழுது வேலைப்பளுவுடன் உள்ளதால் சனிக்கிழமை விரிவுடன் பதிவிடுகிறேன். அதற்கு முன் அந்த பங்கைப் பற்றி ஒரு சிறிய வினாடி வினா.

இந்த பங்கை கண்டு பிடியுங்கள்.

"இந்த பங்கு வங்கி துறையை சார்ந்தது. கடந்த 40 காலாண்டுகளாக அதாவது 10 வருடங்களாக குறைந்தபட்சம் 30% லாபம் ஈட்டி வந்துள்ளது. நிகர NPA 0.5% க்கும் குறைவாக உள்ளது."

உங்கள் விடையினை பின்னுட்டங்களில் இடுங்கள்.

இதனை கடின போட்டியாக நினைக்காதீர்கள். நமக்கிடையே இருவழித் தொடர்பை அதிகரிப்பதற்க்கும் உங்கள் பங்கு ஆர்வத்தை தூண்டுவதற்கும் தான். மற்றபடி நாம் கேள்வி கேட்குமளவு ஆசிரியர் அல்ல.

English Summary:
Find this stock? Quiz

இது தான் விடை.
40 காலாண்டுகளாக 30% லாபம் ஈட்டும் HDFC வங்கி



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

8 கருத்துகள்: