செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

SBIன் லாபம் சரிந்தது ஏன்?

இந்திய வங்கி துறையில் முதுகெலும்பாக உள்ள SBI வங்கி இந்த காலாண்டின் முடிவுகளை நேற்று அறிவித்தது. கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட நிகர லாபம் 14% குறைந்துள்ளது. (ஜூன்'13).


இதற்கு முக்கிய காரணம் NPA அளவு அதிகரித்ததே. NPA என்பது NON PERFORMING ASSET. அதாவது வெளியில் கொடுக்கப்பட்ட கடன்கள் திறன் பட செயல்பட முடியாமல்போனதால் கடன்களால் கிடைக்கும் லாபம் குறைந்துள்ளது . தற்போது ஜவுளி, மின்துறை, சுரங்கம் போன்ற துறையில் செயல்படும் நிறுவனங்கள் வாங்கிய கடனை அல்லது வட்டியை திருப்பி செலுத்த முடியாத நிலையிலிருப்பது இதற்கு முக்கிய காரணம்.




NPAவால்  அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது பொதுத்துறை வங்கி நிறுவனங்களே.
உதாரணத்துக்கு விஜய் மல்லையாவின் KING FISHER நிறுவனமும் கடனை திருப்பி செலுத்த முடியாமல் திமிர் பேச்சு பேசி வருகிறது. குறைந்த தொகைக்கு வீட்டு கடன், கல்வி கடன் வாங்கும் சாதாரண மக்களிடம் காட்டும் கெடுபிடியை இந்த தொழில் முதலைகளிடம் அரசு காட்ட முடியாதது வருந்ததக்கததே.


இந்த நிலை இன்னும் இந்த ஆண்டு முழுவதும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதனால் நண்பர்கள் பொதுத்துறை வங்கி பங்குகளைத் தவிர்ப்பது நல்லது.

English Summary:
SBI profit is going down due to rise in NPA.

தொடர்புடைய பதிவுகள்:
பங்கு ஒரு பார்வை: மகிந்திரா & மகிந்திரா


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: