புதன், 18 ஜூன், 2014

நம்பிக்கையைத் தந்த இந்திய பங்குச்சந்தை

இராக் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளதால் நமது போர்ட்போலியோவில் இணைந்த பல நண்பர்கள் மின் அஞ்சல்களில் தொடர்பு கொண்டு என்ன செய்வது? என்று கேட்டு இருந்தாரகள்.


இந்த மாதிரி அரசியல் பிரச்சினைகளுக்கு யாரும் அவ்வளவு விரைவில் கருத்துக்கள் கூற முடியாது.

ஆனால் நீண்ட கால முதலீட்டில் இது ஒரு சிறிய நிகழ்வு தான். தின வர்த்தகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது ஓரிரு மாதங்களில் வர்த்தகம் செய்வோர்களுக்கு கணிக்கமுடியாத 'இராக் பிரச்சினை; என்பது ஒரு பெரிய நிகழ்வு. அதனை புறந்தள்ளி வர்த்தகம் செய்ய முடியாது.

இதனைத் தான் பதிலாக அனுப்பி இருந்தோம்.

ஆனால் இந்த வாரம் சந்தை மீண்டு எழுந்ததைப் பார்க்கையில் சந்தையின் ஒவ்வொரு தாழ்வும் வாங்குவதற்கான வாய்ப்புகள் என்றே தெரிகிறது. ஒரு புதிய நம்பிக்கையை கொடுக்கிறது.

தொழில் முன்னேற்றம் ஏற்படுகிறதோ இல்லையோ, ஆனால் முதலீட்டாளர்களிடம் ஒரு அபரிமிதமான நம்பிக்கை தெரிகிறது. சென்டிமெண்டில் ஊறிப்போன இந்திய சந்தைக்கு இது ஒரு அத்தியாவசிய தேவை.

கரடியை விட காளை வீரியமாக உள்ளார்.

நேற்று பணவீக்கதைக் கட்டுப்படுத்தவதற்காக பிரதம மந்திரி கூட்டிய அவசர கூட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. முக்கியமான பிரச்சனைகளில் இந்த அளவு விரைவாக செயல்பட்டால் தான் மக்களுக்கும் நம்பிக்கை பிறக்கும்.

ஏறிக் கொண்டே செல்லும் சந்தையில் கொஞ்சம் இறக்கங்கள் இருப்பது நல்லது தான். அப்பொழுது தான் பங்குகளையும் வாங்க முடியும். எந்த பங்கு எவ்வளவு உயரம் வரை சென்று மீண்டும் குறைகிறது? என்பதையும் கணிக்க முடியும்.

'இராக் பிரச்சினை' நமக்கு ஜூலை போர்ட்போலியோவை தயாரிப்பதற்கும் எளிதாக்கி இருக்கிறது. பல பங்குகள் குறைவான விலைகளில் கிடைக்கின்றன. இதனால் நாம் எதிர்பார்க்கும் 40% லாபத்தையும் எளிதில் தாண்டி செல்லும் என்று நினைக்கிறோம்.

900 ரூபாயில் 9 பங்குகள் நீண்ட கால முதலீட்டிற்காக பரிந்துரை செய்யப்படும். நண்பர்கள் விருப்பமிருந்தால் இணைந்து கொள்ளலாம். muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

ஒரு நண்பர் கேட்டு இருந்தார். போர்ட்போலியோவில் உள்ள பங்குகளை சரி சமமாக முதலீடு செய்ய வேண்டுமா? அல்லது எப்படி முதலீடு செய்வது என்று?

அந்த விவரங்களையும் நாமே கொடுத்து விடுகிறோம்.  எந்த பங்குகள் எந்த சதவீதத்தில் முதலீடு செய்ய வேண்டும்? என்பது உட்பட, அணைத்து தேவையான விவரங்களும் நமது ரிப்போர்ட்டில் இருக்கும். அதனால் கவலைப்பட வேண்டாம்.

கீழே ஏப்ரல் போர்ட்போலியோவின் சில பகுதிகளை தந்துள்ளோம். புரிவதற்கு எளிதாக இருக்கும் வகையில் இருக்கும்.



கடந்த முறை ஜூன் போர்ட்போலியோ ஓரிரு தினங்களில் 3% மேல் ஏற்றம் கண்டு விட்டதால், சிறு தாமதத்தில் சில நண்பர்கள் விரும்பிக் கேட்ட பிறகும், போர்ட்போலியோவைக் கொடுக்க முடியாமல் போய் விட்டது. அதனால் இந்த முறை தேவைப்படும் நண்பர்கள் சரியாக திட்டமிட்டுக் கொள்ளலாம்.

கீழே உள்ள இணைப்புகளில் நமது கடந்த கால போர்ட்போலியோ எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைப் பெறலாம்.

English Summary:
Still Indian share market is giving the hope for strong position.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

8 கருத்துகள்:

  1. Hi Rama,

    Just would like to know if your portfolio distribution mail includes an excel sheet which could be used to calculate the number of shares per company when we enter the total investment amount?

    பதிலளிநீக்கு
  2. I have ICICI direct account. Which brokerage plan is good if we do invest with your portfolio and not going to any other investment / trade?
    /Jai

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I suggest to continue with the same demat account.

      நீக்கு
    2. Hi Jai,

      Here is my suggestion...

      I have done the analysis of the best brokerage one month back. to my analysis HDFC and ICICI both brokerage charges on higher side. I guess .5% that mean Rs.500 (1 Lakh), I am using Sharekhan where they are providing me .15% Rs.150 (1 Lakh)

      Comparison of Share broker can be seen in the below link.
      http://www.indiansharebroker.com/

      If you are long term invester and comfort in ICICI, you can go with that otherwise you do the analysis as per the link.

      Even the link will not show the actual charges of the share brokers. It depends on how hard you negotiate with them. for me Sharekhan was quoting me .4% and finally he agreed to provide me .15% and more important there is no accounting opening charges. Only Annual charges Rs. 400 to be done.

      Even if you would like to do in options market aswell, I guess Zerodha will be the best pick.

      Do your analysis as per your investment amount and take the good decision.

      All the best.....

      நீக்கு
    3. Thanks for your reply.
      My question is "Which brokerage plan to choose?". ICICI Direct offer "I-Save plan" and "I-Secure Plan"?

      நீக்கு
    4. Dear Jai,

      If you are trading more than 25 lakhs in a quarter, then I-save is the best option. Otherwise go for I-Secure Plan which is fixed charges of 0.55%.

      நீக்கு
    5. Thanks Prabhu for providing the information!

      நீக்கு