ஞாயிறு, 27 ஜூலை, 2014

வருமான வரியை இலவசமாகவே பதிவு செய்யும் வழி

வருமான வரியைப் பதிவு செய்ய கடைசி நாள் ஜூலை 31 நெருங்கி வருகிறது.

லோன் எடுப்பதிலிருந்து விசா கிடைப்பது வரை வருமான வரி சான்றிதழ் தேவையாக இருப்பதால் அதனைப் பதிவு செய்து வைத்து இருப்பது நல்லது.



இதற்கு முன் சில இடைத்தரகர்கள் மூலமே வருமான வரி பதிவு செய்ய வேண்டி இருந்தது. அதற்கு 250 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இல்லாவிட்டால், அரசு அலுவலத்தில் கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டி இருக்கும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு ஆன்லைனிலே வருமான வரி பதிவு செய்யலாம் என்ற முறையைக் கொண்டு வந்த பிறகு எல்லாம் எளிதாகி விட்டது.


உங்கள வருமான வரியைக் கணக்கிட கீழ் உள்ள எமது கட்டுரைகளில் விவரங்களைக் காணலாம்.

வருமான வரி படிவங்களில் ITR என்று சொல்லி பல படிவங்கள் உள்ளன. அதில் நமக்கு உரியதை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • மாத சம்பளக்கார்கள் ITR-1 என்ற படிவத்தை பயன்படுத்த வேண்டும்.
  • மாத சம்பளம் வாங்கி பங்குகள் மூலமோ, சொத்து விற்றோ "Capital Gain" என்ற வருமானம் கிடைத்து இருந்தால் ITR-2 படிவத்தை நிரப்ப வேண்டும்.

மற்ற படிவங்களை தொழில்கள் மூலம் கிடைத்த வருமானம் உடையவர்கள் பயன்படுத்த வேண்டும்.

ஆன்லைனில் வருமான வரியை பதிவு செய்ய கீழே உள்ள வழிமுறைகளை பயன்படுத்தலாம். முதல் முறை சிறிது கடினமாக இருக்கலாம். ஆனால் அதன் பிறகு மிக எளிதாகி விடும்.

STEPS:
1. இந்த வலைதள முகவரிக்கு செல்லவும்.
https://incometaxindiaefiling.gov.in/

2. உங்கள் 'PAN' எண்ணில் ஒரு 'user' உருவாக்கவும்.

3. அதன் பிறகு 'Login' செய்யவும். அதில் "Quick e-File Return" என்பதை சொடுக்கவும்.

4. அடுத்து உரிய படிவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். (பொதுவானது ITR-1)

5. வருடத்தை 2014-15 என்று தேர்வு செய்யவும்

6. உங்கள் 'form 16'ல் உள்ளதை பதியவும்.

7. 'Submit' செய்யவும்.

8. உங்கள் மின்னஞ்சலுக்கு 'ITR-V' அனுப்பப்படும். அதனை பிரிண்ட் எடுத்து கையொப்பமிட்டு பிறகு வருமான வரி அலுவலகத்துக்கு அஞ்சலில் அனுப்பவும். கொரியர் சேவைகளைப் பயன்படுத்தாமல் வழக்கமான அஞ்சல் சேவையை மட்டும் பயன்படுத்தவும்.

உங்களிடமிருந்து அதிகப்படியான வரி பிடித்தம் செய்யப்பட்டு இருந்தால் நீங்கள் பதிவு செய்த வங்கி கணக்கிற்கு அந்த பணம் வந்து சேர்ந்து விடும்.

தற்போது ஒழுங்காக அந்த பணம் வந்து சேர்வதில் மகிழ்ச்சி!

அடுத்த வருடத்தில் வருமான வரி கணக்குகளில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் நமக்கு அதிக பலன் கிடைக்கலாம். அதனை இந்த கட்டுரையில் காணலாம்.

English Summary:
<!–- google_ad_section_start -–> Tips for filing Income Tax in India. The IT Dept's online system eases tax filing and avoid intermediate tax consultants need.
<!–- google_ad_section_end -–>
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

  1. NRE வருமான வரி பதிவு செய்ய வேண்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருமானம் இந்தியாவில் இரண்டு லட்சத்துக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் வருமான வரி பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை.

      நீக்கு
  2. //வருடத்தை 2014-15 என்று தேர்வு செய்யவும்//
    நண்பரே ஒரு சந்தேகம். கடந்த ஆண்டிற்கான வருமானத்தைக் கணக்கிட்டுதானே இப்போது அதாவது ஜூலை இறுதியில் வரிமானவரி தாக்கல் செய்கிறோம். அப்படியிருக்க வருடத்தை தேர்வு செய்யும்போது 2013-14 என்றுதானே தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் கட்டுரையில் 2014-15 என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கேள்விக்கு நன்றி! இதில் வருடம் என்பது Income Tax Assessment Year. 2014-15 என்பது Income Tax Assessment Year. 2013-14 என்பது Financial year. "The Income Tax Department has released the Income Tax Return Forms for Assessment Year 2014-15 (Financial Year 2013-14)."

      நீக்கு