செவ்வாய், 17 ஜூன், 2014

கிராமப்புறத்தை சேர்ந்தவரா? சூப்பர் பாலிசி இருக்கிறது..

இன்சூரன்ஸ் பாலிசி என்றால் முதலில் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி தான். அரசின் உத்தரவாதம் இருப்பது முக்கிய காரணம்.

தனியார் நிறுவனம் என்றால், 20 வருடம் கழித்து ஒரு நிறுவனம் இருக்குமா என்ற கேள்விக்குறியில் முதலீடு செய்வது தயக்கமாக இருக்கலாம்.


எல்.ஐ.சி போல் அரசின் உத்தரவாதத்துடன், அரசினால் நடத்தப்படும், ஆனால் எல்.ஐ.சியை விட ஒரு நல்ல காப்பீடு திட்டம் இருக்கிறது. இந்த திட்டம் தபால் நிலையங்கள் மூலம் நடத்தப்படுகிறது.

தபால் நிலையம் என்பதால் என்னவோ அவ்வளவாக விளம்பரம் தரப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். இணையத்தில் கூட அவ்வளவு தகவல்கள் இல்லை.

எமக்கும் எங்கள் ஊர் போஸ்ட் மாஸ்டரிடம் பேசிக் கொண்டிருந்த போது தான் இதனைப் பற்றி தெரிய வந்தது.

ஏற்கனவே "Postal Life Insurance" என்ற பெயரில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அஞ்சலகங்கள் மூலம் செயல்பட்டு வந்தது. இதில் முக்கியமான பலன் என்னவென்றால் எல்.ஐ.சியை விட குறைவான பிரீமியம் தொகையும், இறுதியில் வழங்கப்படும் போனசும் அதிகமாக இருப்பது. அதாவது அரசும் தனது பங்கிற்கு சிறு தொகையினை அஞ்சலகம் மூலம் நமக்குத் தருகிறது.

முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் இருந்த இந்த பாலிசி 1993 முதல் பொதுமக்களுக்கும் விரிவாக்கப்பட்டது. அதில் ஒரு முக்கியமான நிபந்தனை அந்த அஞ்சலகம் கிராமப்புறத்தில் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கான இந்த திட்டத்தின் பெயர் "Rural Postal Life Insurance"

இதனால் சென்னை, மதுரை போன்ற மாநகராட்சிகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது. இரண்டாம் நிலை நகராட்சிகளுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. உங்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தில் விசாரித்துக் கொள்ளுங்கள்.

இன்னும் விளம்பரம் தேவை 

எப்படி பலன் கிடைக்கிறது? என்பதை உதாரணத்துடன் விளக்குகிறோம்.

நீங்கள் எல்.ஐ.சியில் 20 வருட காலத்திற்கு ஒரு லட்சத்திற்கு பாலிசி எடுத்தால் மாதம் 442 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டும். ஆனால் அதே விதமான பாலிசிக்கு அஞ்சலகத்தில் 400 ரூபாய் பிரீமியம் கட்டினால் போதும். ஆக, பிரீமியத்தில் மட்டும் மாதம் 42 ரூபாய் சேமிக்கலாம்.

இதே போல் போனஸ் வருடத்திற்கு ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் அஞ்சலகத்தில் 70 ரூபாய் அளிக்கப்படுகிறது. இதனால் 20 வருடம் கழித்து ஒரு லட்ச ரூபாய் பாலிசிக்கு 2,40,000 ரூபாய் கிடைக்கும். அதாவது நாம் கட்டிய பிரீமியம் போக, நமக்கு கிடைத்த வருமானம் 1,44,000.

ஆனால், எல்.ஐ.சியில் போனஸ் வருடத்திற்கு ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 42 ரூபாய் போனஸாக வழங்கப்படுகிறது. இறுதியில் Termilan Bonus என்று ஆயிரம் ரூபாய்க்கு 200 ரூபாய் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் ஒரு லட்ச ரூபாய் பாலிசியில் 20 வருடம் கழித்து 2,04,000 ரூபாய் கிடைக்கும். இதில் நாம் கட்டிய பிரீமியதைக் கழித்துக் கொண்டால் 98,000 ரூபாய் வருமானம்.

மேலோட்டமாக பார்த்தால்,

20 வருடங்கள் கழித்து ஒரு லட்ச ரூபாய்க்கு =>
அஞ்சலகக் காப்பீட்டில், கிடைத்த வருமானம் 1,44,000 ரூபாய்.
எல்.ஐ.சியில் கிடைத்த வருமானம் 98,000 மட்டும்.

அஞ்சலகத்தில் ஒரு லட்ச ரூபாய் பாலிசியில் மட்டும் எல்.ஐ.சியை விட 46,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது.

பாலிசி தொகை கூடும் போது இதை விட நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் அஞ்சலகத்தில் அதிகபட்சமாக மூன்று லட்சம் வரை மட்டுமே பாலிசி எடுக்க முடியும். எல்.ஐ.சி யில் இப்படியொரு எல்லை இல்லை.

எல்.ஐ.சி பாலிசி போல் வரி விலக்கு சலுகையும் பெற்றுக் கொள்ளலாம்.

நாமும் கடந்த 8 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். பிரீமியம் கட்டுவதில் சிரமங்கள் ஒன்றும் இல்லை. அஞ்சலகத்திலும் முகவர்கள் உள்ளனர். அவர்கள் வீடு வந்து பிரீமியம் வாங்கி செல்கின்றனர்.

English Summary:
India Post is giving better insurance policy for rural people with less premium amount and more returns. Safe investment under Government control.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்:


  1. ஆயுள் காப்பீடு பற்றி எனக்கு ஒரு மிகப் பெரிய குறை.....

    காப்பீடு என்பதன் அர்த்தமே, இழப்பு நிவர்த்தி என்பது தானே? அந்த இழப்பு நிவர்த்தி என்பது யாரால் பூர்த்தி செய்யப்படுகிறது? மற்ற அங்கத்தினர்களால்....அப்படியிருக்க, காப்பீட்டு நிறுவனங்கள் இதிலிருந்து லாபம் அடைவது எந்த விதத்தில் நியாயம்? Administrative charges ஆக ஒரு சிறிய தொகையை (அரசாங்கமல்லாத தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்) வேண்டுமானால் வசூலித்துக் கொள்ளலாம்.....

    மேலும், Term Insurance policy களை முன்னிலைப்படுத்தினால் தான் மக்களுக்கு உண்மையான காப்பீடு கிடைக்கும்....அதை விடுத்து, காப்பீட்டிலும் சேமிப்பு என்ற ஒரு அங்கத்தைச் சேர்த்து உண்மையான காப்பீட்டின் மதிப்பைக் குறைத்து மனித உயிர்களின் விலை அடிமட்டத்தில் மதிப்பிடப் படுகிறது....

    உதாரணத்திற்கு என்னுடைய இன்றைய active insurance policy களின் மொத்த மதிப்பு ரூபாய் நான்கு லட்சம்....இந்தத் தொகை என் குடும்பத்தின் ஆறு மாதத் தேவையை கூடப் பூர்த்தி செய்யாது.....ஆனால் நான் கட்டும் premium அதே அளவில் திரும்ப கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன....யாருக்கு வேண்டும் இந்த ஆண்டு சந்தாவான ரூபாய் 40,000? இதே 40,000 ரூபாய் (smoker & age factor) எனக்கு ஒரு கோடி ரூபாய் வரை காப்பீடு பெற்றுத் தரும்.... ஆனால் காப்பீட்டு நிறுவனங்களுக்கான இலக்கு term insurance premium தொகையை அதிகரிப்பதல்ல.....endowment policy premium தொகையைப் பெருக்குவதில் மட்டுமே....

    அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் இணைந்து மக்களை ஏமாற்றுவதை யாருமே வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதில்லை....

    இன்று எந்தக் காப்பீட்டு நிறுவனம் நம்முடைய savings element தொகைக்கு guaranteed return கொடுக்கிறது? அப்படியே உத்திரவாதம் கொடுத்தால் அந்த உத்திரவாத percentage return வேறு எந்த வகையிலும் கிடைக்காத நிலையிலா நாம் இருக்கிறோம்?

    சேமிப்பை காப்பீட்டில் சேர்ப்பதால் காப்பீட்டின் மகத்துவம் குறைந்து விடுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இந்தியாவில் காப்பீடும், சேமிப்பும் தவறாக புரியப்பட்டு இருக்கிறது. இதனை அரசு தான் முறைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
  2. Hi, I want to enroll for me and my wife.
    Which Rural scheme is best. Also i don't see maximum sum assured 3L

    http://www.indg.in/social-sector/Postal%20Life%20Insurence%20Schemes.pdf

    பதிலளிநீக்கு