கடந்த ஒரு பதிவில் கச்சா என்னைய் குறைவிற்கான காரணங்களைப் பற்றி கட்டுரை எழுதி இருந்தோம். இந்த பகுதியில் பெட்ரோலியம் பொருட்களின் விலை குறைவால் எந்தெந்த துறைகள் பலன் பெறும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே நமது செய்திகளில் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களின் போது OMC என்று சொல்லப்படும் Oil Marketing Companies நிறுவனங்கள் தான் அதிக அளவில் உற்று நோக்கப்படும்.
இந்த பிரிவில் தான் Bharat Petrolium, Hindustan Petrolium, ONGC போன்ற பொது துறை நிறுவனங்கள் வருகின்றன. இவை நேரடியாக எண்ணெய் விலை மாற்றங்களால் பாதிக்கபப்டுவதால் செய்திகளுக்குள் வந்து விடுகின்றன.
ஆனால் கச்சா எண்ணெய் என்பது வெறும் பெட்ரோல், டீஸல் போன்றவற்றை மட்டும் கொண்டிருப்பதல்ல என்பதை +2 புத்தகத்தில் படித்து இருப்போம். ஆமாம். ஒவ்வொரு வெப்பநிலையில் சூடுபடுத்தும் போது கச்சா எண்ணெய் பல வித மூலப் பொருட்களை தருகிறது.
இந்த மூலப் பொருட்கள் தான் பல தொழிற்சாலைகளுக்கு அடிப்படையான ஒன்று. கச்சா எண்ணெய் விலை குறையும் போது இந்த தொழிற்சாலைகளின் லாபம் ஒன்று முதல் மூன்று சதவீதம் வரை அதிகரிக்கும்.
அதனால் எல்லாரும் ஒரு இடத்தை உற்றுப் பார்க்கும் போது நாம் மட்டும் ரகசியமாக ஒதுங்கி இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யும் போது ரிடர்ன் கணிசமாக அதிகரிக்கும்.
மேல் உள்ள படத்தில் பார்த்தால் விவரமாக தெரியும். கச்சா எண்ணெய் எத்தனை விதமான பெட்ரோலிய பொருட்களை தருகிறது என்று. இதனை அடிப்படையாக வைத்து எந்த துறைகள் பலன் பெறுகிறது என்பதை பார்ப்போம்.
இது போக மருந்து நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள், ரப்பர் நிறுவனங்கள் என்று பல துறையை சார்ந்த நிறுவனங்களும் மறைமுகமாக பயன் பெறும். மேல் உள்ள துறைகள் அதிக அளவில் பயன் பெறுவதால் அவைகளை உற்று நோக்குவது அதிக பலன் தரும்.
இவை எல்லாம் பொதுவான காரணங்களால் பயன் பெறுபவை. ஆனாலும் VALUE INVESTING முறையை பின்பற்றி நிறுவனங்களின் பங்குகளை தேர்ந்தேடுப்பது என்பதும் இங்கு அவசியமான ஒன்று.
English Summary:
Crude Oil price falls maximizes the profit margin in various companies like Jet, Paint, Fertilizer, Pesticides. Using the correct time increases our equity investment returns significantly.
தொடர்பான கட்டுரைகள்:
பொதுவாகவே நமது செய்திகளில் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களின் போது OMC என்று சொல்லப்படும் Oil Marketing Companies நிறுவனங்கள் தான் அதிக அளவில் உற்று நோக்கப்படும்.
இந்த பிரிவில் தான் Bharat Petrolium, Hindustan Petrolium, ONGC போன்ற பொது துறை நிறுவனங்கள் வருகின்றன. இவை நேரடியாக எண்ணெய் விலை மாற்றங்களால் பாதிக்கபப்டுவதால் செய்திகளுக்குள் வந்து விடுகின்றன.
ஆனால் கச்சா எண்ணெய் என்பது வெறும் பெட்ரோல், டீஸல் போன்றவற்றை மட்டும் கொண்டிருப்பதல்ல என்பதை +2 புத்தகத்தில் படித்து இருப்போம். ஆமாம். ஒவ்வொரு வெப்பநிலையில் சூடுபடுத்தும் போது கச்சா எண்ணெய் பல வித மூலப் பொருட்களை தருகிறது.
இந்த மூலப் பொருட்கள் தான் பல தொழிற்சாலைகளுக்கு அடிப்படையான ஒன்று. கச்சா எண்ணெய் விலை குறையும் போது இந்த தொழிற்சாலைகளின் லாபம் ஒன்று முதல் மூன்று சதவீதம் வரை அதிகரிக்கும்.
அதனால் எல்லாரும் ஒரு இடத்தை உற்றுப் பார்க்கும் போது நாம் மட்டும் ரகசியமாக ஒதுங்கி இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யும் போது ரிடர்ன் கணிசமாக அதிகரிக்கும்.
மேல் உள்ள படத்தில் பார்த்தால் விவரமாக தெரியும். கச்சா எண்ணெய் எத்தனை விதமான பெட்ரோலிய பொருட்களை தருகிறது என்று. இதனை அடிப்படையாக வைத்து எந்த துறைகள் பலன் பெறுகிறது என்பதை பார்ப்போம்.
JET COMPANIES
விமான நிறுவனங்களின் முக்கிய பிரச்சினை எரிபொருள். இதனால் கச்சா எண்ணெய் விலை குறையும் போது இந்த நிறுவனங்கள் நேரடியாக பயன்பெறும். ஜூன்ஜூன்வாலா SPICEJET பங்குகளை வாங்கி குவிப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.PAINT COMPANIES
பெயிண்ட் தயாரிக்க தேவையான முக்கிய மூலப் பொருள் கச்சா எண்ணையிலிருந்து வருவதால் பெயிண்ட் நிறுவனங்கள் லாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.FERTILIZER,PESTICIDES
உரம் மற்றும் பூச்சிகொல்லி நிறுவனங்களின் மூலப் பொருட்கள் விலை குறைவதால் லாப விகிதம் கூட வாய்ப்பு உள்ளது.INFRA COMPANIES
நெடுஞ்சாலை போட தேவையான தார் மூலப் பொருள் விலை குறைவதால் அரசின் நெடுஞ்சாலை துறை காண்ட்ராக்ட் நிறுவனங்களின் செலவு குறையும்.SHIP COMPANIES
விமானங்களைப் போல் கப்பல் எரிபொருள் செலவும் மிச்சமாவதால் இவையும் பயன் பெறுகின்றன.ENGINEERING COMPANIES
உராய்வு எண்ணெய் ( LUBRICANT OIL ) விலை குறைவதால் இந்த நிறுவனங்களும் பயன் பெறுகின்றன.இது போக மருந்து நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள், ரப்பர் நிறுவனங்கள் என்று பல துறையை சார்ந்த நிறுவனங்களும் மறைமுகமாக பயன் பெறும். மேல் உள்ள துறைகள் அதிக அளவில் பயன் பெறுவதால் அவைகளை உற்று நோக்குவது அதிக பலன் தரும்.
இவை எல்லாம் பொதுவான காரணங்களால் பயன் பெறுபவை. ஆனாலும் VALUE INVESTING முறையை பின்பற்றி நிறுவனங்களின் பங்குகளை தேர்ந்தேடுப்பது என்பதும் இங்கு அவசியமான ஒன்று.
English Summary:
Crude Oil price falls maximizes the profit margin in various companies like Jet, Paint, Fertilizer, Pesticides. Using the correct time increases our equity investment returns significantly.
தொடர்பான கட்டுரைகள்:
- முக்கோண அரசியலில் அடிமாட்டு விலைக்கு செல்லும் பெட்ரோல்
- ஆயில் விலை குறைந்ததால் உற்சாகத்தில் பெட்ரோல் பங்குகள்
- அமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக