வியாழன், 4 டிசம்பர், 2014

புகை பிடித்தாலும் கேடு, பிடிக்காவிட்டாலும் கேடு தான்.

நேற்று முன்தினம் மத்திய அரசு கடைகளில் சில்லறையாக சிகெரட் விற்க கூடாது என்று சொல்லி இருந்தது.


நம்ம ஊர்ல லூஸ்ல சிகெரட் வாங்குவது மிகவும் குறைவு. ஏதோ ஒன்று, இரண்டு வாங்கி அப்பொழுதே புகைத்து விட்டு ஹால்ஸ் மிட்டாய் சாப்பிட்டு புகை வாடையை போக்கி மனைவியிடம் நல்ல பெயர் வாங்கும் நமக்கு இந்த உத்தரவு பேரிடியாக அமைந்தது.இனி மொத்தமாக வாங்கி வைத்துக்கணும். அதை ஒளித்து வைக்க இடம் பார்க்கணும். ஒளிந்து போய் பிடிக்கணும். பற்ற வைப்பதற்கு ஒரு லைட்டர் வேற வாங்கி வைத்துக்கணும் என்ற நிலைமை வந்தது கொஞ்சம் கடினமான நிலை தான்.

இதனால் சிகெரட் விற்பனை பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் ITC போன்ற நிறுவனங்களின் பங்குகள் படு வீழ்ச்சியை சந்தித்தன.

நேற்று அதே அரசு அந்த உத்தரவில் இருந்து பின் வாங்கியது.

புகையிலை ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தான் அதிகமாக பயிரிடப்படுகிறது. அந்த மாநில விவசாயிகள் வெங்கையா நாயுடு அவர்களை சந்தித்து தங்களுக்கு நேரும் துயரங்களைக் கூறியதால் அரசு அந்த உத்தரவை பரிசீலிப்பதாக கூறி உள்ளது.

இந்த காரணம் எல்லாம் கேட்க நல்லாத் தான் இருக்குது. ஆனால் நம்ப முடியவில்லை.

இந்த முடிவிற்கு பின்னால் சிகெரட் கம்பனிகளின் கைவரிசை கட்டாயமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இல்லா விட்டால் விவசாயிகள் பிரச்சினை என்றால் அவ்வளவு விரைவில் முடிவு எடுக்கும் நிலையில் என்றைக்குமே இந்திய அரசுகள் இருந்தது கிடையாது.

டாஸ்மாக் சரக்கை குடித்து தமிழக அரசை குடிமக்கள் நடத்துவது போல, நாம் புகை பிடித்து தான் விவசாயிகள் வாழ்வை காப்பாற்ற வேண்டி உள்ளது.

திருடனா பார்த்து திருந்தினால் தான் திருட்டை ஒழிக்க முடியும். சிகெரட் வரியைக் கூட்டுங்க..நல்ல விழிப்புணர்வு பிரச்சாரம் பண்ணுங்க. சினிமாவில் சிகெரட் வாசனையைக் கொஞ்சம் குறைக்க சொல்லுங்க. அல்லாமல் இந்த மாதிரி வெற்று சட்டங்கள் வெறும் காகிதத்தில் குறித்து வைக்கத் தான் உதவும்.

அதை விட்டு விட்டு கடைக்காரன் லூஸ்ல விற்கிறானா இல்லையா என்பதைப் போலிஸ் வைத்துக் கண்காணிப்பது வீண் செயலே.

சரி..Now come to the point on share market..

இந்த இரண்டு நாள் ஆட்டத்தின் இறுதியில் நேற்று ITC பங்கு 5% உயர்வையும் மற்ற சிகெரட் பங்குகளான Godfrey Phillip, VST Industries போன்ற பங்குகள் 10% உயர்வையும் சந்தித்தன.

நாம் முன்னர் பங்குச்சந்தையில் சமூக அக்கறையுடன் தவிர்க்க வேண்டிய பங்குகள் என்ற கட்டுரை எழுதி இருந்தோம். அதனையும் பாருங்கள். முதலீட்டாளனாக நம்மால் முடிந்ததையும் சமூகத்திற்கு உருப்படியாக எளிதில் செய்ய முடியும்.


English Summary:
Cigarette companies fall and come back in share market after quick decisions changes by Indian Govt. due to farmer's opposition on low income issues.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக