செவ்வாய், 2 டிசம்பர், 2014

தங்கத்தில் முதலீடு செய்யும் தருணம்.

எமது முந்தைய ஒரு கட்டுரையில் தங்கத்தில் முதலீடு செய்யும் வழிமுறைகளைப் பற்றி கூறி இருந்தோம். நமது முதலீடுகளை சமநிலைப்படுத்த தங்கமும் அவசியமாகிறது.

நீண்ட நாளாக சரிந்து கொண்டிருந்த தங்கம் நேற்று மீண்டும் எழ ஆரம்பித்துள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 10 கிராமிற்கு 840 ரூபாய் கூடியது.



கடந்த வருடம் பொருளாதார தேக்கத்தின் போது இந்திய அரசின் அந்நிய செலாவணி பற்றாக்குறை கணிசமாக அதிகரித்தது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான இறக்குமதியில் அதிக தடைகள் விதிக்கப்பட்டது.

தற்போது பொருளாதார சூழ்நிலை வழக்கமான நிலைக்கு திரும்பியுள்ளதால் அரசு தங்க இறக்குமதி தடைகளை விலக்கி கொண்டுள்ளது.

இது தான் நேற்றைய தங்க விலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்தது.

அதே வேளையில் உலகக் காரணிகளை பார்த்தாலும் நிலைமை தங்கத்திற்கு சாதகமாக உள்ளது.

கடந்த திங்களன்று முக்கோண அரசியலில் அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் பெட்ரோல் என்று எழுதி இருந்தோம். ரஷ்யாவிற்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்காக பெட்ரோல் விலை செயற்கையாக உயர்த்தப்படுகிறது என்று கூறி இருந்தோம்.

அதற்கு பதிலடியாக ரஷ்யா தங்கத்தை அதிக அளவில் வாங்கி அமெரிக்கா டாலரின் மதிப்பைக் குறைக்க முனைந்துள்ளது.

அதே போல், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் தங்கள் தங்க இருப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.

இதனால் வரும் காலங்களில் தங்கத்தின் தேவை அதிகமாகும் வேளையில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் நீண்ட கால நோக்கில் தங்க முதலீட்டையும் தற்போது ஆரம்பிக்கலாம்.

நாம் என்றும் மொத்த முதலீட்டை தங்கத்தில் வைத்து இருக்க சொல்லவில்லை. ஆனால் முதலீடுகளைப் பிரித்து போட்டால் தான் ரிஸ்க்கை கணிசமாக குறைக்க முடியும். அதற்கு தங்கமும் ஒரு வாய்ப்பு.

உங்கள் முதலீட்டில் 10% மதிப்பாவது தங்கத்திலும் வைத்துக் கொள்ளுங்கள்!

Still Gold is precious metal only..


English Summary:
Right time to invest in Gold. Relaxation on Indian Govt's import duties, Russia-American economical cold war gives more opportunities in Gold.


தொடர்பான கட்டுரைகள்:

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக