திங்கள், 15 டிசம்பர், 2014

Deflation: பூஜ்ய பணவீக்கம் குறைந்தால் வேலையும் போகலாம்

நேற்று ஒரு செய்தி. கடந்த மாதத்தில் இந்தியாவின் பணவீக்கம்(Inflation) பூஜ்யத்திற்கு அருகில் வந்து விட்டது என்பது தான். அப்படி என்றால் விலைவாசி குறைந்து விட்டது என்பது நடுத்தர மக்களுக்கு நல்ல விடயம்.

ஆனால் இதே பணவீக்கம் இன்னும் கொஞ்சம் இறங்கி எதிர்மறைக்கு சென்றால் "பணவீக்க குறைவு" என்ற அதே செய்தி அதே நடுத்தர மக்களுக்கு கெட்ட செய்தியாகும் வாய்ப்பும் உள்ளது.


Deflation Effect
என்ன நடந்தாலும் பிரச்சினை நமக்கு தான்..

எப்படி என்றால்,

எந்தவொரு பொருளாதாரமும் Demand and Supply என்ற சூத்திரத்திலே இயங்கி வருகிறது. Inflation என்பதும் இந்த சூத்திரத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளது.

பணவீக்கம் எதிர்மறை நிலைக்கு சென்றால் அதற்கு Deflation என்று பெயர்.விலைவாசி எதிர்மறைக்கு செல்கிறது என்றால் பொருட்களின் தேவையும் குறைந்து வருகிறது என்ற மறைமுக பொருளை தருகிறது.

அப்படி பொருட்களின் தேவை குறைந்தால் அந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் லாபம் கணிசமாக குறைந்து விடும்.

லாபம் குறைந்து விட்டால் செலவுகளை கட்டுப்படுத்த நிறுவனங்கள் முனைவார்கள். அதில் பணியாளர் ஊதியம் என்பதும் ஒரு வகையான செலவு தான். அதனால் பணியாளர்களையும் குறைக்க தொடங்குவார்கள். இங்கு பணியாளர்கள் என்பது நம்மைப் போன்ற நடுத்தர மக்கள் தான்.

இவ்வாறு விலைவாசி குறைய காரணமாக இருந்த 'பணவீக்க குறைவு' நமக்கு வேலை போகவும் காரணமாக அமையும்.

ஜப்பானின் பொருளாதார தேக்கத்திற்கு Deflation என்பதும் ஒரு முக்கிய காரணியாக அமைந்தது என்பதை நினைவில் கொள்க.

பார்க்க: பொருளாதார வீழ்ச்சிக்குள் நுழையும் ஜப்பான்

Deflation Effect
வாழ்க்கையும்,பொருளாதாரமும் வட்டம் தாங்க,,

ஆக, வளர்ச்சி என்ற ஒன்று இருக்க வேண்டும் என்றால் பணவீக்கம் என்பதும் கொஞ்சம் தேவைப்படுகிறது. இரண்டில் இருந்து நான்கு சதவீதத்திற்குள் பணவீக்கத்தினை வைத்து இருப்பது தான் நல்ல நிலையின் அறிகுறி.

இந்த நிலையை எட்டுவதற்காக அநேகமாக ரிசர்வ் வங்கி பிப்ரவரியில் வட்டி விகிதங்களை குறைத்து பணப்புழக்கத்தை கூட்டும் என்று எதிர்பார்க்கலாம். குறைந்த வட்டியில் கடன் வாங்கி பொருட்களை வாங்கும் போது மறைமுகமாக தேவை ஏற்படுத்தப்படுகிறது. அது வளர்ச்சிக்கும் பெரிதும்  உதவும்.

வளர்ச்சி், விலைவாசி என்ற இரண்டையும் சமப்படுத்தி தான் பொருளாதாரம் என்ற படகு பயணிக்க வேண்டி உள்ளது.

பட்ஜெட்டிற்கு முன்னால் ரிசர்வ் வங்கியும் இந்திய பங்குச்சந்தை உயர்விற்கு ஒரு முக்கிய காரணமாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

இது பயப்பட செய்யும் பதிவல்ல. தெரிந்து  கொள்வதற்காகத் தான் எழுதப்பட்டுள்ளது. தற்காலிகமான இந்த நிகழ்வை தாண்டி இன்னும் பங்குச்சந்தை உயர்வில் நல்ல நம்பிக்கை உள்ளது. அதனால் தற்போதைய சரிவுகள் நீண்ட கால முதலீட்டிற்கு வாங்குவதற்கு ஏற்ற நிலையைக் கொடுத்துள்ளது என்றே கருதலாம்.

டிசம்பர் 20 அன்று வெளியாகும் கட்டண போர்ட்போலியோவை விரும்பும் நண்பர்கள்  டிசம்பர் போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு பார்க்கவும்  அல்லது muthaleedu@gmail.com முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பான கட்டுரைகள்:

English Summary:
Inflation is coming zero in India. Chances for deflation in coming months. Deflation may reduce the jobs in country when corporate is loosing their financial profits. Reserve Bank of India may cut the interest rates.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்: