செவ்வாய், 30 டிசம்பர், 2014

DEBT RATIO: கடனை எளிதாக மதிப்பிட உதவும் அளவுகோல் (ப.ஆ - 36)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .
நிறுவனத்தின் கடன் அளவைத் தான் ஆங்கிலத்தில் Debt என்ற பதத்தால் குறிப்பிடுகிறார்கள்.


இரு வேறு நிறுவனங்கள் 100 கோடி அளவு கடனை வைத்து இருந்தால் இரண்டையும் ஒரே மாதிரியாக ஒப்பிட முடியாது. அந்தந்த நிறுவனங்களில் சொத்து மதிப்பையும் சேர்த்து மதிப்பிட்டால் தான் நிறுவனம் நல்ல நிலைமையில் இருக்கிறதா என்பதை அறிய முடியும்.



இதனை எளிதாக குறிப்பிடத்தான்  DEBT RATIO என்ற அளவுகோலை உருவாக்கியுள்ளார்கள்.

அதாவது நிறுவனத்தின் கடனை சொத்து மதிப்பால் வகுத்தால் கிடைக்கும் எண்ணே DEBT RATIO என்று அழைக்கப்படுகிறது.

DEBT RATIO = Total Debt/Total Asset

DEBT RATIO = மொத்த கடன் / மொத்த சொத்து மதிப்பு

உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் 100 கோடி சொத்து மதிப்பையும், 50 கோடி கடனையும் வைத்து இருந்தால் DEBT RATIO = 0.5 என்று வரும்.

இதே DEBT RATIO ஒன்று என்ற எல்லையை தாண்டி சென்றால் நிறுவனம் கடனில் மூழ்கியுள்ளது என்று அர்த்தம். அதாவது கடன் சொத்து மதிப்பை விட அதிகமாக உள்ளது.

DEBT RATIO என்பது ஆரம்ப முதலீடு அதிகம் தேவையில்லாத மென்பொருள் போன்ற டெக் நிறுவனங்களுக்கு குறைவாக இருக்கும். அதே நேரத்தில் உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகமாக இருக்கும்.

ஆனாலும் பொது அளவீடாக DEBT RATIO என்பதை 0.3 என்ற விகிதத்தில் வைத்து இருந்தால் நல்லது. அதாவது கடன் அளவு சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக இருந்தால் நிறுவனம் நல்ல நிலையில் இருப்பதாக கருதலாம்.

உதாரனத்திற்கு ஸ்பைஸ் ஜெட்டின் தற்போதைய பங்கு இறக்கங்களுக்கு DEBT RATIO முக்கிய காரணமாக உள்ளது என்பதையும் கவனிக்க.
பார்க்க: Spice Jet மீண்டும் எழுச்சியாக பறக்குமா?



பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பகுதியை இந்த இணைப்பில் காணலாம் 

English Summary:
Debt Ratio helps to estimate the company's financial balance sheet quickly. Helpful for stock investors to select the stocks.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக