செவ்வாய், 30 டிசம்பர், 2014

முதலீடு தளத்தில் செய்திகள் பிரிவு

நண்பர்களே!

நமது தளத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியாக "செய்திகள்" என்ற ஒரு பிரிவை சோதனை அடிப்படையில் ஆரம்பிக்கிறோம்.

செய்திகள் என்றால் பொருளாதார செய்திகள் மட்டுமே. ஏற்கனவே இருப்பது போலவே அரசியல், சினிமா போன்றவற்றின் கலப்பு இல்லாது இருக்கும்.நீண்ட நாட்கள் முன்னரே பல நண்பர்கள் விடுத்த வேண்டுகோள் மூலம் இதன் தேவையையும், முக்கியத்துவத்தையும் உணர முடிந்தது. சில தனிப்பட்ட காரணங்கள் காரணமாக கொஞ்சம் தாமதத்துடன் வருகிறது.

ஆனாலும் முதற்கட்டமாக அகலக்கால் வைக்காமல் முக்கிய செய்திகளை மட்டும் சுருக்கமாக தொகுத்து தருகிறோம். 

அதே நேரத்தில் கட்டுரைகள் மற்றும் இதர பிரிவுகள் ஏற்கனவே உள்ளது போல் தேவையான அளவு விரிவாகவே இருக்கும்.

முடிந்த வரை அதிக அளவு பொருளாதார தகவல்களை தமிழில் பகிருவதே இதன் நோக்கம்.

தங்கள் ஆதரவிற்கு நன்றி!

நன்றியுடன்,
முதலீடு

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக