செவ்வாய், 16 டிசம்பர், 2014

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் லாபமடையும் IT பங்குகள்

ஒரு வாரம் முன் ஒரு பதிவில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும் வாய்ப்பு இருப்பதால் வெளிநாட்டில் இருப்பவர்கள் ஊருக்கு பணம் ஏற்ற தருணம் என்று குறிப்பிட்டு இருந்தோம். தற்போது நடந்து விட்டது.


பார்க்க: பங்குச்சந்தையில் இன்றும் சரிவு தொடரலாம்?

அந்நிய செலாவணி பற்றாக்குறை கணிசமாக அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம். தங்கத்திற்கான இறக்குமதி தடை விலக்கி கொள்ளப்பட்டதால் கடந்த மாதத்தை விட ஆறு மடங்கிற்கும் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது தான் தற்போதைய ரூபாய் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.



ரூபாய் மதிப்பு வீழ்ந்ததால் தள்ளாடிக் கொண்டிருந்த IT நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக அதிகரித்து விட்டன. அதே நேரத்தில் மற்ற துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தை படு வீழ்ச்சியில் சென்று உள்ளது. ஆனாலும் இந்த வீழ்ச்சி தற்காலிகமான நிகழ்வாகவே கருதப்படுகிறது.

இதற்கிடையே TCS நிறுவனம் இந்தக் காலாண்டில் தமது லாபம் குறைய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக குறிப்பட்டது கிறிஸ்துமஸ் விடுமுறைகள்.

மேலை நாடுகளில் வருட கடைசியில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் தினங்களை முன்னிட்டு நிறுவனங்களில் Shut Down நடக்கும். இது கிட்டத்தட்ட 20 நாட்கள் வரை விடுமுறை தினமாக அமையும்.

நமது IT நிறுவனங்களும் மேலை நாடுகளுக்கே வேலை பார்த்து வருவதால் அவர்கள் வருமானமும் பாதிக்கப்படும்.

ஆனால் இந்த நடைமுறை என்பது ஒவ்வொரு வருடமும் நடக்கக் கூடியது தான். அதை ஏன் TCS அழுத்தமாக குறிப்பிட்டது என்று தெரியவில்லை. கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி குறைவாக இருக்கலாம். ஆனால் Year-To-Year Basis என்ற முறையில் பார்த்தால் அவ்வளவு பாதிப்பு இருக்காது.

இதனால் தான் என்னவோ சந்தை TCS அறிக்கையினை சிரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் IT பங்குகள் கூடிக் கொண்டே தான் இருக்கின்றன.

கடந்த காங்கிரஸ் அரசு வீழ்ச்சி அடைய ரூபாய் மதிப்பு 67 வரை கீழே சென்றதும் ஒரு முக்கிய காரணம். அதன் பிறகு இந்த வருட தொடக்கத்தில் எழுச்சி பெற்றதற்கு மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் கடைசி கட்டத்தில் எடுத்த முயற்சிகள் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் பலன் மோடிக்கு சென்று விட்டது.

தற்போது ரூபாய் 63 என்ற கோட்டைத் தாண்டி விட்டது. இனி தான் மோடி அரசின் உண்மையான பொருளாதார திறமையை மதிப்பிடும் நிலை வந்துள்ளது.

English Summary:
Indian rupee is falling down against dollar due to current account deficit and gold imports. IT stocks are gaining in this situation. Modi Govt is facing real economical challenge.

தொடர்புடைய கட்டுரைகள்:

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக