திங்கள், 8 டிசம்பர், 2014

பங்குச்சந்தையில் இன்றும் சரிவு தொடரலாம்?

நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று சந்தை ஒரு கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. கிட்டத்தட்ட 350 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்தது.


நேற்று இன்போசிஸ் நிறுவனர்கள் சந்தை மதிப்பை விட 4% குறைவாக தங்களது பங்குகளின் ஒரு பெறும் பகுதியினை விற்று விட்டதால் இன்போசிஸ் பங்குகள் அதே நான்கு சதவீத அளவிற்கு வீழ்ந்தன.

ஆனாலும் நிறுவனர்கள் தங்களது சொந்த காரணங்களுக்காகத் தான் பங்குகளை விற்றதாக கூறப்படுவதால் இன்போசிஸ் பங்கிற்கு பெரிதளவு பாதிப்பு ஏற்படாது என்று சொல்கிறார்கள்.

ஆனாலும் நான்கு நிறுவனர்கள் சேர்ந்து ஒரே சமயத்தில் குறைவான விலையில் பெரிய தொகை மதிப்பில் பங்குகளை விற்றது சந்தேகங்களைக் கொடுக்கிறது.




அந்நிய செலாவணி பற்றாக்குறை குறைந்ததும் நேற்றைய சென்செக்ஸ் சரிவுகளுக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி தடைகள் விலக்கப்பட்டதால் அதிக அளவு தங்கம் வாங்கப்பட்டுள்ளது. இதனால் இறக்குமதி அதிகரித்துள்ளது.

இது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் உள்ள இடைவெளியை அதிகரித்து அந்நிய செலாவணி பற்றாக்குறையை  கூட்டி விட்டது. ரூபாய் மதிப்பிற்கும் இந்த தரவுகளால் பாதிப்பு ஏற்படலாம். வெளிநாட்டில் உள்ளவர்கள் ஊருக்கு டாலர்களை அனுப்பி வைக்க ஏற்ற நேரம்.

பார்க்க: தங்கத்தில் முதலீடு செய்யும் தருணம்.

இன்றும் ஆசிய சந்தைகள் சிவப்பு நிறத்தில் இருப்பதால் இந்த சரிவுகள் இந்திய சந்தையில் மேலும் தொடரலாம்.

ஆனால் இந்த சரிவுகளுக்கான காரணிகள் அவ்வளவு பலம் இல்லாததால் எளிதில் சந்தை மீண்டும் மேலே வந்து விடும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

தற்போதைக்கு சென்செக்ஸ் 28,000 க்கும் கீழ் வந்தாலே நல்லது போல் தோன்றுகிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டை அதிகரித்துக் கொள்ளுங்கள்!

எமது அடுத்த போர்ட்போலியோ டிசம்பர் 20 அன்று வெளிவருகிறது. இணைய விரும்பும் நண்பர்கள் இந்த இணைப்பை பார்க்கவும். அல்லது muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்:

English Summary:
Indian share market fall down due to Current Account Deficit widens. Exports growth is limited. Imports grown. Rupee may fall down. 

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. Who is the best online broker of equity, derivatives and commodity. As I am planning to hedging using derivatives, I like to know best broker in terms of commission, and tools to see quotes

    பதிலளிநீக்கு
  2. I recommend for sharekhan due to reliable and low brokerage charges.

    பதிலளிநீக்கு