ஞாயிறு, 14 டிசம்பர், 2014

எதிர்மறை தரவுகளால் இன்னும் சரியும் வாய்ப்புள்ள சந்தை

கடந்த வாரம் நாம் எதிர்பார்த்தவாறு சந்தை சரிந்து தற்போது சென்செக்ஸ் 27,600 புள்ளிகள் குறைந்து விட்டது. வழக்கமாக கடந்த சில மாதங்களாக சரிவு என்பது மிக குறுகிய காலத்திற்கு மட்டுமே இருந்து வந்தது. அதாவது ஓரிரு நாட்கள் மட்டும்.


ஆனால் தற்போதைய சரிவு ஒரு வாரம் முழுமைக்கும் நீடித்தது. ஒரு நல்ல வாங்கும் வாய்ப்பை ஏறபடுத்திக் கொடுத்தது.

பார்க்க: பங்குச்சந்தையில் இன்றும் சரிவு தொடரலாம்?

இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான சில தரவுகளும் சாதகமில்லாத தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.  அதனால் இந்த வாரமும் சந்தை சரிவிலே செல்ல அதிகம் வாய்ப்புகள் உள்ளன. அல்லது தற்போதைய நிலையில் ப்ளாட்டாக நீடிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

industry data fall down


அதாவது தொழில் வளர்ச்சியைக் குறிப்பிட IIP தரவுகள் பயன்படுத்தப்படுகிறது. IIP என்பது Index Of Industrial Production. ஒவ்வொரு மாதமும் இந்த தரவுகள் வெளியிடப்படும்.

அக்டோபர் மாததிற்கான IIP தரவுகள் எதிர்பார்த்ததை விட குறைவாக வந்துள்ளது. அதிக அளவில் பங்களிப்பு வழங்கும் Capital goods, Consumer goods, Manufacturing போன்ற பிரிவுகள் எதிர்மறையிலே வந்துள்ளன. அதே நேரத்தில் மின்சாரம், சுரங்கம் போன்ற பிரிவுகள் நேர்மறையில் வந்துள்ளன. மொத்தத்தில் இந்த தரவுகள் எதிர்மறையில் வந்துள்ளது.

பணவீக்கம் (Inflation) கடுமையாக குறைந்து வரும் சூழ்நிலையில் தொழில் வளர்ச்சி பின் தங்கியுள்ளது. அதனால் வட்டி விகிதங்களை சிறிது குறைத்து பணப்புழக்கத்தைக் அதிகமாக்கும் கட்டாயத்தில் ரிசர்வ் வங்கி வந்துள்ளது. அநேகமாக அடுத்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த நேரத்தில் கடந்த மாதத்தில் அந்நிய செலாவணி பற்றாக்குறை கூட அதிகமாக கூடியுள்ளது. இதனால் ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி தொடருகிறது.

இப்படி டிசம்பர் சில எதிர்மறை காரணிகளால் சூழ்ந்துள்ளது. இதனால் சரிவுகள் குறைந்தபட்சம் இந்த வார இறுதி வரையாவது நீடிக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆனாலும் இந்த சரிவு என்பது தற்காலிகமாக கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் பண வீக்கம் சாதகமான சூழ்நிலையில் இருப்பதால் இந்தியா இந்த சூழ்நிலையை எளிதாக சமாளித்து விடும் என்ற நம்பிக்கை சந்தையில் இருப்பதால் மீண்டும் உயர வாய்ப்புள்ளது.

இந்த காரணிகளுக்கு அப்பால் நீண்ட கால முதலீட்டில் ஈடுபவர்களுக்கு தற்போதைய சூழ்நிலை ஒரு வாங்கும் வாய்ப்பாகவே அமையும்.

இந்த மாதம் எமது கட்டண போர்ட்போலியோவை சிறிது தாமதமாக தருவதற்கும் சரிவை எதிர்பார்த்த சூழ்நிலையை உற்று நோக்கி இருந்ததே காரணம். டிசம்பர் 20 அன்று எமது போர்ட்போலியோ வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் இணைந்து கொள்ளலாம்.

பார்க்க: டிசம்பர் போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு
மின் அஞ்சல் முகவரி: muthaleedu@gmail.com

English Summary:
Indian share market is on red due to the negative factors. Index Of Industrial Production comes negative. Current Account Deficit increases. Rupee exchange fall down.  Since inflation is in good condition, India hopes to recover the losses.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக