செவ்வாய், 23 டிசம்பர், 2014

உலக அரசியலில் தள்ளாடும் ரஷ்ய பொருளாதாரம்

கடந்த வாரம் ரஷ்ய மத்திய வங்கி தமது வட்டி விகிதங்களை 10 சதவீதத்தில் இருந்து 17.5 சதவீதமாக கூட்டியது. நமது ஊரில் அரை சதவீதம் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்குமானால் கூட பல ஆலோசனைகளும் அதிக நேரமும் பிடிக்கும்.


ஆனால் ரஷ்ய இப்படி ஒரே அடியாக வட்டியைக் ஒரு வித அவசர நிலையில் அவர்கள் பொருளாதராம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இதனை ஒரு சிலர் 1990களில் ரஷ்ய இருந்த நெருக்கடி நிலையுடன் கூட ஒப்பிடுகிறார்கள்.அதற்கு மேற்குலக நாடுகளுடன் ஏற்பட்ட சில அரசியல் மோதல்களும் முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

இந்த வருட தொடக்கத்தில் உக்ரைனின் ஒரு மாகாணம் தனியாக பிரிந்து ரஷ்யாவுடன் இணைந்தது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலே நடந்தது. இது போக தம்முடன் போட்டி போடுமளவு ரஷ்யா வளர்வதையும் அவர்கள் விரும்பவில்லை.

இதனால் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார்கள். இதன் காரணமாக ரஷ்ய நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட பணம் விலகி சென்றது. இது போக ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களும் திருப்பி பெறப்பட்டன.

ஒரே சமயத்தில் வெளிநாட்டு பணம் வெளியே சென்றதால் ரஷ்ய நாணயத்தின் தேவை குறைந்து இந்த ஒரு வருடத்தில் மட்டும் 30%க்கும் மேல் வீழ்ச்சி அடைந்தது.

இது தவிர பல பொருட்களுக்கும் ஏற்றுமதி/இறக்குமதி என்றவற்றில் பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் உணவு பண வீக்கம் 15% என்ற நிலையை கூட அடைந்தது.

மேலும் ரஷ்யாவின் பொருளாதராம் கிட்டத்தட்ட பாதி அளவு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்தே இயங்குகிறது. இதிலும் அமெரிக்கா அரசியல் செய்து கச்சா எண்ணெய் விலையை செயற்கையாக பாதியாக குறையுமளவு செய்தது.

சீனாவுடன் அதிகரிக்கும் வர்த்தகம் 

இந்த விலை வளைகுடா நாடுகளுக்கு சாத்தியம். ஆனால் ரஷ்யாவில் உற்பத்தி செலவை விட குறைவான விலை என்பதால் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்தன.

இவ்வாறு பல முனைகளில் மேற்கு நாடுகள் கொடுத்த அம்புகள் ரஷ்யாவை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது.

இதே நிலையில் இன்னொரு நாடு இருந்தால் அமெரிக்காவிடம் சரணடைந்து இருப்பார்கள். ஆனால் மேற்கு நாடுகளால் ஒன்றும் செய்ய முடியாத ஹிட்லரையே வீழ்த்திய ரஷ்ய மக்களின் ஆதரவு இன்னும் அதிபர் புதினுக்கு இருப்பது சாதகமாக விடயமாக உள்ளது.

இந்த சமயத்தில் தான் ரஷ்யா சீனா, இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறது. சீனா உதவிக் கரத்தை நீட்டியுள்ளது. இந்தியா பட்டும் படாமல் செல்கிறது.

என்னவாக இருந்தாலும் 90களை இருந்ததை விட அதிக அளவு ரிசர்வ் பணத்தை ரசியா கையில் வைத்து இருப்பது அவர்கள் பொருளாதரத்தை மீட்டெடுக்க பெரிதும் உதவும்!

தொடர்புடைய கட்டுரைகள்:

English Summary;
Russian Central Bank increases interest rates to 17.5%. The economy and currency exchange is going down due to the western countries politics. Still hopes are there by huge foreign reserves. 


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக