நேற்று புதிதாக நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான புதிய கொள்கை வெளியானது. பங்குச்சந்தை இதனை சாதகமாக ஏற்றுக் கொண்டாலும் கூட பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.
முன்பு நிலங்களைக் கையகப்படுத்தும் போது 80% நில உரிமையாளர்கள் ஒப்புதல் இருந்தால் தான் நிலங்களைக் கையகப்படுத்த முடியும்
ஆனால் புதிய கொள்கையின்படி, நிலங்களைக் கையகப்படுத்தும் போது அவர்கள் ஒப்புதல் தேவையில்லை. சந்தை மதிப்பை விட நான்கு மடங்கு அதிகம் விலை கொடுக்க வேண்டும் என்ற பழைய நடைமுறை அப்படியே தொடர்கிறது.
இந்த கொள்கையானது நெடுஞ்சாலை திட்டங்கள், அணுமின் உற்பத்தி, பாதுகாப்பு, ஏழைகளுக்கான வீடு திட்டங்கள் போன்ற முக்கிய துறைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மட்டுப்படுத்துதல் காரணமாக தான் நிறைய துறை சார்ந்த பங்குகள் இந்த செய்தியைக் கொண்டாடவில்லை. நெடுஞ்சாலை துறை சார்ந்த L&T போன்ற நிறுவனங்களுக்கு மட்டும் இந்த செய்தி சாதகமாக அமைந்தது.
உதாரணத்திற்கு ஆட்டோ துறை சார்ந்த நிறுவனங்கள் புதிதாக தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்றால் பழைய முறையின் படி தான் செல்ல வேண்டும்.
இதே போல் சமூக பாதிப்பு தொடர்பான ஆய்வுகளும் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவறான கொள்கை என்று சொல்லலாம். சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா இல்லையா என்று ஆய்வு செய்யாமலே ஒரு திட்டம் அவசரமாக தேவையா என்பதையும் யோசிக்க வேண்டி உள்ளது.
80% என்ற ஒப்புதல் விகிதத்தை ஒரு 50% என்றாவது குறைத்து இருக்கலாம். திடிரென்று வந்து நிலத்தைக் காலி பண்ண சொல்லும் போது நடுத்தட்டு மக்கள் நிலையையும் யோசிக்க வேண்டியுள்ளது,
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் அவசர சட்டமாக கொண்டு வருவது தவறான உதாரணத்தை கொண்டு வருகிறது. மோடி அரசு கொஞ்சம் நிதானத்துடன் செயல்பட வேண்டிய தருணம் இது.
பத்து வருடங்களுக்கு முன்னர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் செய்த தவறை மோடி இந்தியா முழுவதும் தொடர்கிறார். வளர்ச்சி என்பது ஒன்றைக் காவு கொடுத்து இன்னொன்றை வாங்குவதல்ல!
English Summary:
Land Acquisition act allows Govt. to take land without permission and restricted only to Defence, High way, Power projects. Infrastructure may get benefits from new policy.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக