எமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
கடந்த 2014ம் ஆண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு மிக நல்ல ஆண்டாக இருந்து உள்ளது.
நிப்ட்டி மற்றும் சென்செக்ஸ் மட்டுமே 35% க்கும் மேல் உயர்வை கொடுத்துள்ளது. இதில் சிறிய, பெரிய நிறுவனங்கள் கலந்து முதலீடு செய்து இருந்தால் 50% ரிடர்னை கூட எளிதாக அடைந்து இருக்க முடியும்.
இந்திய பங்குச்சந்தை பப்பெட்ட்டாக கருதபப்டும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மட்டும் 80%க்கும் மேல் முதலீட்டை பெருக்கியுள்ளார்.
ஏன், நமது போர்ட்போலியோகளுமே நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளன. கீழே இதன் விவரங்கள் உள்ளன.
இதே வேளையில் வரும் ஆண்டில் இதே அளவு ரிடர்ன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால், அதற்கான சாத்தியமாக வாய்ப்புகள் மிகவும் குறைவே என்பதையும் பதிவு செய்கிறோம்.
அதற்காக எதிர்மறையாக செல்லும் என்று கூற வரவில்லை. ஒரு சராசரியான ரிடர்னை எதிர்பார்க்கலாம் என்பது தான் எமது கருத்து!
கடந்த ஆண்டின் சூழ்நிலைகள் அப்படியே மீண்டும் எதிரொலிக்க வாய்ப்புகள் குறைவே. கடந்த ஆண்டு மோடி என்ற காரணி மிக முக்கிய பங்கு வகித்தது.
இந்த வருடம் அதே காரணியில் செயலை விட அதிக விளம்பரம் செய்கிறார், விலைவாசி கூடிக் கொண்டே செல்கிறது போன்ற அழுத்தங்கள் கூட உருவாகலாம்.
ஆனாலும் 2014ம் ஆண்டில் அரசின் சார்பாக எடுக்கப்பட்ட சில கொள்கைகளின் முடிவுகள் 2015ம் ஆண்டின் பிற்பகுதியில் நேர்மறையாக எதிரொலிக்க வாய்ப்புகள் உள்ளன. இதற்கு மேல் சொன்னால் ஜோதிடம் போல் மாறி விடும்.
எனினும் 20% முதல் 30% ரிடர்ன் என்ற குறைந்தபட்ச எதிர்பார்ப்புடன் பங்குச்சந்தையில் வருடத்தை துவக்குங்கள்! சூழ்நிலை சரியாக அமைந்தால் எதிர்பார்ப்புகள் பூரிப்புகளாக கூட மாற வாய்ப்பு உள்ளது.
கடவுள் அருளால் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் 2015ல் செழித்தோங்க எமது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக