வியாழன், 25 டிசம்பர், 2014

கடன் தொல்லையால் சொத்துக்களை வேகமாக விற்கும் JP

இந்த வாரம் Jaiprakash Associates நிறுவனம் தனது இரண்டு சிமெண்ட் ஆலைகளை Ultratech Cement நிறுவனத்திற்கு விற்றது. இது இரண்டு நிறுவனங்களுக்குமே லாப நஷ்டம் அதிகமின்றி Win-Win டீலாக அமைந்தது.


இந்தியாவில் 45 ஆண்டு கால தொழில் துறை வரலாறு உடைய JP Associates கடந்த பத்து ஆண்டுகளாக வளர்ச்சி குறைந்து நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்தது. இதனுடன் கடனும் வேகமாக வளர்ந்தது. இவ்வாறு வளர்ந்து ஒரு கட்டத்தில் கடன் தொகை 60,000 கோடியை எட்டி விட்டது.

இதனால் ஒவ்வொரு காலாண்டு அறிக்கையிலும் 800 கோடி ரூபாயை வட்டியாக மட்டும் கொடுத்து வந்தது.



தனி மனிதனைப் போலவே  தொழில் துறையிலும் இந்த தலைக்கு மேல் வட்டி என்பது வியாபாரத்தை லாப திசையில் பயணிக்க விடாது.

அதனால் என்ன தான் வியாபர ரீதியாக சிறிது லாபம் சம்பாதித்தாலும் இறுதியில் வட்டியை கட்டிய பிறகு நிதி அறிக்கை எதிர்மரையிலே சென்றது.

இந்த நிலையில் தான் Divestment கொள்கையை அவர்கள் எடுத்தார்கள், அதாவது நிறுவனத்தின் சில பிரிவுகளை விற்க தீர்மானித்தார்கள். சில டீல்கள் வெற்றி பெற்றன. ரிலையன்ஸ் நிறுவனத்துடன் போட்ட சில டீல்கள் தோல்வியும் அடைந்தன.

ஆனாலும் வெற்றி பெற்ற டீல்கள் மூலம் இந்த வருடத்தில் மொத்தமாக கடனின் ஒரு பகுதியாக 20,000 கொடியை திருப்பி செலுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.

பார்க்க:  இந்தியாவின் மிகப்பெரிய பவர் நிறுவனமாக மாறிய ரிலையன்ஸ்

இது கடனின் மூன்றில் ஒரு பகுதி என்பதைக் கவனத்தில் கொள்க. வட்டி குறைவதன் மூலம் இருப்பதை வைத்து தொழில் செய்ய Jeypee குழுமத்திற்கு இந்த டீல்கள் பெரிதும் உதவும்.

இந்த நிலையில் தான் தற்போது  JP Associates நிறுவனம் மத்திய பிரதேசத்தில் உள்ள இரண்டு சிமெண்ட் ஆலைகளை Ultratech Cement நிறுவனத்திற்கு 5500 கோடிக்கு விற்றுள்ளது.

Ultratech Cement நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் பரவலாக சந்தையைக் கொண்டிருந்தாலும் UP, Bihar, MP போன்ற மாநிலங்களில் இன்னும் விரிவாக்க திட்டமிட்டு இருந்தது.

புதிதாக ஆலையை ஆரம்பித்து அது ஒழுங்காக செயல்பட ஆரம்பிக்க நான்கு ஆண்டுகளாவது ஆகும் என்று என்று நம்பப்படுகிறது.

இந்த மாநிலங்களை குறி வைத்து வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்பது உண்மை. அதனால் வரும் வருடங்களில் வளர்ச்சி இந்த மாநிலங்களில் தெற்கை விட அதிக அளவு இருக்கும்.

இந்த சூழ்நிலையில் நேரத்தை விட்டால் வாய்ப்பு பறிபோகும். அதனால் வாய்ப்பை தவறவிடாமல் இருக்க Ultratech Cement நிறுவனத்திற்கு இந்த டீல் பெரிதும் உதவும். அதாவது சரியான நேரம் என்ற வகையில் Ultratech பயன் பெறுகிறார்கள்.

அந்த வகையில் யாருக்கும் லாபம்-நஷ்டம் என்பதின்றி Win-Win டீலாக அமைந்தது. இதனால் இரண்டு நிறுவனங்களின் பங்குகளுமே சந்தையில் 5%க்கும் மேல் உயர்வை சந்தித்தன.

தொடர்புடைய கட்டுரைகள்:



English Summary:
Jaypee Group divests the companies to reduce the debt level. JP Associates sold 2 cement factories to Ultratech cement. This deal helps Ultratech to expand the markets in UP, MP, Bihar quickly. Finally, deal becomes Win-Win.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக