இன்றைய தினமலரில் ஒரு செய்தி தலைப்பு.
"முக்கிய ரயில் நிலையங்களில் இனி சுவையோ சுவை: பிட்சா, பர்கர், வடாபாவ் விற்க அனுமதி"
ஒரு செய்தியை எந்த விதத்திலும் போட்டு அலங்கரிக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம். இதே செய்தியை காங்கிரஸ் செய்து இருந்தால் வேறு விதமாக போட்டு இருப்பார்கள்.
தற்போது தினமலர் மோடிக்கும் பிஜேபிக்கும் கூஜா தூக்குவது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஏதோ பிஜேபியின் தமிழக பிரிவின் அதிகாரப்பூர்வ பத்திரிகை போல் தான் உள்ளது.
பத்திரிக்கை துறையில் நம்பகத்தன்மையை தினமலர் இழந்து வருகிறது.
பத்திரிக்கை துறையில் நம்பகத்தன்மையை தினமலர் இழந்து வருகிறது.
கீழ் உள்ள பட்டியலைப் பாருங்கள்.
Pizza Hut, KFC, Dominoz Pizza, Sub way, Coffee day, Tea Leaf, etc.
இந்த உணவகங்கள் தாம் இனி நமது பெரிய ரயில் நிலையங்களில் செயல்படுமாம். ரயில் நிலையங்களும், பஸ் நிலையங்களும் உணவகங்களுக்கு முக்கியமான வியாபர கேந்திரங்கள். ஏனென்றால் வேறு உணவுகளை தேடி சென்று வாங்க முடியாத நிலை அங்கே உள்ளது.
அங்கே இந்தியர்கள் சாப்பிடும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சத்து இல்லாத சக்கைகளை சாப்பிடுவதற்கு அரசு திணிப்பது தேவையில்லாத ஒன்றே.
அங்கே இந்தியர்கள் சாப்பிடும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சத்து இல்லாத சக்கைகளை சாப்பிடுவதற்கு அரசு திணிப்பது தேவையில்லாத ஒன்றே.
ரயில் நிலையங்களை அழகு நிலையங்களாக மாற்றுவதற்கு வேண்டுமென்றால் இந்த உணவகங்கள் உதவலாம். ஆனால் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில் அதிக விலைக்கு ஜங்க் உணவுகளை வாங்க சொல்லி திணிப்பதாகவே இது அமைகிறது. பிட்சாவும், பர்கரும் சாப்பிடுவது தான் உலகத்தரம் என்று நினைக்கிறார்கள் போல.
இந்தியாவில் பிட்சா டெலிவரி ஆகுமா? DONUTS ருசிக்குமா? என்ற கட்டுரையில் ஜங் உணவுகளை எடுத்து நடத்தும் JUBULIANT நிறுவனத்தின் லாபம் குறைந்து வருவதைப் பற்றி எழுதி இருந்தோம். இந்திய சூழ்நிலையில் போணியாகாத உணவுகளை அரசினை வைத்து திணிக்க முற்படுவதாக கூட கருதிக் கொள்ளலாம்.

உள்ளூர் உணவகங்களுக்கும், அதை நடத்துபவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்காமல் லாபம் அதிகமாக கிடைக்கும் இடங்களை தேர்ந்தெடுத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுப்பது வளர்ச்சியின் நல்ல அறிகுறி அல்ல!
English Summary:
Pizza, Burgers and Coffee shops are occupying spaces in Indian Railway Stations. Govt. pushing people to spend more on Junk foods.
I hate them as well and not supporting for Indians...we have already many Saravan bavan, Anandha bavan's in Railway stations. why cant we take it as to improve tourism and attract foreigners? Foreign tourists feel comfortable on them when visit. :)
பதிலளிநீக்குYes..Suresh..It's unfair decision by Indian Govt.
பதிலளிநீக்கு