வியாழன், 11 டிசம்பர், 2014

சர்க்கரை நிறுவனங்களுக்கு அடித்த யோகம்

முந்தைய ஒரு கட்டுரையில் அரசு பெட்ரோலுடன் எத்தனால் கலந்து விற்க திட்டமிடுவதை பற்றிக் குறிப்பிட்டு இருந்தோம். தற்போது நடைமுறைக்கு வர உள்ளது.

பார்க்க: பெட்ரோலுடன் எத்தனால் கலக்க விரும்பும் அரசு

இதனால் நலிந்து போய் இருந்த சர்க்கரை நிறுவனங்கள் மீண்டும் நல்ல நிலைக்கு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதன் காரணமாக பங்குச்சந்தையில் சர்க்கரை நிறுவனங்களான Sakthi Sugar, Renuka Sugar, EID Parry, Andhra Sugar போன்ற பங்குகள் நல்ல உயர்வை சந்தித்தன.
சர்க்கரை நிறுவனங்களுக்கான கடன் உதவியும், மானியமும் கணிசமாக ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ள்ளது என்பதும் சாதகமான விஷயம். இந்த நிலையில் நேற்றைய செய்தியும் சுகர் பங்குகளை அதிக தேவைக்கு கொண்டு வருகிறது.

ஏற்கனவே பெட்ரோலில் 5% அளவு எத்தனால்(ethanol) கலக்கப்பட்டு வருகிறது. இந்த எத்தனால் அளவு மேலும் அதிகரிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. அநேகமாக 10% அளவு அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.

நேற்று வரை ஒரு லிட்டர் எத்தனாலுக்கு 29 ரூபாய் வரை கொடுத்து வந்த பொதுத்துறை பெட்ரோல் நிறுவனங்கள் இனி 48 ரூபாய் கொடுக்க வேண்டி வரும். கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்வு போல் தான்.

இந்த உயர்வு சர்க்கரை நிறுவனங்களின் லாப அறிக்கைகளில்(Operating Profit) கணிசமாக நேர்மறை மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

இவ்வளவு ஒட்டு மொத்த நேர்மறை செய்திகளையும் நீண்ட கால நோக்கில் பார்த்தால் சர்க்கரை நிறுவனங்கள் பங்குகள் அதிக உயர்வை சந்திக்கலாம்.

அடுத்த வருடம் வறட்சி ஏதும் இல்லாது இருந்தால் சர்க்கரை பங்குகளில் முதலீடு செய்ய இது நல்ல நேரம்.

மேலும் கரும்பு விவசாயம் பண்ணுவதாக இருந்தாலும் சூழ்நிலையை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்! நல்ல டிமேன்ட் உள்ளது.

நாம் வாரத் தொடக்கத்தில் எதிர்பார்த்தவாறு சந்தை ஒரு நல்ல வீழ்ச்சியை சந்தித்து வாங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நமது தளத்தின் நீண்ட கால முதலீட்டிற்கான கட்டண போர்ட்போலியோ டிசம்பர் 20ல் வெளிவருகிறது.  விரும்பும் நண்பர்கள இங்கு விவரங்களை பார்க்க.. அல்லது muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்:

English Summary:
Sugar stocks are on demand in Indian share market. Govt's decision on increasing ethanol price which helps to recover sugar companies losses. Ethanol is mixed with Petrol for reducing fuel costs.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக