ஞாயிறு, 28 டிசம்பர், 2014

உந்தும் காரணிகளுக்கு காத்திருக்கும் பங்குச்சந்தை

பங்குச்சந்தை தற்போது கடலில் உள்ள அலைகள் போல் சிறிய ஏற்ற இறக்கங்களுடன் மெதுவாக அசைந்து கொண்டு இருக்கிறது.


சந்தையை ஒரே அடியாக கூட்டுவதற்கோ அல்லது குறைப்பதற்கோ காரணிகள் எதுவும் இல்லாதது ஒரு முக்கிய காரணியாக இருப்பதை உணரலாம்.

அடுத்த பெரிய சாதகமான நிகழ்வுகளாக காலாண்டு நிதி முடிவுகள், ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு, பட்ஜெட் போன்றவை எதிர்பார்க்கபப்டுகிறது.காலாண்டு நிதி முடிவுகள் ஜனவரி இறுதியில் வெளிவரும். ரிசர்வ் வங்கியின் வட்டி தொடர்பான முடிவுகள் பிப்ரவரி தொடக்கத்தில் வெளிவரும். பட்ஜெட் பிப்ரவரி இறுதியில் வெளிவரும்.

இதற்கு இடையில் பெரிய நிகழ்வுகள் ஒன்றும் இருப்பதாக அறிய முடியவில்லை. இதனால் ஜனவரி இறுதி வரை உள்ள இடைவெளி வெற்றிடமாகவே உள்ளது. அநேகமாக ஜனவரி முழுவதும் இந்த நிலை நீடித்தாலும் ஆச்சர்யமில்லை.

டிசம்பரில் 29,000 புள்ளிகள் வரை சென்ற சென்செக்ஸ் 26500க்கு வந்து தற்போது 27500 புள்ளிகளில் ஊசலாடிக் கொண்டுள்ளது.

இந்த ஒரு மாத நிகழ்வுகள் உயர்ந்த நிலை, தாழ்வு நிலை, சராசரி நிலை என்ற மூன்றையும் நமக்கு உணர்த்தி விட்டன. என்றே கருதலாம் இதனால் பதற்றமில்லாமல் நமது முதலீடுகளை உயர்த்த இத்தகைய சூழ்நிலைகள் பயன்படுகின்றன.

நீண்ட கால முதலீட்டில் இருப்பவர்கள் குறையும் போது வாங்கி போடுங்கள். அடுத்த சில வருடங்கள் வளர்ச்சி அதிகம் செல்ல வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் குறுகிய கால வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் கூடும் போது பங்குகளின் உயர்வுகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். குறையும் போது வாங்கி போட்டு மீண்டும் உயரும் போது விற்று சொற்ப லாபத்தை பெறலாம்.

அடுத்த ஒரு மாதத்திற்கு பங்குச்சந்தையைக் கையாள எளிதான வழியாக இது இருக்கும்.

English Summary:
Indian share markets are on slow pace due to less affecting factors. Tension free buying opportunities created after long time. Good time for short time traders.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக