புதன், 10 டிசம்பர், 2014

Spice Jet மீண்டும் எழுச்சியாக பறக்குமா?

சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறன் அவர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு விமான நிறுவனம் Spice Jet. குறுகிய காலத்தில் Indigo, Jet Airways போன்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி முன்னணி இடம் பிடித்தது.


இதற்கு நேரம் தவறாமை, நல்ல சேவை போன்றவை காரணமாக அமைந்தது. அதனுடன் விமான டிக்கெட்களை மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு குறைந்த விலைக்கு கொடுத்து வந்தது.

இதனால் Load Factor என்று சொல்லப்படும் விகிதம் எப்பொழுதுமே 80% க்கும் அதிகமாகவே இருந்து வந்தது. இந்த விகிதம் மற்ற விமான நிறுவனங்களில் 70%க்கும் அருகிலே இருந்தது. அதாவது சீட்களை காலியாக வைத்து பறப்பது குறைவாக இருந்தது.


Spice Jet Fall Down


ஆனால் கடந்த காலாண்டில் கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் மேல் நஷ்டத்தைக் காட்டி உள்ளது. இதனால் கடன் அளவு நிறுவன மதிப்பை விட கணிசமாக அதிகரித்தது. இதனால் அதிக அளவு விமானங்களை ரத்து செய்யும் நிலைக்கு சென்றுள்ளது.

விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அடுத்த ஒரு மாதத்திற்கு முன்பதிவுகளை (Advanced Bookings) பெறக் கூடாது என்று வற்புறுத்தி உள்ளனர்.

இப்படியொரு நெருக்கடியான நிலையில் இருப்பதால் பங்கு விலையும் 40 ரூபாயில் இருந்து 15 ரூபாய்க்கு வந்து விட்டது.

இதனால் அடுத்த KingFisher Airlines நிறுவனமாக Spice Jet மாறி விடுமோ என்ற சந்தேகமும் வந்துள்ளது.

ஆனாலும் விஜய் மல்யாவை ஒப்பிடுகையில் பங்குச்சந்தை கலாநிதி மாறனை அதிக அளவு நம்புவதாகவே தெரிகிறது. நிர்வாகமும் தங்கள் தவறுகளை உணர்ந்து திருத்த முடிவு செய்து உள்ளதாகவே வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் தான் 10 ரூபாய்க்கும் கீழே சென்ற பங்கு மீன்டும் 15 ரூபாய்க்கு வந்து உள்ளது.

சரிவிற்கான காரணங்களைப் பார்த்தால்,

இந்த வருட துவக்கத்தில் புதிதாக 47 விமானங்களை Spice Jet ஆர்டர் செய்தது. இது தேவைக்கும் அதிகமாக இருந்ததால் நிதி சுமையை அதிகரித்து விட்டதாக கருதுகிறார்கள்.

அதிக அளவில் விமான டிக்கெட் சலுகைகள் கொடுப்பட்டதும் ஒரு காரணமாக அமைந்தது. சந்தையைப் பிடிப்பதற்கு இது உதவினாலும், அதிக அளவு லாபத்தைக் குறைத்து விட்டது.

சில வழித்தடங்கள்(Flight Routes) அவ்வளவாக லாபத்தைக் கொடுப்பதில்லை. இதனால் இந்த வழித்தடங்களும் இனி ரத்து செய்யப்படும் என்று சொல்லி உள்ளார்கள்.

ஆக, இனி அகலக்கால் வைக்காமல் இருப்பதை ஒழுங்குடன் செய்ய முனைந்துள்ளார்கள். இது நேர்மறை விளைவுகளை தரலாம் என்று நம்புகிறோம். இதனால் தான் என்னவோ ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவும் கணிசமாக பங்குகளை அதிகரித்து வருகிறார்.

மாறன் சகோதரர்கள் இதுவரை 300 கோடி வரை நிறுவனத்தில் நிதிச்சுமையை குறைக்க உதவி உள்ளார்கள். அனாலும் 1500 கோடி வரை நிதி தேவைப்படுகிறது.

அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் இந்த பங்கில் நுழையலாம். ஆனாலும் அடுத்த காலாண்டு அறிக்கையை பார்த்த பிறகு முதலீடு செய்வது இன்னும் பாதுகாப்பானதாக அமையும்.

தொடர்புடைய கட்டுரைகள்:

English Summary:
Spice Jet's financial statement is showing negative liability in the balance sheet. High discounts, Over growth plans made huge impact on negative profits. Still investors are hoping on promoter's plan of capital infusion.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக