வியாழன், 18 டிசம்பர், 2014

GST வரியால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?

கடந்த சில நாட்களாக வீழ்ச்சியில் இருந்த சந்தை நேற்று GST வரி விதிப்பிற்கு அமைச்சரவை அனுமதி அளித்தது என்ற செய்தியால் நல்ல உயர்வை சந்தித்தது. GST என்பதன் விரிவாக்கம் Goods and Services Tax.


இவ்வளவு தூரம் நிறுவனங்கள் GST வரியை வரவேற்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.

இதுவரை கடைகளில் விற்கப்பட்ட பொருட்களின் பாக்கெட்களில் பார்த்தால் MRP(Maximum Retail Price) என்று ஒரு விலை குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த விலைக்கு மேல் எந்த கடைக்காரரும் விற்கக்கூடாது என்பது விதி.

Goods and Services Tax


இந்த MRP Price என்பது வரிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு வரி விகிதங்களை பின்பற்றுவதால் MRP Price மாநிலங்களுக்கிடையே வெவ்வேறாகவே இருக்கும்.

ஆனால் புதிதாக கொண்டு வரப்படும் GST வரி இந்த வித்தியாசங்களை நீக்குகிறது. இனி இந்தியா முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை அமலுக்கு வரும்.

இதற்கு முன் ஒவ்வொரு உற்பத்திக்கும் ஓவொரு இடத்திலும் கை மாறுவதற்கும் தனித்தனியாக வரி விதிக்கப்பட்டு இருந்தது. இனி வரி நுகர்வோர் முனையில் மட்டும் வசூலிக்கப்படும்.

அதாவது கார் உற்பத்தி செய்யப்படும் போது காரின் பாகங்கள் உற்பத்தி செய்யப்படும் போது ஒரு வரி, அசெம்பிள் செய்யும் போது ஒரு வரி, விற்கும் போது ஒரு வரி என்று பல மட்டங்களில் வரிகள் வசூலிக்கப்பட்டு வந்தது.

இனி காரினை விற்கும் போது மட்டுமே வரி வசூலிக்கப்படும்.

இதனால் நுகர்வோர்களுக்கு தேவையற்ற மறைமுக வரிகள் நீக்கப்படுவதால் பொருட்களின் விலை குறையும்.

நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு வரி விதிப்பிற்கு தேவையான காகித வேலைகள் கணிசமாக குறையும். தேவையற்ற நிர்வாக செலவுகள் குறையும். மறைமுக வரிகள் குறைந்து பொருட்கள் விலை குறையும் போது விற்பனை அதிகரிக்கும்.

இதனால் இந்திய GDP 1 முதல் 2 சதவீத அளவு அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ளார்கள். வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் அதிகமாவதற்கு GST வரியும் ஒரு காரணமாக இருக்கும்.

Goods and Services Tax
பல முனை வரி விதிப்பு நீங்குகிறது 
ஒரே வரி விதிப்பு என்றாலும் இந்தியா பிரேசில் நாட்டில் பின்பற்றப்படும் Dual GST Tax என்ற முறையை தான் பின்பற்ற போகிறது, அதாவது பகுதி வரி வருமானம் மத்திய அரசுக்கும் மீதி பகுதி வருமானம் மாநில அரசுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

இங்கு தான் பிரச்சினை ஏற்படுகிறது.

GST வரி நுகர்வோர்களிடம் இருந்து வசூலிக்கப்படுவதால் எந்த மாநிலம் அதிக செலவு செய்கிறதோ அங்கு அதிக வரி வசூல் இருக்கும். அதே நேரத்தில் பொருட்களை உற்பத்தி செய்து மற்ற மாநிலங்களில் ஏற்றுமதி விற்பனை செய்யும் மாநிலங்களுக்கு வரி பலன்கள் கிடைக்காது.

இதே போன்ற தொழில் துறை மாநிலமான தமிழ்நாட்டிற்கு இதனால் பாதிப்பு ஏற்படும். தமிழக அரசிற்கு அதிக வருமானம் வர வேண்டும் நாம் தான் அதிக செலவு செய்ய வேண்டும்.

GST வரிக்கென்று அமைக்கப்பட்ட கமிட்டி GST வரியை 12%க்குள் வைக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் மத்திய அரசு மட்டும் தன் பங்காக 12% வரியை கேட்கிறது. மாநில அரசுகளுக்கும் குறைந்தது 12% கொடுத்தாக வேண்டும்.

அப்படி என்றால், 24%க்கும் மேல் வரி வந்தால் GST காரணமாக வந்த கொண்டாட்டங்கள் குறைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.  அரசுக்கு வரியின் மீது இருக்கும் போதை தீராத வரை இந்த பிரச்சினையும் தீரப்போவதில்லை.

English Summary:
Goods and Services Tax in India got approval from ministry. The uniform tax saves administrative and paper charges for company. Cost saving for consumers. GDP may benefit 1~2% from GST Tax.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக