தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் வருடத்திற்கு மூன்று போகம் நெல் விளையுமாம்.. அதற்கு அங்குள்ள வண்டல் மண்ணும் ஒரு காரணம் என்று கேள்வி பட்டிருக்கிறோம்.
தற்போது அந்த பகுதியை வளர்ச்சி என்ற பெயரில் கார்பரேட் நிறுவனங்கள் சீரழிக்க முனைந்துள்ளது வருத்தமான செயலாக மாறி உள்ளது.
தஞ்சாவூர் பகுதியில் நிலத்தடியில் அதிக அளவு நிலக்கரி அடிப்பகுதியில் உள்ளதாகவும் அவற்றிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயு பாறை இடுக்குகளில் இடைப்பட்டு உள்ளதாகவும் கண்டறிந்துள்ளார்கள். இந்த மீத்தேன் வாயு எரிவாயுவாக பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
/
இந்த மீத்தேன் வாயுவை எடுப்பதற்கு Great Eastern Energy Corporation என்ற நிறுவனம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்றுள்ளது.
திமுக அரசில் இந்த திட்டம் தடையில்லா சான்றிதழ் பெற்றது. ஆனால் தற்போது எதிர்ப்பு காரணமாக தமிழ்நாடு அரசின் தற்காலிக தடையில் இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இது தற்காலிக தடை என்பதால் என்றும் மீண்டும் தொடங்கலாம். அநேகமாக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் உயிர் பெற வாய்ப்பு உள்ளது.
இந்த வாயுவை எடுப்பதற்கு முதலில் 1500 அடி வரை உள்ள நிலத்தடி நன்னீரை வெளியேற்றி விடுவார்கள் அதன் பிறகு தான் வாயுவை எடுக்க முடியும். இதனால் அந்த நீர் வீணாகி வறண்ட பூமியாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் இடப்படும் துளைகள் வழியாக கடல் நீர் உட்புகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.. மீத்தேன் வாயு எப்படி எடுக்கப்படுகிறது என்பதை தமிழில் நன்றாக சொல்லி உள்ளார்கள். அதனால் ஏற்படும் பாதிப்புகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலத்தில் இந்த திட்டம் அவசியமா என்று அரசு ஏன் சிந்திக்க்காமல் உள்ளது என்று தெரியவில்லை?
துவக்கத்தில் 1,66,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் இந்த திட்டத்திற்காக கையகப்படுத்த மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விரிவாக்கப்படும் சூழ்நிலையில் தஞ்சையில் விவசாயத்தைக் காண்பது அரிதான சூழ்நிலை வந்தாலும் வியப்பில்லை.
லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள GEECL நிறுவனம் விரைவில் இந்திய பங்குச்சந்தையிலும் IPOவாக வர திட்டமிட்டுள்ளது.
ஒரு முதலீட்டாளனாக, தமிழனாக நமது எதிர்ப்பைக் காட்டும் வகையில் Great Eastern Energy என்ற பங்கை தவிர்க்குமாறு முதலீடு தளத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
பங்குச்சந்தை வழியாகவும் நமது எதிர்ப்பைக் காட்டுவது போராடும் மக்களுக்கு நம்மால் முடிந்த ஒரு சிறு உதவியாக இருக்கும்..
பார்க்க:
பங்குச்சந்தையில் சமூக அக்கறையுடன் தவிர்க்க வேண்டிய பங்குகள்
வளர்ச்சி என்பதை ஏற்கனவே இருக்கும் வளங்களை அழித்து தான் பெற வேண்டும் என்பது அறிவான செயலாக இருக்காது. எரிபொருளை விட உணவு என்பது அதிமுக்கியமே!
English Summary:
Great Eastern Energy Corporation is planning to explore methane from Tanjore Agricultural area where more coal found under deep ground. The project is making more worries among farmers.
GEECL is planning to come as Initial Public Offer in Indian Market.
தொடர்புடைய பதிவுகள்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக