நாம் இதற்கு முன்னரே வேதாந்தா குழுமம் நடத்தும் Cairn நிறுவனத்தின் செயல்பாடுகளை விமர்சித்து இருந்தோம்.
அதாவது Cairn நிறுவனத்தில் உபரியாக உள்ள பணத்தை எடுத்து மற்றொரு தமது துணை நிறுவனத்திடம் மிகக்குறைந்த வட்டியில் கடன் கொடுத்து இருந்தாரகள்.
பார்க்க: நேர்மையில்லாத CAIRN பங்கை என்ன செய்யலாம்?
நேற்று அடுத்து ஒரு வெளிப்படையான ஏமாற்று வேலையை ஆரம்பித்துள்ளார்கள்.
வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனங்களான Cairn, Hindustan Zinc என்ற இரண்டு நிறுவனங்களையும் நஷ்டத்தில் இயங்கும் மற்றொரு நிறுவனமான Sesa Sterlite என்ற நிறுவனத்துடன் இணைக்கப் போகிறார்களாம்.
இதனை ஓர் சாதாரண இணைப்பாக கருத முடியாது. இதற்கு பின் உள்ள உள்நோக்கம் ஒரு அப்பட்டமான ஏமாற்று வேலை என்றும் கூறலாம்.
Cairn, Hindustan Zinc என்ற இரண்டு நிறுவனங்களுமே லாபத்தில் இயங்குபவை. இது போக அதிகப்படியான உபரி பணத்தையும் கையில் வைத்து இருப்பவை.
இந்த நிறுவனங்களை நஷ்டத்தில் இயங்கும் Sesa Sterlite உடன் இணைக்கும் போது Sesaவின் 30,000 கோடி கடன் தொகை மற்ற இரு நிறுவனங்களின் உபரி பணத்தில் இருந்து எடுத்து சமநிலைப்படுத்தப்படுகிறது. Cairn, Hindustan Zinc போன்ற நிறுவனங்களுக்கு இந்த இணைப்பால் எந்த பலனும் கிடையாது.
Cairn, Hindustan Zync போன்ற நிறுவனங்களின் மொத்த பங்குகளும் வேதாந்தாவிடம் இருந்தால் நமக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. அவர்கள் விருப்பதிற்கேற்றவாறு செய்கிறார்கள் என்று விட்டு விடலாம்.
ஆனால் பங்குச்சந்தையில் வந்த பிறகு சிறும்பான்மையாக முதலீடு செய்து இருக்கும் சிறு முதலீட்டாளர்களுக்கு இவர்கள் என்ன பதில் செல்ல போகிறார்கள்? கிட்டத்தட்ட பாதி பங்குகள் சிறு முதலீட்டாளர்களிடமே உள்ளன.
சிறு முதலீட்டாளர்கள் விருப்பம் இல்லாமலே அவர்களது பணத்தை எடுத்து தங்கள் குடும்ப நிறுவனங்களை பாதுகாக்க முயல்வது ஒரு வெளிப்படையான ஏமாற்றுத் தன்மையே.
செபி இத்தகைய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தயங்கும் நிலை கூட ஏற்படலாம்.
இந்த தன்னிச்சையான முடிவுகள் காரணமாக நேற்று Cairn, Hindustan Zinc போன்ற நிறுவனங்களின் பங்குகள் 3%க்கும் மேல் சரிந்தன என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
சத்யம் பங்குச்சந்தை மோசடிக்கும் இதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பதையும் கவனிக்க.
வேதாந்தா குழும நிறுவனங்களை நாம் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
பார்க்க:
English Summary:
Cairn and Hindustan Zinc are planned to merge with Sesa Sterlite ahead of retail investor wishes.

சுனில் அகர்வால் - வேதாந்தா சூத்திரதாரி |

மீதி பங்குதாரர்களுக்கு யார் பதில் சொல்ல? |
செபி இத்தகைய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தயங்கும் நிலை கூட ஏற்படலாம்.
இந்த தன்னிச்சையான முடிவுகள் காரணமாக நேற்று Cairn, Hindustan Zinc போன்ற நிறுவனங்களின் பங்குகள் 3%க்கும் மேல் சரிந்தன என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
சத்யம் பங்குச்சந்தை மோசடிக்கும் இதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பதையும் கவனிக்க.
வேதாந்தா குழும நிறுவனங்களை நாம் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
பார்க்க:
- இந்திய ஐடி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை குறைத்த சத்யம் ஊழல்
- பங்குச்சந்தையில் சமூக அக்கறையுடன் தவிர்க்க வேண்டிய பங்குகள்
English Summary:
Cairn and Hindustan Zinc are planned to merge with Sesa Sterlite ahead of retail investor wishes.
அருமையான பதிவு. செபி செய்யாத வேலையை தாங்கள் செய்கறீர்கள். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு