வெள்ளி, 9 ஜனவரி, 2015

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இன்போசிஸ் நிதி முடிவுகள்

இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இன்போசிஸ் நிதி அறிக்கை வெளியானது. சந்தையில் கணிக்கப்பட்டதை விட நல்ல நிதி அறிக்கையை கொடுத்து இன்போசிஸ் ஆச்சர்யமளித்தது.


மொத்த வருமானம் இந்திய ரூபாயில் 7% அளவு அதிகரித்தது. அதே நேரத்தில் டாலர் வருமானம் 2% மட்டுமே அதிகரித்து உள்ளது. இது சந்தை எதிர்பார்ப்பை விட குறைவாகும்.



லாப விகிதம் (Operating Profit Margin) 65 Bps புள்ளிகள் அதிகரித்துள்ளது. இது நீண்ட கால நோக்கில் நல்ல நிலையாக பார்க்கப்படுகிறது.

பார்க்க: Basis Point: ஒரு எளிய விளக்கம்

நிகர லாபம் 5% அளவு அதிகரித்துள்ளது. இது சந்தை எதிர்பார்ப்பான 2% என்பதை விட கணிசமாக அதிகரித்து உள்ளது.

மொத்தத்தில் இந்த நிதி அறிக்கை இன்போசிஸ் நிறுவனத்திற்கு சாதகமான ஒன்றாக உள்ளது.

அவர்களிடம் இருக்கும் அதிகப்படியான பணத்தை செலவிடுவது பற்றியும் விரைவில் திட்டம் வெளியிடுவதாக சொல்லியுள்ளார்கள். அதனைப் பொறுத்தே இன்போசிஸ் நிறுவனத்தின் எதிர்கால திசையை கணிக்க முடியும்.

பார்க்க: மிதமிஞ்சிய பணத்தை வைத்துக் கொண்டு தள்ளாடும் இன்போசிஸ்

இன்னும் பணியாளர் விலகல் சதவீதம் 20% என்ற அளவில் அதிகமாகவே உள்ளது. அநேகமாக TCS நிறுவனத்தின் பனி நீக்கம் போன்ற செய்திகளால் இது கணிசமாக குறைய அதிகம் வாய்ப்புகள் உள்ளது.

அதனால் மென்பொருள் துறையில் இன்போசிஸ் பங்கில் முதலீடு செய்ய ஏதுவான காலம் கனிவதாக உணரலாம்.

தொடர்பான கட்டுரைகள்:

English Summary:
Infosys financial results are favor to company. Operating profit turns positively. Profit improves. Stock is doing well.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக