வியாழன், 15 ஜனவரி, 2015

ஜெட் ஏர்வேஸ் பங்குகள் அடமானத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 5000 கோடி அளவு உள்ளது. ஆனால் அதன் கடன் மதிப்பு 9000 கோடிக்கும் மேல் உள்ளது.
இந்த கடன் மீதான வட்டியைக் குறைப்பதற்காக நிறுவனர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நரேஷ் கோயல் தம்மிடம் இருக்கும் 51 சதவீத பங்குகளை அடமானம் வைத்து உள்ளார்.

இந்த அடமானம் முழுவதும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் இருந்து இந்த வருடம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தமது கடனின் ஒரு பகுதியை 1000 கோடி அளவு குறைத்து வந்துள்ளது என்பது இங்கு குறிப்பிட்டத்தக்கது.

இது மேலும் குறையில் கடன் மீதான வட்டி குறைந்து நிகர லாபத்தைக் கணிசமாக கூட்ட முடியும்,

அடமானத்தில் வைக்கபப்டும் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைவு என்பதால் இந்த பங்குகள் மீதான கடனும் தேவையில்லாமல் கட்டும் வட்டியைக் குறைக்க உதவும்.

பல காலாண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இந்த காலாண்டில் தான் 68 கோடி லாபம் சம்பாதித்து இருந்தது.

இதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைப் பொறுத்த வரை இது ஒரு நேர்மறை நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்திய விமான நிறுவனங்களில் உருப்படியாக இயங்கும் நிறுவனமாகவும்  ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பார்க்கலாம்.

கடனைக் கண்டு ஓடும் விஜய் மல்யாவை பார்க்கையில் தனது நிறுவனத்தை ரிஸ்க் எடுத்துக் காப்பாற்ற முயலும் நரேஷ் கோயல் ஜென்டில்மேனாகவே தெரிகிறார்.

பார்க்க:English Summary:
Jet Airways Founder Naresh Goyal pledges his entire stake in Jet to Punjab National Bank.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. சார் எனக்கு ஒரு டவுட். விஜய் மல்லையாவை பற்றி வலைதளங்களில் நிறைய குறைகூறுகிறார்கள். அதாவது அவருடைய kingfisher airways நிறைய நட்டத்தில் உள்ளது, அவரிடம் பணமா இல்லை அவரின் மதுபான தொழில் அமோகமாக உள்ளது, அதை பயன்படுத்த மாட்டேன் என்கிறார் என்று. தாங்களும் அவரை கடனை கண்டு ஓடுகிறார் என்கிறீர்கள். மாராக வேதானந்த குழுவில் நட்டத்தில் உள்ள sesa sterlite ஐ லாபத்தில் உள்ள carin போன்ற நிறுவனத்தை இனைத்து ஒரு நிறுவனத்தை காப்பாற்றுகிறார். இதில் எது சரி. கடனை கண்டு ஓடுபவரா? அல்லது கடனை சமாளிப்பவரா?

    பதிலளிநீக்கு