திங்கள், 5 ஜனவரி, 2015

காரணமில்லாமல் கூடிக் குறையும் பங்குச்சந்தை

நேற்று ஒரு கட்டத்தில் 350 புள்ளிகள் வரை கூடிய சென்செக்ஸ் பின்பு எதிர்மறையில் இறங்கி ஆச்சர்யமளித்தது.


கடந்த இரு வாரங்களாக எந்தவொரு பெரிய அரசியல் மாற்றங்கள் இல்லை. அரசு கொள்கைகளில் மாற்றமில்லை. நிறுவனங்களின் நிதி முடிவுகள் கூட வர ஆரம்பிக்கவில்லை.



ஆனாலும் சந்தையில் ஒன்று, இரண்டு சதவீத மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை பார்க்கும் போது குறுகிய கால பங்கு வர்த்தகம் செய்பவர்கள் புகுந்து விளையாடுபவதை அனுமானிக்க முடிகிறது.

கடந்த வாரம் சொல்லியவாறு சந்தை 27,500 என்ற புள்ளிகளை மையமாக வைத்து அங்கும் இங்கும் அசைந்தாடும். ஆனால் பெரிய அளவில் மாற்றங்கள் வர வாய்ப்பில்லை என்றே நினைக்கிறோம்.

பார்க்க: உந்தும் காரணிகளுக்கு காத்திருக்கும் பங்குச்சந்தை

வேறு உலகக் காரணிகளில் மாற்றம் ஏற்படாத வரை இதே நிலை இந்த மாதம் முழுமைக்கும் தொடர்ந்தாலும் ஆச்சர்யமில்லை.

நீண்ட கால முதலீட்டாளர்களைப் பொறுத்த வரை குறையும் போது வாங்கிப் போடலாம். குறுகிய/தின வர்த்தகர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது. Speculators என்று சொல்லப்படும் செயற்கை மாற்றங்கள் செய்பவர்கள் நடமாற்றம் அதிகம் உள்ளது போல் தெரிகிறது.

அதே போல் மென்பொருள் நிறுவனங்களில் வரும் செய்திகளும் சாதகமாக இல்லை. அடுத்த இரண்டு வருடங்களுக்கு மென்பொருள் நிறுவனங்களில் லாப விகிதங்களில் மாற்றம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் அதற்கு பின் தேவையான அளவு நீண்ட கால தொலைநோக்கு இல்லாததால் மென்பொருள் துறை கீழே செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதையும் மறுக்க முடியவில்லை.

பார்க்க: லாபம் சரியாமலே TCS செய்யும் ஆட்குறைப்பு

இதனால் கொஞ்சம் கொஞ்சமாக போர்ட்போலியோவில் மென்பொருள் துறையின் சதவீத்த்தைக் குறைப்பது நல்லது. அல்லது Cloud computing உள்ளிட்ட மென்பொருள் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களில் முதலீடு செய்வது நல்லது.

ஆட்களின் தலைக்கேற்ப கட்டணம் வசூலிக்கும் Outsource நிறுவனங்களின் பாதையில் இன்னும் தெளிவு இல்லை.

எமது அடுத்த போர்ட்போலியோ ஜனவரி 10 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்புக்கு muthaleedu@gmail.com.

மேலும் விவரங்களுக்கு. இங்கு பார்க்க..

English Summary:
Indian share market is in speculators hand. Market is only suitable for short term traders. Time to reduce software companies.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக