நஷ்டத்தால் இயங்கும் நிறுவனங்களில் பணி நீக்கங்கள் என்பது தவிர்க்க முடியாது என்று சொல்லலாம். ஆனால் லாப விகிதத்தைக் கூட்டுவதற்கு கொத்து கொத்தாக பணியாளர்களை நீக்குவது கொடுமையானதே. இது தான் TCS நிறுவனத்தில் நடந்து வருகிறது.
இந்த மென்பொருள் நிறுவனங்கள் ஏன் இப்படி வேலை நீக்கம் செய்கின்றன என்று ஒரு முதலீட்டாளனாக நாம் பார்ப்போம்.
மென்பொருள் நிறுவனங்களை பொறுத்த வரை லாப விகிதம் என்பது மற்ற துறைகளை விட மிக அதிகம்.
உதாரணத்திற்கு 100 ரூபாய் மொத்த வருமானம் வந்தால் அதில் செலவு எல்லாம் போக 30 ரூபாய் லாபம் பெறுமாறு இது வரை பார்த்துக் கொண்டார்கள்.
சில ஆண்டுகள் முன்பு வரை உலக அளவில் இந்திய மென்பொருள் வல்லுனர்களுக்கு அவ்வளவு கணிசமான போட்டி இல்லாததால் இந்த 30% லாபம் என்பது நீண்ட காலமாக சாத்தியமாகவே இருந்து வந்தது.
தற்போது பிலிப்லைன்ஸ், விட்நாம், ரஷ்யா, பிரேசில், சீனா போன்ற நாடுகளில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் நம்மவர் அளவுக்கு திறமையை வளர்த்து விட்டன.
நமது ஐடி நிறுவனங்களை விட குறைந்த விலைக்கு வேலையை முடிக்கவும் வெளியவர்கள் ரெடியாக உள்ளார்கள்.
அதே நேரத்தில் ஆட்களை அனுப்பி தலைக்கு என்று கமிசன் தொகையைப் பெற்று வந்த நமது நிறுவனங்கள் அடுத்த கட்டத்திற்கு தயார் செய்யாமல் மெத்தனமாக இருந்து விட்டார்கள் என்றும் சொல்லலாம்.
தற்போது வேலையை முடி, அதற்கான காசை வாங்கு என்று காண்ட்ராக்ட் முறைக்கு உலகம் மாறும் போது கமிசன் தொகையில் வாழ்ந்து வந்த நமது ஐடி நிறுவனங்கள் திணறுகின்றன.
இன்னும் TCS நிறுவனத்தைப் பார்த்தால் 28% அளவு லாப விகிதத்தை வைத்துக் கொண்டு தான் உள்ளார்கள். ஆனால் இதே லாபம் இனி தொடருமா என்பதில் தான் பெருத்த சந்தேகம் வருகிறது.
அப்படி லாபம் குறையும் போது குறைவதால் ஏற்படும் பாதிப்பின் ஒரு சிறு பகுதியைக் கூட நமது ஐடி நிறுவனங்கள் ஏற்க தயார் இல்லை என்பது தான் வருத்ததிற்குரியது.
கடந்த வருடம் இன்போசிஸ் ஒவ்வொரு பணியாளர் மூலம் 31,20,000 ரூபாய் அளவு சம்பாதித்து உள்ளது. தற்போதைய நிதி அறிக்கையில் 31,45,000 ரூபாய் என்று கூடியுள்ளதே தவிர குறையவில்லை.
அதனால் கொள்ளை லாபத்தை இழக்க மனம் இல்லை. ஆனால் பணியாளர்களை இழக்க துணிந்து விட்டார்கள்.
ஐடி துறையில் வேலை பார்க்கும் நண்பர்கள் ஒன்றை முன்னெச்சரிக்கையாக கவனிக்க வேண்டும்.
அசீம் பிரேம்ஜி ஆன்லைன் வர்த்தகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். ஷிவ் நாடார் மருத்துவமனைகள் கட்ட ஆரம்பித்து விட்டார். இன்போசிஸ் நிறுவனர்கள் தங்கள் பங்குகளை விற்று விட்டு வெளியேறுகிறார்கள்.
இது எதுவுமே இயற்கையாக நடப்பது என்று சொல்ல முடியாது. வழி இல்லாத இடத்தில் நமக்கு என்ன வேலை என்று ஒதுங்குவதாக கூட எடுத்துக் கொள்ளலாம்.
இதனால் வேலை பார்ப்பவர்களும் மென்பொருள் துறையை மட்டும் நம்பினால் வேலைக்கு ஆகாது வேறு ஏதேனும் வருமானத்திற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்வதும் அவசியமாகிறது.
தொடர்புடைய கட்டுரைகள்:
English Summary:
TCS is doing Layoff to increase profit margin. Still the financials are good in Indian IT companies. But cost cutting is matter.

It's has to happen at some time, Because at certain period of time, some technology or sectors gets benefited and later the value migration takes place.
பதிலளிநீக்குEg: Basic wired telephony to Mobile technology.
Here in IT companies/ employees have fallen prey to "Boiling frog syndrome" not seeing what is happening, In technology domain the change can happen dramatically in a matter of months. As technology (infrastructure) is migrating towards Cloud, it's customers does not require human resources(manual work ) to maintain the infrastructure. As cloud comes into play it requires very little human attention and almost everything is automated. Obviously companies has to run for profit and they are forced to cut expense and for IT companies major expense is employee salary. :-(
They should have seen it in hindsight and offered to train human resources. But end result would be same as Supply is more than the demand.
IT துறைகளில் மட்டுமல்ல, அனைத்து துறைகளில் உள்ளவர்களும் ஒரு மாற்று ஏற்பாடுகளை எப்போதும் வைத்திருத்தல் நலம்.
பதிலளிநீக்குThanks Fasil for your comments!
பதிலளிநீக்குஆமாம் ராஜா! கருத்துக்கு நன்றி!
பதிலளிநீக்கு