வியாழன், 8 ஜனவரி, 2015

Spice Jet - கைவிட்ட மாறன், கைகொடுக்கும் அஜய் சிங்

Spice Jet நிறுவனம் கடுமையான நிதி சிக்கலில் இருப்பது அறிந்ததே. அடுத்த King Fisher போல் மாறி விடுமோ என்று கூட நினைக்கப்பட்டது.


ஆனாலும் Spice Jet உரிமையாளர் கலாநிதி மாறன்  மீது மல்லயாவை விட முதலீட்டாளர்கள் அதிக நம்பிக்கை கொண்டு இருந்தனர். செல்வ செழிப்பில்:) இருப்பதால் எப்படியாவது காப்பாற்றி விடுவார் என்று நம்பினர். ஆனால் அவரோ விமானத் துறையில் இருந்தே விலக விரும்புகிறார்.

பார்க்க: Spice Jet மீண்டும் எழுச்சியாக பறக்குமா?
இன்னொரு விமான நிறுவனமும் திவாலாகி விட்டால் நாட்டிற்கு கெட்ட பெயர் ஏற்படுமோ என்ற அச்சத்தில் விமான துறைக்கு எரிபொருளை கடனுக்கு வாங்கி விமானங்களை இயக்க அனுமதித்தது. அதற்கு 200 மில்லியன் டாலர்களை உத்தரவாதமாக கொடுக்குமாறு Spice Jet நிறுவனத்திடம் கேட்டு இருந்தது.

தற்போது Spice Jet நிறுவனத்தை நிறுவிய முதல் உரிமையாளர் அஜய் சிங் நிதி வசூலித்துக் கொடுக்கும் பணியில் இறங்கியுள்ளார். முதற்கட்டமாக 1200 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டு உள்ளது என்று தெரிகிறது.

இதன்படி, மாறனிடம் இருக்கும் பங்குகள் கை மாறும் என்று தெரிகிறது. இதனால் உரிமையாளரும் விரைவில் மாறலாம்.

English Summary:
Spice jet is getting funds for initial phase. The airline may move out of Maran's hand.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக