புதன், 7 ஜனவரி, 2015

கோடக் - இங்க் வங்கி இணைப்பிற்கு ஒப்புதல் கிடைத்தது

கோடக் மகிந்திரா வங்கியும் இங்க் வைஸ்யா வங்கியும் இணைவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தன. இதன் மூலம் கோடக் மகிந்திரா வங்கி இந்தியாவின் நான்காவது பெரிய வங்கியாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டது.


பார்க்க:  கோடக் மகிந்திரா வங்கியுடன் இங்க் வைஸ்யா இணைந்தது

ஆனாலும் பங்குதாரர்களின் ஒப்புதல்களை பெற்றால் தான் இணைப்பு முழுமையடையும் நிலை இருந்தது. கோடக் பங்குதாரர்களுக்கு ஆதாயம் என்பதால் அந்த பக்கத்தில் இருந்து பிரச்சினை ஏதும் வரவில்லை.ஆனால் இங்க் வைஸ்யாவின் பங்குதாரர்களுக்கு குறைவான விலை என்பது போன்ற மனக்குறைகள் இருந்தன. அதனால் இணைப்பு வெற்றி பெறுமா என்ற ஐயமும்  இருந்து வந்தது. இது போக இங்க் வைஸ்யாவின் ஊழியர்களும் வேலை போகி விடும் என்ற அச்சத்தில் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.


எப்படியோ இறுதியில் 90%க்கும் மேல் ஓட்டுகள் சாதகமாக கிடைத்துள்ளதாக இரு வங்கிகளும் இன்று அறிவித்துள்ளன. இதனால் பங்குச்சந்தையில் இரு பங்குகளும் நல்ல உயர்வை சந்தித்துள்ளன.

English Summary:
Kotak Bank and Ing Vysya Ban got shareholder's approval for their merger. Both the bank stock saw increases in Indian share market.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக